அத்தியாயம் – 19
சுகதேவ கோஸ்வாமியின் வருகை
பதம் 1.19.1
ஸுத உவாச
மஹீ-பதிஸ் து அத தத்-கர்ம கர்ஹ்யம்
விசிந்தயன் ஆத்மக்ருதம் ஸுதுர்மனா:
அஹோ மயா நீசம் அனார்ய-வத் கிருதம்
நிராகஸி ப்ரஹ்மணி கூடதேஜஸி

ஸுத உவாச-சூத கோஸ்வாமி கூறினார்; மஹீபதி:-அரசர்; து- ஆனால்; அத — இவ்வாறாக (வீடு திரும்பும்போது); தத்—அந்த: கர்ம— செயல்; கர்ஹ்யம்—வெறுக்கத்தக்க; விசிந்தயம்—இவ்வாறு எண்ணி; ஆத்ம-க்ருதம்-தன்னால் செய்யப்பட்ட; ஸுதுர்மனா:—மிகவும் சோர்வடைந்தார்; அஹோ-ஐயோ; மயா-என்னால்; நீசம் – மிகவும் வெறுக்கத்தக்க; அனார்ய-அநாகரிகமான; வத்-போல்; க்ருதம்- செய்த; நிராகஸி-குற்றமற்றவருக்கு; ப்ரஹ்மணி-ஒரு பிராமணருக்கு;
கூட-மனம் ஆழ்ந்த; தேஜஸி-சக்தி வாய்ந்தவருக்கு.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: வீடு திரும்பும்பொழுது, குற்றமற்றவரும், சக்தி வாய்ந்தவருமான பிராமணருக்கு எதிராக தாம் வெறுக்கத்தக்க அநாகரிகமான செயலைச் செய்துவிட்டதை உணர்ந்த அரசர், இதையெண்ணி வருந்தினார்.

பதம் 1.19.2
த்ருவம் ததோ மே க்ருத-தேவ-ஹேலனாத்
துரத்யயம் வ்யஸனம் நாதி-தீர்காத்
தத் அஸ்து காமம் ஹி அக-நிஷ்க்ருதாய மே
யதா ந குர்யாம் புனர் ஏவம் அத்தா

த்ருவம்- நிச்சயமாக; தத:- எனவே; மே- எனது; க்ருததேவ ஹேலனாத்—பகவானின் கட்டளைகளை மீறியதால்; துரத்யயம்— மிகவும் கடினமான; வ்யஸனம்- துன்பம்; ந-இல்லை; அதி- பெரிதும்; தீர்காத்—வெகு தூரத்தில்; தத்-அந்த; அஸ்து- நடக்கட்டும்; காமம்- முற்றிலும் விரும்புகிறேன்; ஹி- நிச்சயமாக; அக- பாவங்கள்; ந்ஷ்க்ருதாய-விடுபடுவதற்கு; மே- எனது; யதா- அதனால்; ந—ஒருபோதும் இல்லை; குர்யாம்—அதை நான் செய்வேன்; புன:-மீண்டும்; ஏவம்- நான் செய்திருப்பதுபோல்; அத்தா—நேரடியாக.

பரீட்சித்து மகாராஜன் எண்ணினார்: பகவானின் கட்டளைகளை மீறியதால், விரைவில் சில கஷ்டங்களை நான் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துன்பம் இப்பொழுதே வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். இதனால் நான் பாவத்திலிருந்து விடுபடக்கூடும் என்பதுடன், இத்தகைய ஒரு குற்றத்தை மீண்டும் செய்து விடாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் கூடும்.

பதம் 1.19.3
அத்யைவ ராஜ்யம்பலம் ருத்த-கோசம்
ப்ரகோபித-ப்ரஹ்ம-குலானலோ மே
தஹது அபத்ரஸ்ய புனர் ந மே ‘பூத்
பாபீயஸி தீர் த்விஜ தேவ-கோப்ய:

அத்ய —இன்று; ஏவ- இதே ; ராஜ்யம்-இராஜ்ஜியம் ; பலம்ருத்த- பலமும், செல்வமும்; கோசம்- கஜானா; ப்ரகோபித-மூட்டப்பட்ட; ப்ரஹ்மகுல -பிராமண சமூகத்தால்; அனல- தீ; மே தஹது-என்னை அது எரித்து விடட்டும்; அபத்ரஸ்ய-அமங்களம் ; புன:- மீண்டும்; ந-இல்லை; மே-எனக்கு; அபூத்-நடக்கும்; பாபீயஸீ-பாவ; தீ- புத்தி; த்விஜ-பிராமணர்கள்; தேவ-பரம புருஷர்; கோப்ய- மற்றும் பசுக்கள்.

பிராமண பண்பாட்டையும், தெய்வீக உணர்வையும் மற்றும் பசு பராமரிப்பையும் அலட்சியம் செய்ததால் நான் மரியாதையற்றவனும், பாவியுமாவேன். எனவே எனது இராஜ்ஜியமும், பலமும், செல்வங்களும் பிராமணனின் கோபத்திற்கு உடனே இரையாகட்டும். இதனால் எதிர்காலத்திலாவது இத்தகைய அமங்களமான மனோபாவத்தினால் நான் வழிநடத்தப்படாமல் இருப்பேனாக.

பதம் 1.19.4
ஸ சிந்தயன் இத்தம் அதாஸ்ருணோத் யதா
முனே: ஸுதோக்தோ நிர்ருதிஸ் தக்ஷகாக்ய:
ஸ ஸாது மேனே ந சிரேண தக்ஷகா
நலம் ப்ரஸக்தஸ்ய விரக்திகாரணம்

ஸ—அவர், அரசர்; சிந்தயன்-சிந்தித்த ; இத்தம்-இப்படி; அத- இப்பொழுது; அஸ்ருணோத்- கேள்விப்பட்டார்; யதா — போல்; முனே:- முனிவரின்; ஸுத-உத்த-மகனால் கூறப்பட்ட; நிர்ருதி- மரணம்; தக்ஷக-ஆக்ய-சர்ப்பராஜனோடு தொடர்புடைய; ஸ -அவர் (அரசர்); ஸாது—நன்கு; மேனே- ஏற்றுக்கொண்டார்;
ந-இல்லை; சிரேண—அதிக நேரம்; தக்ஷக-சர்ப்ப ராஜன்; அனலம்- தீ; ப்ரஸக்தஸ்ய—அளவுக்கதிகமான பற்று கொண்டவருக்கு; விரக்தி- விரக்திக்கு; காரணம்—காரணம்.

அரசர் இப்படி வருந்திக் கொண்டிருக்கும் பொழுது, முனி புத்திரனுடைய சாபத்தின்படி, சர்ப்பராஜனின் கடியால் விளையப்போகும் தமது திடீர் மரணத்தைப் பற்றிய செய்தியை அரசர் பெற்றார். தாம் உலகைத் துறந்து விடுவதற்கு இதுவே காரணமாக இருக்கப் போகிறது என்பதால், இந்த நற்செய்தியை அரசர் வரவேற்றார்.

பதம் 1.19.5
அதோ விஹாயேமம் அமும் ச லோகம்
விமர்சிதௌ ஹேயதயா புரஸ்தாத்
க்ருஷ்ணாங்ரி-ஸேவாம் அதிமன்யமான
உபாவிசத் ப்ராயம் அமர்த்ய-நத்யாம்

அதோ- இவ்வாறு; விஹாய-கைவிட்டு ; இமம்-இந்த; அமும்— மற்றும் அடுத்த;
கூ-கூட; லோகம்- உலகங்கள்; விமர்சிதௌ- அனைத்தும் முடிவு செய்யப்பட்டு; ஹேயதயா- தாழ்ந்தவை என்ற காரணத்தால்; புரஸ்தாத்-இங்கு முன்பே ; க்ருஷ்ண-அங்ரி-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்கள்; ஸேவாம்- உன்னத அன்புத் தொண்டு; அதிமன்யமான—பெறற்கரிய பேறைப் பற்றி நினைப்பவர்; உபாவிசத்-உறுதியாக அமர்ந்தார்; ப்ராயம்- உபவாசம் இருக்க; அமர்த்ய-நத்யாம்-தெய்வீகமான நதிக் கரையில் (கங்கை அல்லது யமுனை).

ஸ்ரீ கிருஷ்ணருக்குச் செய்யும் உன்னத அன்புத் தொண்டு, மற்றெல்லா முறைகளுக்கும் மேலான கிடைத்தற்கரிய பேறு என்பதால், பரீட்சித்து மகாராஜன் தம் மனதை கிருஷ்ண உணர்வில் ஒருமுனைப்படுத்த உறுதிகொண்டு கங்கைக் கரையில் அமர்ந்தார்.

பதம் 1.19.6
யா வை லஸச்-ச்ரீதுளஸீ-விமிஸ்ர
க்ருஷ்ணாங்ரி-ரேணு-அப்யதிகாம்பு-நேத்ரீ
புனாதி லோகான் உபயத்ர ஸேசான்
கஸ் தாம் ந ஸேவேத மரிஷ்யமாண:

யா – எந்த நதி; வை- எப்பொழுதும்; லஸத்-உடன் மிதக்கிறதோ; ஸ்ரீதுளஸீ- துளசி இலைகள்; விமிஸ்ர- கலந்த; க்ருஷ்ண-அங்ரி- பகவான்ஸ்ரீகிருஷ்ணரின் தாமரைப் பாதங்கள்; ரேணு-தூசி; அப்யதிக- மங்களகரமான; அம்பு-நீர்; நேத்ரீ- ஏந்தி வருவது; புனாதி- புனிதப்படுத்துகிறது; லோகான்-கிரகங்கள்; உபயத்ர—மேலும் கீழும் அல்லது உள்ளும் புறமும்; ஸ-ஈசான்—சிவபெருமானுடன்; க- வேறு யார்; தாம்—அந்த நதியை; ந-மாட்டார்; ஸேவேத-வழிபட ; மரிஷ்யமாண:-எந்த நொடியிலும் மரணமடையப் போகும் ஒருவர்.

கங்கை நதி பகவானின் தாமரைப் பாத தூசிகளுடனும், துளசி இலைகளுடனும் கலந்த மிகவும் மங்களகரமான நீரை ஏந்திச் செல்கிறது. எனவே அந்நீர் மூவுலகங்களின் உள்ளும், புறமும் மட்டுமல்லாமல் சிவபெருமானையும் மற்ற தேவர்களையும் கூட புனிதப்படுத்துகிறது. ஆகையால் இறக்கப்போகும் அனைவரும் இந்த நதியைப் புகலிடம் கொள்ள வேண்டும்.

பதம் 1.19.7
இதி வ்யவச்சித்ய ஸ பாண்டவேய:
ப்ராயோபவேசம் ப்ரதி விஷ்ணு-பத்யாம்
ததெள முகுந்தாங்ரிம் அனன்ய-பாவோ
முனி-வ்ரதோ முக்த-ஸமஸ்த-ஸங்க:

இதி-இவ்வாறு; வ்யவச்சித்ய- முடிவு செய்து; ஸ—அரசர்; பாண்டவேய:-தகுதியுள்ள பாண்டவ குலத்தவர்; ப்ராய- உபவேசம் இறக்கும்வரை உபவாசம் இருப்பதற்காக ; ப்ரதி- நோக்கி; விஷ்ணுவே பத்யாம்- (பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களிலிருந்து வெளிப்படும்) கங்கைக் கரையில்; ததெள- தம்மையே ஒப்படைத்தார்; முகுந்த-அங்ரிம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில்; அனன்ய-வேறு எண்ணமின்றி; பாவ:- எண்ணம்; முனி-வ்ரத: முனிவருக்குரிய விரதத்துடன்; முக்த-அதிலிருந்து முக்தியடைந்தார்; ஸமஸ்த- எல்லா வகையான; ஸங்க:- உறவு.

இவ்வாறாக, தகுதியுள்ள பாண்டவ குலத்தவரான அரசர், யாரொருவரால் மட்டுமே பகவான் முக்தியை அளிக்க முடியுமோ, அந்த ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தம்மையே ஒப்படைத்து, இறக்கும்வரை உபவாசம் இருக்கத் தீர்மானித்து, கங்கைக் கரையில் அமர்ந்தார். இவ்வாறு முனி விரதத்தை ஏற்ற அவர் எல்லா உறவுகளிலிருந்தும், பற்றுக்களிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டார்.

பதம் 1.19.8
தத்ரோபஜம்முர் புவனம் புனானா
மஹானுபாவா முனய: ஸ-சிஷ்யா:
ப்ராயேண தீர்தாபிகமாபதேசை:
ஸ்வயம் ஹி தீர்தானி புனந்தி ஸந்த:

தத்ர—அங்கு; உபஜக்மு:-வந்தனர்; புவனம்—பிரபஞ்சம்; புனானா- புனிதப்படுத்தக்கூடியவர்கள்; மஹா-அனுபாவா—சிறந்த மகான்கள்; முனய:- முனிவர்கள்; ஸ-சிஷ்யா:-அவர்களது சிஷ்யர்களுடன்; ப்ராயேண—கிட்டத்தட்ட; தீர்த—தீர்த்த யாத்திரை ஸ்தலம்; அபிகம் பிரயாணம்; அபதேசை: சாக்குப்போக்கில்; ஸ்வயம்-சுயமாக; ஹி நிச்சயமாக; தீர்தானி—தீர்த்த யாத்திரை ஸ்தலங்கள் அனைத்தையும்; புனந்தி—புனிதப்படுத்துகின்றனர்; ஸந்த:-முனிவர்கள்.

அப்போது சீடர்களால் சூழப்பட்ட மகான்களும், தங்களது வரவால் தீர்த்தங்களையும் புனிதப்படுத்தக்கூடிய முனிவர்களும், யாத்திரீகர்கள் என்ற சாக்கில் அங்கு வந்து சேர்ந்தனர்.

பதங்கள் 1.19.9 – 1.19.10
அத்ரிர் வஸிஷ்டஸ் ச்யவன: சரத்வான்
அரிஷ்டனேமிர் ப்ருகுர் அங்கிராஸ் ச
பராசரோ காதி-ஸுதோ ‘த ராம
உதத்ய இந்தரப்ரமதேத்மவாஹௌ

மேதாதிதிர் தேவல ஆரிஷ்டிஷேணோ
பாரத்வாஜோ கௌதம: பிப்பலாத:
மைத்ரேய ஔர்வ: கவஷ: கும்பயோனிர்
த்வைபாயனோ பகவான் நாரதஸ் ச

அத்ரி முதல் நாரதர்-வரை-பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதி களிலிருந்து அங்கு வந்து சேர்ந்த வெவ்வேறு முனிவர்களின் பெயர்கள் இதில் அடங்கும்.

பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் பின்வரும் மாமுனிவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்: அத்ரி, சவனர், சரத்வான், அரிஷ்டனேமி, பிருகு, வஸிஷ்டர், பராசரர், விஸ்வாமித்திரர், அங்கிரர், பரசுராமர், உதத்யர், இந்தரபிரமதர், இத்மவாஹு,மேதாதிதி, தேவலர், ஆர்ஷ்டிஷேணர், பாரத்வாஜர், கௌதமர், பிப்பலாதர், மைத்ரேயர், ஒளர்வர், கவஷர், கும்பயோனி, துவைபாயனர் மற்றும் மஹாபுருஷரான நாரதர்.

பதம் 1.19.11
அன்யே ச தேவர்ஷி-ப்ரஹ்மர்ஷி-வர்யா
ராஜர்ஷி-வர்யா அருணாதயஸ் ச
நானார்ஷேய-ப்ரவரான் ஸமேதான்
அப்யர்ச்ய ராஜா சிரஸா வவந்தே

அன்யே—மற்ற பலர்; ச-கூட; ப்ரஹ்மர்ஷி-பிரம்மரிஷிகள்; வர்யா-மிகவுயர்ந்த; ராஜர்ஷி-வர்யா மிகச்சிறந்த ராஜரிஷிகள்; தேவர்ஷி-தேவரிஷிகள்; அருண-ஆதய:-ராஜரிஷிகளில் விசேஷ அந்தஸ்தைச் சேர்ந்தவர்கள்; ச -மேலும்; நானா- மற்றும் பலர்; அர்ஷேய-ப்ரவரான்—முனிவர் வம்சங்களிலேயே முதன்மையான; விசேஷ ஸமேதான்—ஒன்று கூடினர்; அப்யர்ச்ய—வழிபடுவதன் மூலம்; ராஜா- பேரரசர்; சிரஸா—சிரம்தாழ்த்தி வணங்கி; வவந்தே-வரவேற்றார்.

வெவ்வேறு முனிவர்களின் வம்சங்களைச் மற்றும் பலதேவ ராஜரிஷிகளும் மற்றும் அருணாதயர்கள் எனப்படும் அரச விசேஷ பிரிவைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடியிருந்தனர். அவர்களனைவரையும், அவர் சிரம்தாழ்த்தி வணங்கி, நன்கு வரவேற்றார்.

பதம் 1.19.12
ஸுகோபவிஷ்டேஷு அத தேஷு பூய:
க்ருத-ப்ரணாம: ஸ்வ-சிகீர்ஷிதம் யத்
விஜ்ஞாபயாம் ஆஸ விவிக்தசேதா
உபஸ்திதோ ‘க்ரே ‘பிக்ருஹீத-பாணி:

ஸுக-மகிழ்ச்சியுடன்; உபவிஷ்டேஷு-அனைவரும் அமர்ந்தனர். அத-அதன்பின்; தேஷு-அவர்களிடம் (கூடியிருப்பவர்கள்); பூய- மீண்டும்; க்ருத-ப்ரணாம:-வணங்கியபின்; ஸ்வ-அவரது சொந்த; சிகீர்ஷிதம் – உபவாசமிருக்கும் முடிவை; யத்-யார்; விஜ்ஞாபயாம் ஆஸ்- தாழ்மையுடன் தெரிவித்தார்; விவிக்த-சேதா- உலக விவகாரங்களிலிருந்து மனதைப் பிரித்தவர்; உபஸ்தித- இருந்ததால்; அக்ரே-அவர்கள் முன்; அபிக்ருஹீத-பாணி:-கூப்பிய கரங்களுடன் அடக்கமாக.

ரிஷிகளும், மற்றனைவரும் சுகமாக அமர்ந்தபின், கூப்பிய கரங்களுடன் அடக்கமாக அவர்கள் முன் நின்றிருந்த அரசர், இறக்கும்வரை உபவாசம் இருப்பதெனும் தமது முடிவை அவர்களிடம் கூறினார்.

பதம் 1.19.13
ராஜோவாச
அஹோ வயம் தன்யதமா ந்ருபாணாம்
மஹத்தமானுக்ரஹணீய-சீலா:
ராஜ்னாம் குலம் ப்ராஹ்மண்-பாத-சௌசாத்
தூராத் விஸ்குஷ்டம் பத கர்ஹ்யகர்ம

ராஜ உவாச-பாக்கியசாலியான அரசர் கூறினார்; அஹோ-ஐயோ : வயம்—நாங்கள்; தன்ய-தமா-நன்றிமிக்கவர்கள்; ந்ருபானாம்- அரசர்களிலேயே ; மஹத்-தம-சிறந்த ஆத்மாக்களிலேயே ; அனுக்ர ஹணீய-சீலா:-உதவி பெற பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்; ராஜ்னாம்— அரச; குலம்-பரம்பரை; ப்ராஹ்மண-பாத பிராமணர்களின் பாதங்கள்; சௌசாத்- சுத்தம் செய்தபின் மிஞ்சும் கழிவு: தூராத்-தூரத்தில்; விஸ்ருஷ்டம்- எப்பொழுதும் விலக்கி வைக்கப்படும்; பத- காரணத்தால்; கர்ஹ்ய—வெறுத்து ஒதுக்கக்கூடிய; கர்ம-செயல்கள்.

பாக்கியசாலியான அரசர் கூறினார்: உண்மையில் சிறந்த ஆத்மாக்களிடமிருந்து உதவி பெறுவதில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அரசர்களில் நாங்கள் தான் மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாவோம். பொதுவாக அரசுரிமை விலக்கப்பட வேண்டிய கழிவு என்றும், அதை தூரத்தில் வைக்க வேண்டுமென்றும் நீங்கள் (முனிவர்கள்) கருதுகிறீர்கள்.

பதம் 1.19.14
தஸ்யைவ மே ‘கஸ்ய பராவரேசோ
வ்யாஸக்த-சித்தஸ்ய க்ருஹேஷு அபீக்ஷ்ணம்
நிர்வேதமூலோ த்விஜ-சாபரூபோ
யத்ர ப்ரஸக்தோ பயம் ஆசு தத்தே

தஸ்ய-அவரது; ஏவ-நிச்சயமாக; மே- என்னுடைய; அகஸ்ய— பாவங்களின்; பரா—உன்னதமான; அவர-பௌதிக; ஈச- ஆளுநரான பரமபுருஷர்; வ்யாஸக்த—அளவுக்கதிகமான பற்று; சித்தஸ்ய-மனதின்; க்ருஹேஷு-குடும்ப விவகாரத்திடம்; அபீக்ஷ்ணம்- எப்பொழுதும்; நிர்வேத-மூல துறவிற்குக் காரணம்; த்விஜ-சாப-பிராமணசாபத்தின்; ரூப:- வடிவில்; யத்ர—அப்பொழுது; ப்ரஸக்த:-பாதிக்கப்பட்டவர்; பயம்- பயத்தால்; ஆசு- மிக விரைவாக; தத்தே- நிகழ்ந்த.

ஜட மற்றும் ஆன்மீக உலகங்களை ஆள்பவரான பரம புருஷ பகவான், ஒரு பிராமணனுடைய சாபத்தின் வடிவில் அன்புடன் என்னை ஆட்கொண்டார். குடும்ப வாழ்வில் நான் அளவுக்கதிகமான பற்றுக் கொண்டிருந்ததால், பயத்தால் மட்டுமே என்னை நான் உலகிலிருந்து விடுவித்துக் கொள்வேன் என்ற முறையில், என்னைக் காப்பாற்றுவதற்காகவே பகவான் பயத்தின் வடிவில் என் முன் தோன்றியுள்ளார்.

பதம் 1.19.15
தம் மோபயாதம் ப்ரதியந்து விப்ரா
கங்கா ச தேவீ த்ருத-சித்தம் ஈசே
த்விஜோபஸ்ருஷ்ட: குஹகஸ் தக்ஷகோ வா
தசது அலம் காயத விஷ்ணு-காதா:

தம்—அக்காரணத்திற்காக; மா-என்னை; உபயாதம்- தஞ்சமடைந்து விட்டேன்; ப்ரதியந்து—என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்; விப்ர: பிராமணர்களே; கங்கா—கங்கைத் தாய்; கூ-கூட; தேவீ-பகவானின் நேரடிப் பிரதிநிதியான; த்ருத-எடுத்துக் கொண்டேன்; சித்தம்- இதயத்தில்; ஈசே-பகவானை; த்விஜ-உபஸ்ருஷ்ட-பிராமணனால் சிருஷ்டிக்கப்பட்ட; குஹக:-ஏதோ மந்திர வித்தை; தக்ஷக- சர்ப்பராஜன்; வா—அல்லது; தசது—அது கடிக்கட்டும்; அலம்- இக்கணமே; காயத- தயவுகூர்ந்து பாடிக்கொண்டே இருங்கள்; விஷ்ணு காதா—விஷ்ணுவின் செயல்களைப் பற்றிய வர்ணனைகளை.

பிராமணர்களே, நான் பகவானின் தாமரைப் பாதங்களை என் இதயத்தில் ஏந்திக்கொண்டு விட்டேன் என்பதால், என்னை பூரண சரணாகதியடைந்த ஆத்மாவாக ஏற்று அருள்புரியுங்கள். பகவானின் பிரதிநிதியான கங்கைத் தாயும் அவ்வாறே என்னை ஏற்றருளட்டும். பிராமணன் சிருஷ்டித்த சர்ப்பராஜனோ அல்லது வேறெந்த மாயா ஜாலப் பொருளோ உடனே என்னைக் கடிக்கட்டும். நீங்களனைவரும் பகவான் விஷ்ணுவின் செயல்களைப் பாடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை மட்டுமே நான் விரும்புகிறேன்.

பதம் 1.19.16
புனஸ் ச பூயாத் பகவதி அனந்தே
ரதி: ப்ரஸங்கஸ் ச தத்-ஆஸ்ரயேஷு
மஹத்ஸு யாம் யாம் உபயாமி ஸ்ருஷ்டிம்
மைத்ரிஅஸ்து ஸர்வத்ர நாமோ த்விஜேப்ய:

புன:-மீண்டும்; ச-மேலும்; பூயாத்-இருக்கட்டும்; பகவதி- பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்: அனந்தே- எல்லையற்ற ஆற்றல் கொண்டவர்; ரதி- கவர்ந்திழுக்கும் ; ப்ரஸங்க-சகவாசம்;ச-மேலும்; தத்—அவரது; ஆஸ்ரயேஷு அவரது பக்தர்களாக இருப்பவர்களுடன்; மஹத்ஸு-ஜட படைப்பினுள்; யாம்-யாம் எங்கெங்கும்; உபயாமி -நான் எடுத்தாலும்; ஸ்ருஷ்டிம்- என் பிறப்பை; மைத்ரீ -சிநேகமான உறவு; அஸ்து —இருக்கட்டும்; ஸர்வத்ர-எல்லா இடங்களிலும்; நம: என் வணக்கங்கள்; த்விஜேப்ய:-பிராமணர்களுக்கு.

மீண்டும் இந்த ஜடவுலகில் நான் பிறவியெடுக்க நேர்ந்தால், எல்லையற்றவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பூரண பற்றுதல் கொண்டவனாகவும், அவரது பக்தர்களின் சகவாசத்தைப் பெற்றவனாகவும், எல்லா ஜீவராசிகளிடமும் சிநேகமான உறவு கொண்டவனாகவும் இருக்க, பிராமணர்களான உங்களனைவரையும் மீண்டும் வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

பதம் 1.19.17
இதி ஸ்ம ராஜாத்யவஸாய-யுக்த:
ப்ராசீன-மூலேஷு குசேஷு தீர:
உதன்-முகோ தக்ஷிண-கூல ஆஸ்தே
ஸ-முத்ர – பத்னியா: ஸ்வ-ஸுத-ன்யஸ்த-பார:

இதி -இவ்வாறு; ஸ்ம-ஏற்கனவே கூறியபடி; ராஜா —அரசர்; அத்யவஸாய-விடாமுயற்சியுடன்; யுக்த:- ஈடுபட்டு; ப்ராசீன- கிழக்குத் திசை; மூலேஷு-வேருடன்; குசேஷு-தர்ப்பைப் புல் ஆசனத்தில்; தீர:-புலனடக்கத்துடன்; உதக்முக:-வடக்குப் புறமாக; தக்ஷிண—தெற்கு; கூலே-கரையில்; ஆஸ்தே-அமைந்துள்ள; ஸமுத்ர-சமுத்திர; பத்னியா:-பத்தினி (கங்கை); ஸ்வ-சொந்த; ஸுத-மகன்; ன்யஸ்த—ஒப்படைத்து; பார:-அரசாங்கச் சுமையை.

ஏற்கனவே கூறியபடி, பரீட்சித்து மகாராஜன் அரசாங்கச் சுமையை மகனிடம் ஒப்படைத்துவிட்டு, கங்கையின் தென்கரையில், தன் தர்ப்பை வேர்கள் கிழக்கு நோக்கி பரப்பப்பட்ட ஆசனத்தில் வடக்கு நோக்கியவராய், பூரண புலனடக்கத்துடன் அமர்ந்தார்.

பதம் 1.19.18
ஏவம் ச தஸ்மின் நர-தேவ-தேவே
ப்ராயோபவிஷ்டே திவி தேவ-ஸங்கா:
ப்ரசஸ்ய பூமெள வ்யகிரன் ப்ரஸுனைர்
முதா முஹுர் துந்துபயஸ் ச நேது:

ஏவம்-இவ்வாறு; ச-மேலும்; தஸ்மின்-அதில்; நர-தேவ தேவே-அரசரின் மீது; ப்ராய-உபவிஷ்டே-இறக்கும்வரை உபவாச மிருக்கும்; திவி-ஆகாயத்தில்; தேவ- தேவர்கள்; ஸங்கா:-அவர்கள் அனைவரும்; பரசஸ்ய—செய்கையைப் புகழ்ந்து; பூமௌ-பூமி மீது; வ்யகிரன்—தூவினார்கள்; ப்ரஸுனை:-மலர்களால்; முதா— மகிழ்ச்சியுடன்; முஹு:—தொடர்ச்சியாக; துந்துபய:-ஸ்வர்கலோக பேரிகைகளை; ச-கூட; நேது-அடித்தனர்.

இவ்வாறு இறக்கும்வரை உபவாசம் இருப்பதற்காக அமர்ந்துவிட்ட பரீட்சித்து மகாராஜனின் செயல்களைப் போற்றிய உயர் கிரகங்களைச் சேர்ந்த தேவர்கள் அனைவரும், பேரிகைகளை அடித்துக் கொண்டு பூமியின் மீது தொடர்ந்து பூமாரி பொழிந்தனர்.

பதம் 1.19.19
மஹர்ஷயோ வை ஸமுபாகதா யே
ப்ரசஸ்ய ஸாது இதி அனுமோதமானா:
ஊசு: ப்ரஜானுக்ரஹ-சீல-ஸாரா
யத் உத்தம-ஸ்லோக-குணாபிரூபம்

மஹர்ஷய:- மாமுனிவர்கள்; வை- காலக்கிரமத்தில்; ஸமு-பாகதா-அங்கு ஒன்று கூடினர்; யே—அவர்கள்; ப்ரசஸ்ய-என்று புகழ்ந்து; ஸாது-மிக நன்று; இதி-இவ்வாறு; அனுமோதமானா:— எல்லோரும் சம்மதம் தெரிவித்து ; ஊசு:-கூறினர்; ப்ரஜா- அனுக்ரஹ ஜீவராசிகளுக்கு நன்மை செய்யும்; சீல- ஸாரா-பகவானின் குணங்களைப் பெற்று சக்தி வாய்ந்தவர்களாக விளங்கிய; யத்- ஏனெனில்; உத்தம ஸ்லோக-உத்தமமான சுலோகங்களால் போற்றப்படுபவர்; குண அபிரூபம்—தெய்வீக குணங்களுக்கு இணையான அழகுவாய்ந்த.

அங்கு கூடியிருந்த மாமுனிவர்களும் கூட பரீட்சித்து மகாராஜனின் முடிவைப் புகழ்ந்து, “மிக நன்று” என்று கூறி, தங்களுடைய சம்மதத்தைத் தெரிவித்தனர். அவர்கள் பகவானின் எல்லா குணங்களையும் பெற்று சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால், இயற்கையாகவே பொதுமக்களுக்கு நன்மை செய்வதில் ஆர்வமுடையவர்களாக உள்ளனர். எனவே பகவானின் பக்தரான பரீட்சித்து மகாராஜனைக் கண்டு மிகவும் திருப்தியடைந்த அவர்கள் பின்வருமாறு கூறினர்.

பதம் 1.19.20
ந வா இதம் ராஜர்ஷி வர்ய-சித்ரம்
பவத்ஸு க்ருஷ்ணம் ஸமனுவ்ரதேஷு
யே ‘த்யாஸனம் ராஜ-கிரீட-ஜுஷ்டம்
ஸத்யோ ஜஹுர் பகவத்-பார்ஸ்வ-காமா:

ந- இல்லை; வா-இதைப் போல்; இதம்- இந்த: ராஜர்ஷி-ராஜரிஷி; வர்ய—தலைமையான; சித்ரம்- ஆச்சரியமாக உள்ளது; பவத்ஸு-உங்கள் அனைவரிலும்; கிருஷ்ணம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். ஸமனுவ்ரதேஷு—அதே வழியை உறுதியாகப் பின்பற்றியவர்களில்; யே-யார்; அத்யாஸனம்—அரியாசனத்தில் அமர்ந்திருந்த: ராஜ-கிரீட அரசர்களின் கிரீடம்; ஜுஷ்டம்—அலங்கரித்த; ஸத்ய:-உடனடியாக; ஜஹு:—துறந்தீர்; பகவத்-பரம புருஷரின்; பார்ஸ்வ-காமா-சகவாசத்தை அடைய விரும்பி.

(முனிவர்கள் கூறினர்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வழியை உறுதியாகப் பின்பற்றிய பாண்டவ வம்சத்தின் புனித மன்னர்களிலெல்லாம் நீர் தலைமையானவராவீர். பரம புருஷரின் நித்திய சகவாசத்தை அடையும் பொருட்டு, பல அரசர்களின் கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள உமது அரியாசனத்தையும் நீர் துறந்ததில் சிறிதும் ஆச்சரியமில்லை.

பதம் 1.19.21
ஸர்வே வயம் தாவத் இஹாஸ்மஹே ‘த
கலேவரம் யாவத் அஸௌ விஹாய
லோகம் பரம் விரஜஸ்கம் விசோகம்
யாஸ்யதி அயம் பாகவத-ப்ரதான:

ஸர்வே—அனைவரும்: வயம்-தாம்; தாவத்-அதுவரை; இஹ- இந்த இடத்திலேயே: ஆஸ்மஹே-இருப்போம்: அத-அதன்பின்; கலேவரம்–உடல்; யாவத்—அதுவரை: அஸௌ—அரசர்; விஹாய- துறந்து: லோகம் – லோகம்: பரம் – பரம் : விசோகம் -எல்லா களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட; விரஜஸ்கம்—பௌதிக வகையான துன்பங்களிலிருந்தும் முற்றிலும் விடுபட்ட; யாஸ்பதி- திரும்பிச் செல்கிறார்; அயம்—இந்த; பாகவத-பக்தர்; ப்ரநாள- மிகச்சிறந்த

பகவானின் பரலோகம் எல்லா வகையான பௌதிக களங்கங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் முற்றிலும் விடுபட்டதாகும். அப்பரலோகத்திற்கு, மிகச்சிறந்த பகவத் பக்தரான பரீட்சித்து மகாராஜன் திரும்பிச் செல்லும்வரை நாமனைவரும் இங்கேயே காத்திருப்போம்.

பதம் 1.19.22
ஆஸ்ருத்ய தத் ருஷி-கண-வச:பரீக்ஷித்
ஸமம் மது-ச்யுத் குரு சாவ்யலீகம்
ஆபாஷதைனான் அபினந்த்ய யுக்தான்
சுஸ்ரூஷமாணஸ் சரிதானி விஷ்ணோ:

ஆஸ்ருத்ய-கேட்டபின்; தத்—அந்த; ருஷிகண-ஒன்றுகூடிய முனிவர்கள்; வச-பேசுவதை; பரீக்ஷித்-பரீட்சித்து மகாராஜன்; ஸமம்- சமநிலையான; மது-ச்யுத்—கேட்க இனிமையாக இருந்தது; குரு-முக்கியமானதாகவும்; ச-மேலும்; அவ்யலீகம்- பூரண உண்மையாகவும்; ஆபாஷத—கூறினார்; ஏனான்—அவர்களனைவரும்; அபினந்த்ய—பாராட்டினார்; யுக்தான்—தகுந்தவாறு அளிக்கப்பட்ட; சுஸ்ரூஷமாண:-கேட்க ஆவல் கொண்டு; சரிதானி-செயல்கள்; விஷ்ணோ:-பரம புருஷர்.

மாமுனிவர்களால் பேசப்பட்டவை இனிமையாகவும், அனைத்தும் அர்த்தம் பொதிந்தவையாகவும் செவிக்கு மற்றும் பூரண உண்மை என்று உணரச் செய்யும் வகையில் தகுந்தவாறு அளிக்கப்பட்டவையாகவும் இருந்தன. எனவே அவர்கள் பேசியதைக் கேட்டு அவர்களைப் பாராட்டிய பரீட்சித்து மகாராஜன், பிறகு பரம புருஷரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி கேட்க ஆவல் கொண்டார்.

பதம் 1.19.23
ஸமாகதா: ஸர்வத ஏவ ஸர்வே
வேதா யதா மூர்தி-தராஸ் த்ரி-பீருஷ்டே
நேஹாத நாமுத்ர ச கஸ்சனார்த
ருதே பரானுக்ரஹம் ஆத்ம-சீலம்

ஸமாகதா:-கூடியிருக்கிறீர்கள்; ஸர்வத— எல்லாதிசைகளிலிருந்தும்; ஏவ-நிச்சயமாக; ஸர்வே-நீங்களனைவரும்; வேதா-பரம ஞானம்; யதா—போல்; மூர்தி-தரா:-சொரூபிகளை; த்ரி-பீருஷ்டே-(மேல், மத்திய மற்றும் கீழ் ஆகிய மூன்று கிரக அமைப்புகளுக்கும் மேலேயுள்ள) பிரம்மலோகத்தில்; ந -இல்லை; இஹ-இவ்வுலகில்; அத—அதன் பிறகு; ந-அல்லது; அமுத்ர-மற்ற உலகில்; ச-கூட; கஸ்சன -வேறெந்த; அர்த-ஆர்வம்; ருதே-அதைத் தவிர; பர-பிறருக்கு; அனுக்ரஹம்-நன்மை செய்வதில்; ஆத்ம-சீலம்—இயற்கையாகவே.

அரசர் கூறினார்: மாமுனிவர்களே, நீங்களனைவரும் பிரபஞ்சத்தின் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கூடியிருக்கிறீர்கள். நீங்கள் பல மூவுலகங்களுக்கும் மேலுள்ள (சத்தியலோக) கிரகத்தில் வாழும் வேத ஞான சொரூபிக்கு இணையாக விளங்குகிறீர்கள். பிறருக்கு இயற்கையாகவே நன்மை செய்வதைத் தவிர உங்களுக்கு இம்மையிலோ, மறுமையிலோ வேறு நோக்கமில்லை.

பதம் 1.19.24
ததஸ் ச வ: ப்ருச்யம் இமம் விப்ருச்சே
விஸ்ரப்ய விப்ரா இதி க்ருத்யதாயாம்
ஸர்வாத்மனா ம்ரியமாணைஸ் ச க்ருத்யம்
சுத்தம் ச தத்ராம்குசதாபியுக்தா:

தத:-அப்படியிருக்க; ச-மேலும்: வ:-உங்களை; ப்ருசியம்-கேட்கப்பட வேண்டியது: இமம்-இந்த; விப்ருச்சே-மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்; விஸ்ரப்ப-நம்பிக்கைக்குரிய; விப்ரா- பிராமணர்கள்; இதி—இவ்வாறு; க்ருத்யதாயாம்-பல்வேறு கடமைகளில்; ஸர்வஆத்மனா—ஒவ்வொருவராலும்; ம்ரியமாணை: குறிப்பாக மரணவாயிலில் இருப்பவர்கள்; ச-மேலும்; க்ருத்யம்- கடமையுணர்வுடன்; சுத்தம்-முற்றிலும் சரியான; ச-மேலும்; தத்ர- அவ்விஷயத்தில்; ஆம்குசத: நிதானித்த ஆழ்ந்த யோசனையால்; அபியுக்தா:-சற்றே பொருத்தமான.

நம்பத்தகுந்த பிராமணர்களே, உடனடியாக நான் செய்ய வேண்டிய கடமை என்னவென்று இப்பொழுது உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். எல்லாச் சூழ்நிலைகளிலும் இருக்கக்கூடியவர்களின், குறிப்பாக மரணவாயிலில் இருப்பவர்களின் பரிசுத்தமான கடமையைப் பற்றி, நிதானித்த ஆழ்ந்த யோசனைக்குப் பின் எனக்குக் கூறியருள வேண்டுகிறேன்.

பதம் 1.19.25
தத்ராபவத் பகவான் வ்யாஸ-புத்ரோ
யத்ருச்சயா காம் அடமானோ ‘நபேக்ஷ:
அலக்ஷ்ய-லிங்கோ நிஜ லாப-துஷ்டோ
வ்ருதஸ் ச பாலைர் அவதூத-வேஷ:

தத்ர— அங்கு; அபவத்-தோன்றினார்; பகவான்- சக்தி வாய்ந்த; வ்யாஸ-புத்ர— வியாசரின் புதல்வர், யத்ருச்சயா-விருப்பம் போல்; காம்பூமி: அடமான.—பிரயாணம் செய்யும்பொழுது; அளபேக்ஷ- விருப்பற்றவராக இருந்தார்; அலக்ஷ்ய-தோன்றாத: லிங்க: —அறிகுறிகள்; நிஜலாய-தன்னுணர்வு பெற்றவராக; துஷ்ட -திருப்தியடைந்தவராக; வ்ருத-சூழப்பட்டு; ச-மேலும்; பாலை-சிறுவர்களால்; அவதூத- பிறரால் புறக்கணிக்கப்பட்ட; வேஷ:-கோலத்தில்.

அச்சமயம், விருப்பற்றவராக பூமியில் சஞ்சரித்தவரும், ஆத்ம திருப்தியுடையவருமானசக்தி வாய்ந்த வியாசபுத்திரர் அங்கு தோன்றினார். வர்ணாஸ்ரம அடையாளங்கள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. பிறரால் புறக்கணிக்கப்பட்டவரைப் போல் உடையில்லாதவராக இருந்த அவர் பெண்களாலும், பாலர்களாலும் சூழப்பட்டிருந்தார்.

பதம் 1.19.26
தம் த்வியஷ்ட-வர்ஷம் ஸு-குமார-பாத
கரோரு-பாஹு-அம்ஸ-கபோல-காத்ரம்
சாரு-ஆயதாக்ஷோன்னஸு-துல்ய-கர்ண
ஸுப்ரு-ஆனனம் கம்பு-ஸுஜாத-கண்டம்

தம் – அவரை; த்வி-அஷ்ட-ஈரெட்டு; வர்ஷம்-ஆண்டுகள்: ஸு குமார- நேர்த்தியான; பாத-பாதங்கள்; கர-முன் கைகள்; ஊரு- தொடைகள்; பாஹு-கரங்கள்; அம்ஸ-தோள்கள்; கபோல-நெற்றி; காத்ரம்-உடல்; சாரு-அழகிய; ஆயத-அகன்ற; அக்ஷ—கண்கள்; உன்னஸ— எடுப்பான மூக்கு; துல்ய-அதேபோன்ற; கர்ண—காதுகள்; ஸுப்ரு-அழகிய புருவங்கள்; ஆனனம் — முகம்; கம்பு – சங்கு; ஸுஜாத-நன்கமைந்த; கண்டம்-கழுத்து.

வியாசதேவரின் இப்புதல்வர் ஈரெட்டு வயதினராக இருந்தார். அவரது பாதங்கள், முன் கைகள், தொடைகள், கரங்கள், தோள்கள், நெற்றி ஆகியவையும், அவரது உடலின் பிற பகுதிகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன. அவரது கண்கள் அகன்றும் மூக்கு எடுப்பாகவும் காதுகள் சமமாகவும் இருந்ததால் அவரது முகம் மிகவும் கவர்ச்சியுடன் விளங்கியது. சங்கு போல் வடிவமைந்த அவரது கழுத்து அழகாக இருந்தது.

பதம் 1.19.27
நிகூடஜத்ரும் ப்ருது-துங்க-வக்ஷஸம்
ஆவர்த-நாபிம் வலி-வல்கூதரம் ச
திக்-அம்பரம் வக்த்ரவிகீர்ண கேஸம்
ப்ரலம்ப-பாஹுன் ஸ்வமரோத்தமாபம்

நிகூட-மறைந்தும்; ஜத்ரும்- கழுத்தின் கீழெலும்பு: ப்ருது- விரிந்தும்; துங்க—உயர்ந்தும்; வக்ஷஸம்- மார்பு ;ஆவர்த-சுழன்றும்; நாபிம்- மேலும்; கொண்டும் வலி-வல்கு-மடிந்தும்; உதரம் திக்அம்பரம்-திசைகளையே (ஆடையின்றியும்); வக்த்ர-சுருண்ட; தவழ்ந்து கிடந்தன. ஆடையாகக் கேஸம்- ப்ரலம்ப-நீண்ட; பாஹும்-கரங்கள்.

அவரது கழுத்தின் கீழெலும்புகள் சதைப்பிடிப்பு உள்ளவையாகவும், அவரது விரிந்து உயர்ந்தும், நாபி ஆழமாகவும், வயிறு மடிந்து அழகாகவும் இருந்தன. அவரது கரங்கள் நீண்டும், சுருள்கள் அவரது அழகிய முகத்தில் தவழ்ந்தும் காணப்பட்டன. ஆடையின்றி அவரது தேக வர்ணத்தைப் பிரதிபலித்தது.

பதம் 1.19.28
ஸ்யாமம் ஸதாபீவ்ய-வயோ’ ங்க-க்ஷ்மியா
ஸ்த்ரீணாம் மனோ-ஜ்ஞம் ருசிர-ஸ்மிதேன
ப்ரத்யுத்திதாஸ் தே முனய ஸ்வாஸனேப்யஸ்
தல் லக்ஷண-ஜ்ஞா அபி கூட-வர்சஸம்

ஸ்யாமம் – கருதிறம்; ஸதா- எப்பொழுதும்; அபீவ்ய- மிகவும்: வய-வயது;.அங்க-அறிகுறிகள்;லக்ஷ்மியா-அந்த ஐஸ்வர்யங்களால்; ஸ்த்ரீணாம்- பெண்களின்; மனஜ்ஞம்-கவர்ச்சியாகவும்; குபிர- அழகாகவும்: ஸ்மிதேன-சிரித்த; ப்ரத்யுத்திதா:-எழுந்து நின்றனர்; தே-அவர்களனைவரும்; முனய:-மாமுனிவர்கள்: ஸ்வ- தானாக; ஆஸனேப்ய-ஆசனங்களிலிருந்து; தத் -அந்த: லக்ஷக்ஷ்ண-ஜ்ஞா- அங்க இயலின் கலையில் நிபுணர்களான; அபி—கூட: கூட-வர்சஸம்— மறைக்கப்பட்ட பெருமைகள்.

கருநிற மேனியராக இருந்த அவர் தமது இளமையின் காரணத்தால் மிகவும் அழகாக காணப்பட்டார். அவரது தேகத்தின் வசீகரத்தாலும், சிரித்த முகத்தாலும் பெண்களின் மனதுக்கினியவராக விளங்கிய அவர் தமது இயற்கையான பெருமைகளை மறைத்துக் கொள்ள முயன்றார். எனினும் அங்கிருந்த மாமுனிவர்கள் அனைவரும் அங்க இயலின் கலையில் கைதேர்ந்தவர்களாக இருந்ததால், அவர்கள் தங்களுடைய ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

பதம் 1.19.29
ஸ விஷ்ணு ராதோ ‘திதய ஆகதாய
தஸ்மை ஸபர்யாம் சிரஸாஜஹார
ததோ நிவ்ருத்தா ஹி அபுதா: ஸ்த்ரியோ ‘ர்பகா
மஹாஸனே ஸோபவிவேச பூஜித

ஸ-அவர்; ராத:-பரீட்சித்து மகாராஜன் (பகவான் விஷ்ணுவால் எப்பொழுதும் பாதுகாக்கப்படுபவர்); அதிதயே-ஓர் அதிதியாக; ஆகதாய-வந்து; தஸ்மை-அவருக்கு; ஸபர்யாம் -முழு உடலுடனும்; சிரஸா-தாழ்த்திய சிரத்துடனும்; ஆஜஹார்- வணங்கினார்; தத:-அதன் நிவ்ருத்தா-நிறுத்திக் கொண்டனர்; ஹி-நிச்சயமாக; அபுதா:-அறிவிலிகளான; ஸ்த்ரிய:-பெண்களும்; அர்பகா-சிறுவர்களும்; மஹா ஆஸனே—சிறந்த ஆசனம்; ஸ-அவர்; உபவிவேச-அமர்ந்தார்; பூஜித:-பூஜிக்கப் பெற்று.

விஷ்ணுராதர் (பகவான் விஷ்ணுவால் எப்பொழுதும் பாதுகாக்கப்படுபவர்) எனப்படுபவரான பரீட்சித்து மகாராஜன், சிரம் தாழ்த்தி வணங்கி, முக்கிய அதிதியான சுகதேவ கோஸ்வாமியை வரவேற்றார். அதைக் கண்டு அவரைத் தொடர்ந்து வந்த அறிவிலிகளான பெண்களும், சிறுவர்களும் பின்னடைந்தனர். அனைவராலும் பூஜிக்கப் பெற்ற அவர் சிறந்த ஆசனத்தில் அமர்ந்தார்.

பதம் 1.19.30
ஸ ஸம்வ்ருதஸ் தத்ர மஹான் மஹீயஸாம்
ப்ரஹ்மர்ஷி-ராஜர்ஷிதேவர்ஷி-ஸங்கை:
வ்யரோசதாலம் பகவான் யதேந்துர்
க்ரஹர்க்ஷ-தாரா-நிகரை: பரீத:

ஸ-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி; ஸம்வ்ருத:-சூழப்பட்டிருந்தார்; தத்ர -அங்கு ; மஹான்- மிகச்சிறந்த; மஹீயஸாம் – மிகச்சிறந்தவர்களிலும்; ப்ரஹ்மர்ஷி-பிரம்மரிஷி; ராஜர்ஷி-ராஜரிஷி; தேவர்ஷி- தேவரிஷி; ஸங்கை:-சபையோரால்; வ்யரோசத-நல்ல தகுதிவாய்ந்த; அலம்- ஆற்றலுடைய; பகவான்- சக்தி வாய்ந்த; யதா-போன்ற; இந்து—சந்திரன்; க்ரஹ-கிரகங்கள் ; ருக்ஷ-வானொலிக் கோளங்கள்; தாரா—நட்சத்திரங்கள்; நிகரை:-சபையோரால்; பரீத:-சூழப்பட்ட.

சந்திரன் நட்சத்திரங்களாலும் கிரகங்களாலும் மற்றும் பிற வானொலிக் கோள்களாலும் சூழப்பட்டிருப்பதைப் போலவே, சுகதேவ கோஸ்வாமியும் பிறகு மாமுனிவர்களாலும், தேவர்களாலும் சூழப்பட்டவரானார். அவரது முன்னிலை சிறப்புடையதாக இருந்ததுடன், அனைவராலும் அவர் பூஜிக்கவும்பட்டார்.

பதம் 1.19.31
ப்ரசாந்தம் ஆஸீனம் அகுண்ட-மேதஸம்
முனிம் ந்ருபோ பாகவதோ ‘ப்யுபேத்ய
ப்ரணம்ய மூர்த்னாவஹித: க்ருதாஞ்ஜலிர்
நத்வா கிரா ஸூன்ருதயான்வப்ருச்சத்

ப்ரசாந்தம்- சாந்த சொரூபியாக; ஆஸீனம்—அமர்ந்திருக்கும்; அகுண்ட — தயக்கமில்லாமல்; மேதஸம்- மகா மேதாவியான; முனிம் – மாமுனிவரை; ந்ருப:- அரசர் (பரீட்சித்து மகாராஜன்); பாகவத:-சிறந்த பக்தரான; அப்யுபேத்ய—அவரை அணுகி; ப்ரணம்ய மூர்த்னா—தலை வணங்கி: அவஹித:-ஏற்றவாறு; க்ருத-அஞ்ஜலி, கூப்பிய கரங்களுடன்; நத்வா-அடக்கத்துடன்; கிரா-சொற்களால், ஸூன்ருதயா—இனிய குரலில்; அன்வப்ருச்சத்—கேட்கலானார்.

சாந்த சொரூபியாக வீற்றிருந்த மாமுனிவரும், மகா மேதாவியுமான சுகதேவ கோஸ்வாமி, எந்த கேள்விக்கும் தயக்கமின்றி விடை யளிக்கத் தயாராக இருந்தார். சிறந்த பக்தரான பரீட்சித்து மகாராஜன் அவரை அணுகி, அவர் முன் சிரம்தாழ்த்தி, வணங்கி, கூப்பிய கரங்களுடன், இனிய சொற்களால் அடக்கத்துடன் கேட்கலானார்.

பதம் 1.19.32
பரீக்ஷித் உவாச
அஹோ அத்ய வயம் ப்ரஹ்மன் ஸத்-ஸேவ்யா: க்ஷத்ர-பந்தவ:
க்ருபயாநிதி-ரூபேண பவத்பிஸ் தீர்தகா: க்ருதா;

பரீக்ஷித் உவாச-பாக்கியசாலியான பரீட்சித்து மகாராஜன் கூறினார்; அஹோ – ஆ; அத்ய—இன்று; வயம் நாங்கள்; ப்ரஹ்மன்—ஓ, பிராமணரே; ஸத்-ஸேவ்யா—பக்தருக்குத் தொண்டு செய்யும் தகுதியுள்ளவர்கள் ஆனோம்; க்ஷத்ர— க்ஷத்திரியர்கள்; பந்தவ:— நண்பர்கள்; க்ருபயா- தங்களுடைய கருணையால், அதிதி-ருபேன— அதிதியாக; பவத்பி:—நல்லாத்மாவான தங்களால்; தீர்தகா.-தீர்ந்த ஸ்தலங்களாக இருக்கத் தகுதியுள்ள; க்குதா:-உங்களால் செய்யப்பட்ட

பாக்கியசாலியான பரீட்சித்து மகாராஜன் கூறினார்: ஓ பிராமணர்களே, உங்களுடைய கருணையாலும், என்னுடைய அதிதிகளாக இங்கு வருகை தந்திருப்பதாலுமே, எங்களை நீங்கள் புனிதப்படுத்தி, தீர்த்த ஸ்தலங்களைப் போல் மாற்றியிருக்கிறீர்கள். உங்களுடைய கருணையால் யோக்கியதையில்லாத க்ஷத்திரியர்களான நாங்கள், பக்தருக்குத் தொண்டு செய்யும் தகுதி உடையவர்களானோம்.

பதம் 1.19.33
யேஷாம் ஸம்ஸ்மரணாத் பும்ஸாம் ஸத்ய: சுத்யந்தி வை க்ருஹா:
இம் புனர் தர்சன-ஸ்பர்ச-பாத-சௌசாஸனாதிபி:

யேஷாம்- யாரைப் பற்றி: ஸம்ஸ்மரணாத்-சிந்தனையால்; பும்ஸாம்- ஒருவரின்; ஸத்ய:-உடனடியாக; சுத்யந்தி—தூய்மைப் படுத்துகிறது; வை-நிச்சயமாக; க்ருஹா:-எல்லா வீடுகளும்; இம் என்ன; புன:-பிறகு; தர்சன-தரிசிப்பதால்; ஸ்பர்ச-தொடுவதால்; பாத-பாதங்களை; சௌச கழுவுவதால்; ஆஸனஆதிபி:- ஆசனம் போன்றவைகளை அளிப்பதால்.

உங்களைப் பற்றி சிந்திப்பதாலேயே எங்கள் வீடுகள் உடனே புனிதமடைகின்றன. உங்களைக் காண்பதாலும், தொடுவதாலும், உங்கள் திருவடிகளைக் கழுவுவதாலும், எங்களுடைய வீட்டில் உங்களுக்கு ஆசனம் அளிப்பதாலும் கிடைக்கக்கூடிய நன்மையைப் பற்றி என்னவென்று சொல்வது?

பதம் 1.19.34
ஸான்னித்யாத் தே மஹா-யோகின் பாதகானி மஹாந்தி அபி
ஸத்யோ நஸ்யந்தி வை பும்ஸாம் விஷ்ணோர் இவ ஸூரேதரா:

ஸான்னித்யாத்-வரவால்; தே- தங்களுடைய; மஹா-யோகின்- மகா யோகியே; பாதகானி-பாவங்கள்: மஹாந்தி-தீர்க்க முடியாத; அபி-இருந்தும்; ஸத்ய:-உடனே: நஸ்யந்தி- அழிக்கப்படுகிறது; வை – நிச்சயமாக; பும்ஸாம்—ஒருவரின்; விஷ்ணோ-பரம புருஷரின் வரவைப் போல்; இவ-போல்; ஸுர- இதரா:-தேவர்களைத் தவிர்த்து.

பரம புருஷரின் முன்னிலையில் நாஸ்திகர்களால் நிற்க முடியாது. அதுபோலவே ஓ முனிவரே! மகா யோகியே! தங்களுடைய வரவால் ஒருவரின் தீராத பாவங்களும் உடனே அழிந்துவிடுகின்றன.

பதம் 1.19.35
அபி மே பகவான் ப்ரீத: க்ருஷ்ண: பாண்டு-ஸுதப்ரிய:
பைத்ரு-ஸ்வஸேய-ப்ரீதிஅர்தம் தத்-கோத்ரஸ்யாத்த-பாந்தவ:

அபி-நிச்சயமாக; மே-என்னிடமும்; பகவான்- பரம புருஷ பகவான்; ப்ரீத:-திருப்தியடைந்த; க்ருஷ்ண—பகவான்; பாண்டு-ஸுத- பாண்டு புத்திரர்கள்: ப்ரிய:-பிரியமான; பைத்ரு- தந்தையுடனான உறவு: ஸ்வஸேய-சகோதரியின் புத்திரர்கள்; ப்ரீதி—திருப்தி: அர்தம்- இவ்விஷயத்தில்; தத்-அவர்களுடைய; கோத்ரஸ்ய-வம்சத்தினரின், ஆத்த—ஏற்றார்; பாந்தவ:-ஒரு நண்பனாக.

பரம புருஷரும், பாண்டு புத்திரர்களுக்கு மிகப்பிரியமானவருமான பகவான் கிருஷ்ணர், தமது அத்தை மகன்களை திருப்திப்படுத்துவதற்காகவே, அவ்வுறவினர்களில் ஒருவனாக அவ்வுறவினர்களில் என்னையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பதம் 1.19.36
அன்யதா தே ‘வ்யக்தகதேர் தர்சனம் ந: கதம் ந்ருணாம்
நிதராம் ம்ரியமாணானாம் ஸம்ஸித்தஸ்ய வனீயஸ:

அன்யதா—இல்லையெனில்; தே-தங்களுடைய; அவ்யக்த-கதே: கண்ணுக்குப் புலப்படாதவாறு சஞ்சரிப்பவரின்; தர்சனம்—தரிசனம்; ந:-எங்களுக்கு; கதம்- எப்படி; ந்ருணாம்-மக்களின்; நிதராம்- குறிப்பாக; மரியமாணானாம்- மரணவாயில் இருப்பவர்களுக்கு; ஸம்ஸித்தஸ்ய-பரிபூரணமானவரின்; வனீயஸ:-தன்னிச்சையான தோற்றம்;

இல்லையெனில் மரணவாயிலிருக்கும் எங்களுடைய கண்களுக்குப் புலப்படாமல், சாதாரண மக்களுக்கிடையில் மாறுவேடத்தில் நடமாடியபோதிலும், (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் தூண்டப்படாமல்) தன்னிச்சையாக தாங்கள் இங்கு தோன்றியிருப்பது எப்படி சாத்தியமாகும்?

பதம் 1.19.37
அத: ப்ருச்சாமி ஸம்ஸித்திம் யோகினாம் பரமம் குரும்
புருஷஸ்யேஹ யத் கார்யம் ம்ரியமாணஸ்ய ஸர்வதா

அத:- எனவே; ப்ருச்சாமி- கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்; ஸம்ஸித்திம்-பூரணத்துவம் அடையும் வழி ; யோகினாம்-யோகிகளில்; பரமம்-பரம; குரும்-ஆன்மீக குரு; புருஷஸ்ய-ஒருவரின்; இஹ- இப்பிறவியில்; யத் – என்ன; கார்யம்- கடமை ; ம்ரியமாணஸ்ய – இறக்கப் போகும் ஒருவன்; ஸர்வதா-எல்லா வகையிலும்.

பெரும் முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் தாங்கள்தான் பரமகுரு. எனவே அனைவருக்கும் ஏற்ற பூரணத்துவம் அடையும் வழியை, குறிப்பாக மரணவாயிலில் இருப்பவனுக்கேற்ற வழியைக் காட்டியருளும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

பதம் 1.19.38
யச் ச்ரோதவ்யம் அதோ ஜப்யம் யத் கர்தவ்யம் ந்ருபி: ப்ரபோ
ஸ்மர்தவ்யம் பஜனீயம் வா ப்ரூஹி யத் வா விபர்யயம்

யத்—எதையெல்லாம்; ஸ்ரோதவ்யம்- கேட்கத்தக்கது; அதோ- அதனுடைய ; ஜப்யம்-ஜபிக்கத்தக்கது; யத்-வேறெது; கர்தவ்யம்- நிறைவேற்றப்பட; ப்ரபோ- பிரபுவே ; ஸ்மர்தவ்யம் நினைக்கத்தக்கது; பஜனீயம் -வணங்கத்தக்கது; வேண்டும்; ந்ருபி:- பொதுவாக மக்களால்; வா- எது; ப்ரூஹி- தயவுசெய்து விளக்கியருள வேண்டுகிறேன்; யத் வா—அது என்னவாக இருக்கக்கூடும் என்று; விபர்யயம்- கொள்கைக்கு எதிரானது.

பிரபுவே ஒரு மனிதன் கேட்கத்தக்கது, ஜபிக்கத்தக்கது, நினைக்கத்தக்கது மற்றும் வணங்கத்தக்கது என்னவென்பதையும், அவன் செய்யத்தகாதது என்னவென்பதையும் தயவுசெய்து எனக்குக் கூறியருளுங்கள்.

பதம் 1.19.39
நூனம் பகவதோ ப்ரஹ்மன் க்ருஹேஷு க்ருஹ-மேதினாம்
ந லக்ஷ்யதே ஹி அவஸ்தானம் அபி கோ-தோஹனம் க்வசித்

நூனம்- ஏனெனில்; பகவத:- சக்தி வாய்ந்தவரான உங்களை; ப்ரஹ்மன்— பிராமணரே; க்ருஹேஷு-வீடுகளில்; க்ருஹ- மேதினாம் குடும்பஸ்தர்களின்; ந-இல்லை; லக்ஷ்யதே- காணப்படுகிறீர்கள்; ஹி_அதே போன்று; அவஸ்தானம்—இருப்பது; அபி-அதுவும்: கோ தோஹனம் – பசுவைக் கறக்கும்; க்வசித்-அரிதாக.

சக்தி வாய்ந்த பிராமணரே, தாங்கள் பசுவைக் கறப்பதற்குத் தேவையான கால அளவுகூட குடும்பஸ்தர்களின் வீடுகளில் தங்குவது அரிது என்று கூறப்படுகிறது.

பதம் 1.19.40
ஸூத உவாச
ஏவம் ஆபாஷித: ப்ருஷ்ட: ஸ ராஜ்னா ஸ்லக்ஷணயா இரா
ப்ரத்யபாஷத தர்ம-க்ஞோ பகவான் பாதராயணி:

ஸூத உவாச- ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; ஏவம்-இவ்வாறு; ஆபாஷித:- பேசப்பட்ட; ப்ருஷ்ட:-மேலும் கேட்கப்பட்ட; அவர்; ராஜ்னா—அரசரால்; ஸ்லக்ஷக்ஷ்ணயா- இனிமையான; இரா- மொழிகளால்; ப்ரத்யபாஷத-பதில் கூறத் தொடங்கினார்; தர்ம க்ஞ:-சமயக் கோட்பாடுகளை அறிந்தவர்; பகவான்-சக்தி வாய்ந்த புருஷராகிய; பாதராயணி—வியாச புத்திரர்.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக அரசர் இனிய மொழிகளால் முனிவரிடம் பேசியதுடன், கேள்விகளையும் கேட்டார். பிறகு சக்தி வாய்ந்த புருஷரும் சமயக் கோட்பாடுகளை அறிந்தவருமான வியாச புத்திரர் பதில் கூறத் தொடங்கினார்.


ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “சுகதேவ கோஸ்வாமியின் தோற்றம்” எனும் தலைப்பைக் கொண்ட, பத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare