அத்தியாயம் – 17
கலி பெற்ற தண்டனையும் பரிசும்
பதம் 1.17.1
ஸூத உவாச
தத்ர கோமிதுனம் ராஜா ஹன்யமானம் அநாதவத்
தண்டஹஸ்தம் ச வ்ருஷலம் தத்ருசே ந்ருபே லாஞ்சனம்

ஸூத உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; தத்ர—அதன் பிறகு; கோமிதுனம்- ஒரு பசுவும் எருதும்; ராஜ-அரசர்; ஹன்யமானம்- தாக்கப்படுவதை; அநாதவத்—எஜமானர் இல்லாதவை போல் காணப்பட்ட; தண்டஹஸ்தம்- கையில் ஒரு தடியுடன்; ச-மேலும்: வ்ருஷலம்- தாழ்ந்த பிரிவைச் சேர்ந்த சூத்திரன்; தத்ருசே-கண்டார்; ந்ருப:—ஓர் அரசர்; லாஞ்சனம்—போல் உடை அணிந்திருந்தான்.

சூத கோஸ்வாமி கூறினார்: அந்த இடத்தை அடைந்த பரீட்சித்து மகாராஜன், அரச உடைதரித்த சூத்திரனொருவன் நாதனற்றவைபோல் காணப்பட்ட ஒரு பசுவையும், எருதுவையும் தடியால் இம்சிப்பதைக் கண்டார்.

பதம் 1.17.2
வ்ருஷம் ம்ருணால-தவளம் மேஹந்தம் இவ பிப்யதம்
வேபமானம் பதைகேன ஸீதந்தம் ஸூத்ர-தாடிதம்

வ்ருஷம்-எருது; ம்ருணால -தவளம்- வெண்தாமரையைப் போல் வெண்மையாக: மேஹந்தம்—சிறுநீர் கழிப்பது; இவ்-போல்; ஒரு பிப்யதம்- பெரும் பயத்திற்கு உள்ளானதால்; வேபமானம்- நடுங்கி கொண்டு; பாதஏகேன—ஒரே காலில் கொண்டிருந்தது; ஸீதந்தம்-வெருண்டுபோய்; சூத்ர-தாடிதம்- ஒரு சூத்திரனால் இம்சிக்கப்பட்டு.

அந்த எருது வெண்தாமரையைப் போல் வெண்மையாக இருந்தது. தன்னை இம்சித்துக் கொண்டிருந்த அந்த சூத்திரனால் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருந்ததால், அது நடுக்கத்துடன் சிறுநீர் கழித்தவாறு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

பதம் 1.17.3
காம் ச தர்ம-துகாம் தீனாம் ப்ருசம் சூத்ர-பதாஹதாம்
விவத்ஸாம் ஆஸ்ரு-வதனாம் க்ஷாமாம் யவஸம் இச்சதீம்

காம்- பசு: ச- கூட; தர்மதுகாம் – அதனிடமிருந்து தர்மத்தைக் கறக்க முடியும் என்பதால் அது பயனுள்ளதாகும்: தீனாம்- இப்பொழுது இரங்கத்தக்க நிலையிலுள்ளது; ப்ருசம்- துன்புறுத்தப்பட்டது: சூத்- தாழ்ந்த பிரிவைச் சேர்ந்தவன்; பத -ஆஹதாம்- கால்களில் அடிக்கப்பட்டு; விவத்ஸாம்-கன்று அற்ற; ஆஸ்ருவதனாம்—கண்களில் கண்ணீருடன்; க்ஷமாம்-இளைத்து; யவஸம்-புல்: இச்சதீம்-கொஞ்சம் புல்லைத் தின்ன ஆசைப்படுவதுபோல்.

பசுவிலிருந்து தர்மத்தைக் கறக்க முடியும் என்பதால், பயனளிக்கக் கூடியது என்றாலும், அது இப்பொழுது இரங்கத்தக்க அது நிலையிலும், கன்றற்றதாகவும் உள்ளது. அதன் கால்கள் ஒரு சூத்திரனால் அடிக்கப்பட்டன. துன்பத்திற்கு ஆளாகி, இளைத்து காணப்பட்ட அதன் கண்களில் கண்ணீர் ததும்பியது. இந்நிலையில், சிறிது புல் கிடைக்குமா என்று அது ஏங்கியது.

பதம் 1.17.4
பப்ரச்ச ரதம் ஆரூட: கார்தஸ்வர-பரிச்சதம்
மேக-கம்பீரயா வாசா ஸமாரோபித கார்முக:

பப்ரச்ச-வினவினார்; ரதம் -இரதம்; ஆரூட-மீதமர்ந்து; கார்தஸ்வர— தங்கம்; பரிச்சதம்-புடைக்கச் செய்த; மேக- மேகம்; கம்பீரயா-கம்பீரமான; வாசா:-குரலோசை; ஸமாரோபித- நன்கு ஆயத்தமாகி; கார்முக:-அம்புகளும், வில்லும்.

அம்புகளுடனும் வில்லுடனும் நன்கு ஆயத்தமாயிருந்த பரீட்சித்து மகாராஜன், தங்கத்தாலான தேரிலமர்ந்து, இடி முழக்கம் போன்ற ஆழமான குரலில் அவனுடன் (சூத்திரனுடன்) பேசினார்.

பதம் 1.17.5
கஸ் த்வம் மச்சரணே லோகே பலாத் தம்ஸி அபலான் பலீ
நரதேவோ ‘ஸி வேஷேண நடவத் கர்மணா ‘த்விஜ’:

கஸ்:-யார்; த்வம்-நீ; மத்- எனது ; சரணே-பாதுகாப்பின்கீழ்: லோகே.-இவ்வுலகில்; பலாத்-பலாத்காரமாக; ஹம்ஸி-கொல்லும்; அபலான்-ஆதரவற்றவர்கள்; பலீ—பலசாலியாக இருந்தபோதிலும்; நரதேவோ:-மனித தெய்வம்; அஸி -போல் காணப்படும்; வேஷேண- உன்னுடைய உடையால்; நடவத்-ஒரு நாடாக நடிகனைப் போன்ற; கர்மணா—செயல்களால்; அத்விஜ:-இரு பிறப்பு எய்தாத ஒருவன்.

ஓ, யார் நீ? பலசாலியைப் போல் காணப்பட்டாலும், பாதுகாப்பிலுள்ள ஆதரவற்றவர்களை நீ கொல்லத் துணிந்தாயே! என் உடையால் உன்னை ஒரு தெய்வீக மனிதனை (அரசனைப்) போல் காட்டிக் கொள்கிறாய். ஆனால் செயலால் இருப்பிறப்பெய்திய க்ஷத்திரியர்களின் கொள்கைகளை எதிர்க்கிறாய்.

பதம் 1.17.6
யஸ் த்வம் க்ருஷ்ணே கதே தூரம் ஸஹகாண்டீவதன்வனா
சோச்யோ ‘ஸி அசோச்யான் ரஹஸி ப்ரஹரன் வதம் அர்ஹஸி

ய- என்ற காரணத்தால்; த்வம்-அயோக்கியனே; க்ருஷ்ணே- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்; கதே-சென்று விட்டதால் ; தூரம்—கண்ணுக்கு தெரியாமல்; ஸஹ-உடன்; காண்டீவ-காண்டிவம் எனும் வில்; தன்வனா – வைத்திருப்பவர் அர்ஜுனன்; அஸி- நீ கருதப்படுகிறாய்; சோச்ய-குற்றவாளியாக; அசோச்யான்–குற்றமற்ற; ரஹஸ-மறைவான ஓரிடத்தில்; ப்ரஹரன்-அடிக்கிறாய்; வதம்- கொல்லப்பட; அர்ஹஸி-தகுந்தவன்.

அயோக்கியனே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், காண்டீப வில்லை எந்திய அர்ஜுனனும் மறைந்து விட்டதால், குற்றமற்ற ஒரு பசுவையும் நீ அடிக்கத் துணிந்தாயா? அதை மறைவான ஓரிடத்தில் நீ அடிப்பதால், நீ குற்றவாளியென கருதப்பட்டு, கொல்லப்பட வேண்டியவனாக இருக்கிறாய்.

பதம் 1.17.7
த்வம் வா ம்ருணால-தவல: பாதைர் ஞூன: பதா சரன்
வ்ருஷ-ரூபேண கிம் கஸ்சித் தேவோ ந: பரிகேதயன்

த்வம்—நீ; வா—அல்லது; ம்ருணால- தவல:-தாமரையைப் போல் வெண்மையாக; பாதை:-மூன்று கால்களை; ஞூன:-இழந்து; பதா- ஒரு காலில்; சரன்- நடமாடும்; வ்ருஷ- எருதின்; ரூபேண- வடிவில்; கிம் – அல்லது ; கஸ்சித்-யாரோ ஒருவர்; தேவோ :- தேவர்; ந: எங்களுக்கு; பரிகேதயன்—துன்பத்தை விளைவிக்கிறாய்.

பிறகு அவர் (பரீட்சித்து மகாராஜன்) எருதைப் பார்த்து கேட்டார். நீ யார்? நீ வெண்தாமரையைப் போல் வெண்மை நிறம் கொண்ட ஓர் எருதாஅல்லது நீ ஒரு தேவனா? மூன்று கால்களை இழந்து ஒரே காலுடன் நீ நடமாடுகிறாய். நீ ஓர் எருதின் உருவில் இருந்து கொண்டு எங்களுக்கு துன்பத்தை விளைவிக்கும் ஒரு தேவனா?

பதம் 1.17.8
ந ஜாது கௌரவேந்ராணாம் தோர்தண்ட-பரிரம்பிதே
பூ-தலே நுபதந்தி அஸ்மின் வினா தே ப்ராணினாம் சுச:

ந-இல்லை; ஜாது-எச்சமயத்திலும்; கௌரவ-இந்ராணாம்- குரு வம்சத்து அரசர்களின்; தோர்தண்ட-கரங்களின் வலிமை; பரிரம்பி-தே-பாதுகாக்கப்பட்ட; பூத-லே- பூமியின் மேற்பாகத்தில்; அநுபதந்தி.-துன்பப்படுவதை; அஸ்மின்-இன்றுவரை; வினா- இதைத் தவிர : தே -நீ; ப்ராணினாம்- ஜீவாசியின்; சுச:- கண்களில் கண்ணீருடன்.

குரு வம்சத்து அரசர்களின் கரங்களால் நன்கு பாதுகாக்கப்பட்டு வந்ததோர் இராஜ்ஜியத்தில், கண்களில் கண்ணீருடன் நீ துக்கப்படுவதை இப்பொழுதுதான் முதன்முறையாக நான் காண்கிறேன். இன்றுவரை பூமியிலுள்ள ஒருவரும் அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக ஒருபோதும் கண்ணீர் சிந்தியதே இல்லை.

பதம் 1.17.9
மா ஸௌரபேயாத்ர சுசோ வ்யேது தே வ்ருஷலாத் பயம்
மா ரோதீர் அம்ப பத்ரம் தே கலானாம் மயி சாஸ்தரி

மா-தேவையில்லை; ஸௌரபேய-சுரபியின் மகனே; அத்ர— என் இராஜ்ஜியத்தில்; சுச:-கவலை; வ்யேது- இருக்கட்டும்; தே- உனது; வ்ருஷலாத்-சூத்திரனால்; பயம்- பயத்திற்கான காரணம்; மா- வேண்டாம்; ரோதீ: – அழ; அம்ப- தாயே; பத்ரம்- சர்வ நன்மை; தே—உங்களுக்கு; கலானாம்— பொறாமை கொண்டவர்களின்; மயி- நான் உயிருடன் உள்ளவரை; சாஸ்தரி-ஆள்பவளாக அல்லது அடக்குபவளாக.

சுரபி மகனே, இனிமேல் நீ வருந்தத் தேவையில்லை, இந்த இழி குல சூத்திரனைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமுமில்லை. மேலும், பசு ரூபம் கொண்ட தாயே, பொறாமை கொண்ட எல்லா மனிதர்களையும் அடக்கி ஆள்பவனாக நான் வாழும்வரை நீ அழ வேண்டிய காரணமில்லை. அனைத்தும் உனக்கு நன்மையாகவே இருக்கும்.

பதங்கள் 1.17.10 – 1.17.11
யஸ்ய ராஷ்ட்ரே ப்ரஜா: ஸர்வாஸ் த்ரஸ்யந்தே ஸாத்வி அஸா துபி
தஸ்ய மத்தஸ்ய நஸ்யந்தி கீர்திர் ஆயுர் பகோ கதி:

ஏஷ ராஜ்னாம் பரோ தர்மோ ஹி ஆர்தானாம் ஆர்தி-நிக்ரஹ:
அத ஏனம் வதிஷ்யாமி பூத- த்ருஹம் அஸத்தமம்

யஸ்ய-யாரொருவருடைய; ராஷ்ட்ரே-நாட்டில்; பிரஜா- ஜீவராசிகள்; ஸர்வா:-எல்லா; த்ரஸ்யந்தே-பயமுறுத்தப்படுகின்றன; ஸாத்வி-தூய்மையான எருதே; அஸாதுபி: துஷ்டர்களால்; தஸ்ய- அவனுடைய; மத்தஸ்ய-மாயைக்குட்பட்ட; நஸ்யந்தி-மறைந்து விடுகிறது: கீர்தி:-புகழ்: ஆயு:-ஆயுள்; பக:—அதிர்ஷ்டம்; கதி:-நல்ல மறுபிறப்பு: ஏஷ்—இவை; ராஜ்னாம்—அரசர்களின்; பர:-உயர்ந்த; தர்ம:- தொழில்; ஹி- நிச்சயமாக; ஆர்தானாம்—துன்பப் படுபவர்களின்; ஆர்தி-துன்பங்கள்; நிக்ரஹ:-அடக்குதல்; அத- எனவே; ஏனம்—இவனை; வதிஷ்யாமி- நான் கொன்று விடுகிறேன். பூத க்ருஹம் – பிற ஜீவராசிகளை துன்புறுத்துபவன்; அஸத்- தமம்- மிகவும் இழிவானவன்.

தூய்மையான எருதே, ஓரரசனின் இராஜ்ஜியத்திலுள்ள உயிரினங்கள் அனைத்தும் துஷ்டர்களாக்கப்படும் போது, அந்த அரசனின் நற்பெயர், ஆயுள் மற்றும் நற்பிறப்பு ஆகியவை மறைந்துவிடும். துன்பப்படுபவர்களின் துன்பங்களை தீர்ப்பதுதான் அரசரின் முக்கிய கடமையாகும். எனவே, பிற ஜீவராசிகளை இவன் துன்புறுத்துவதால் மிகவும் இழிவான இவனை நான் கொன்று விடுகிறேன்.

பதம் 1.17.12
கோ ”வ்ருஸ்சத் தவ பாதாம்ஸ் த்ரீன் ஸௌரபேய சதுஷ்-பத
மா பூவம்ஸ் த்வாத்ருசா ராஷ்ட்ரே ராஜ்னாம் க்ருஷ்ணானுவர்தினாம்

கோ:-யாரவன்; அருஸ்சத்- துண்டித்தவன்; தவ-உனது; பாதான்- கால்களை; த்ரீன்—மூன்று; ஸௌரபேய- சுரபியின் மகனே; சது: பத -நான்கு கால்களைக் கொண்ட நீ; மா-ஒருபோதும் இல்லை; பூவன்-அப்படி நடந்தது ; த்வாத்ருசா-உன்னைப் போன்ற ; ராஷ்ட்ரே- நாட்டில்; ராஜ்னாம்—அரசர்களின்; க்ருஷ்ண-அனுவர்தினாம்-பரம் புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் சட்டங்களைப் பின்பற்றுபவர்கள்.

அவர் (பரீட்சித்து மகாராஜன்) எருதிடம் திரும்பத் திரும்ப பின்வருமாறு கேள்விகள் கேட்டார்: சுரபியின் மகனே, மூன்று கால்களைத் துண்டித்தவன் யார்? உன்னுடைய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் அரசர்களின் இராஜ்ஜியத்தில், உன்னைப் போல் இவ்வளவு மகிழ்ச்சியற்றவர் ஒருவரும் இல்லை.

பதம் 1.17.13
ஆக்யாஹி வ்ருஷ பத்ரம் வ: ஸாதூனாம் அக்ருதாகஸாம்
ஆத்ம-வைரூப்ய-கர்தாரம் பார்தானாம் கீர்தி-தூஷணம்

ஆக்யாஹி-என்னிடம் சொல்; வ்ருஷ-எருதே; பத்ரம் -நன்மை; வ:-உனக்கு; ஸாதூனாம் – நேர்மையுள்ள; அக்ருத-ஆகஸாம் குற்றமற்ற ; ஆத்ம-வைரூப்ய—அங்கவீனம்; கர்தாரம்- செய்பவன்; பார்தானாம்—பிருதாவின்புதல்வர்களின்; கீர்தி-தூஷணம்-நற்பெயருக்கு இழுக்கை உண்டாக்கும்.

எருதே, நீ குற்றமற்றவனாயும், முற்றிலும் நேர்மையுடையவனாயும் இருக்கிறாய். எனவே உனக்கு சர்வ நன்மையும் உண்டாகட்டும். உன்னை அங்கவீனப்படுத்தி, பிருதாவின் புத்திரர்களுக்கு இழுக்கை உண்டாக்கியவன் யாரென்று தயவுசெய்து சொல்.

பதம் 1.17.14
ஜனே ‘நாகஸி அகம் யுஞ்சன் ஸர்வதோ ‘ஸ்ய ச மத்-பயம்
ஸாதூனாம் பத்ரம் ஏவ ஸ்யாத்-அஸாது தமனே க்ருதே

ஜனே-ஜீவராசிகளுக்கு; அனாகஸி- குற்றமற்றவர்கள்; அகம்- துன்பங்கள்; யுஞ்சன்- ஏற்படுத்துவதால்; ஸர்வத:- எங்கும் எப்பொழுதும்; அஸ்ய-அத்தகைய குற்றவாளிகளின்; ச-மேலும்; மத் பயம்- என்னிடம் அச்சம் கொள்ள; ஸாதூனாம்—நேர்மையானவர்களின்; பத்ரம் – நல்லதிர்ஷ்டம்; ஏவ-நிச்சயமாக; ஸ்யாத்-நிகழும்; அஸாது— நேர்மையற்ற துஷ்டர்கள்; தமனே—அடக்கப்பட்டனர்; க்ருதே-அப்படி செய்ததால்.

குற்றமற்ற ஜீவராசிகளுக்கு துன்பம் விளைவிப்பவன் யாராக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் இருப்பவனாக இருந்தாலும், என்னைக் கண்டு அஞ்சத்தான் வேண்டும். நேர்மையற்ற துஷ்டர்களை அடக்குவதால், ஒருவர் தானாகவே குற்றமற்றவர்களுக்கு நன்மை செய்பவராகிறார்.

பதம் 1.17.15
அநாகஹ்ஸு இஹ பூதேஷுய ஆகஸ்-க்ருன் நிரங்குச:
ஆஹர்தாஸ்மி புஜம் ஸாக்ஷாத் அமர்த்யஸ்யாபி ஸாங்கதம்

அநாகஹ்ஷு இஹ-குற்றமற்றவர்களுக்கு; பூதேஷு—ஜீவராசிகள்; ய-நபர்; ஆக-க்ருத் – குற்றம் செய்பவன்; நிரங்குச:- அற்பன்; ஆஹர்தா-ஆஸ்மி – நான் ஏற்படுத்துவேன்; புஜம் — கரங்கள்; ஸாக்ஷாத்-நேரடியாக; அமர்தஸ்ய அபி-ஒரு தேவராக இருப்பினும்; ஸ-அங்கதம்— கவசத்துடனும், அலங்காரத்துடனும்.

ஓர் அற்ப ஜீவராசி, கலசத்துடனும், அலங்காரங்களுடனும் கூடிய ஸ்வர்க லோகவாசியாக இருப்பினும், குற்றமற்றவர்களைத் ஒரு துன்புறுத்துவதன் மூலமாக குற்றம் புரிபவனாக இருந்தால், அவன் நேரடியாக என்னாலேயே நாசம் செய்யப்படுவான்.

பதம் 1.17.16
ராஜ்னோ ஹி பரமோ தர்ம: ஸ்வ-தர்ம-ஸ்தானுபாலனம்
சாஸதோ ‘ன்யான் யதா-சாஸ்த்ரம் அனாபதி உத்பதான் இஹ

ராஜ்னா:-அரசரின் அல்லது நிர்வாகத் தலைவரின்; ஹி- நிச்சயமாக; பரம:-பரம; தர்ம:-உத்தியோகக் கடமை; ஸ்வதர்ம- ஸ்த—சுயதர்மத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ளவர்; அனுபாலனம்— எப்பொழுதும் பாதுகாப்பு அளித்தல்; சாஸத:-ஆட்சிக் காலத்தில்; அன்யான்- மற்றவர்களுக்கு; யதா—அதற்கேற்ப; சாஸ்த்ரம்-சாஸ்திர விதிகள்; அனாபதி-ஆபத்தில்லாமல்; உத்பதான்- வழிதவறிச் செல்பவர்கள்; இஹ- -உண்மையில்.

அவசரகாலமில்லாத சாதாரண காலங்களில் சட்டங்களுக்குக் கீழ்ப்படிபவர்களுக்கு முழு பாதுகாப்பையும் அளித்து, சாஸ்திர விதிகளை மீறுபவர்களை தண்டிப்பதே அரசாளும் மன்னரின் உயர்ந்த கடமையாகும்.

பதம் 1.17.17
தர்ம உவாச
ஏதத் வ: பாண்டவேயானாம் யுக்தம் ஆர்தாபயம் வச:
யேஷாம் குண-குணை: க்ருஷ்ணோ தௌத்யாதௌ பகவான் க்ருத:

தர்ம உவாச – தர்மதேவதை கூறியது: ஏதத்-இவ்வனைத்தும்; வ- உம்மால்; பாண்டவேயானாம்-பாண்டவ வம்சத்தில் உள்ளவர்களுக்கு; யுக்தம்- சற்றே பொருத்தமானதாகும்; ஆர்த: துன்புறுபவர்; அபயம்- பயத்திலிருந்து விடுதலை; வச:-பேச்சு; யேஷாம்—அந்த; குண- குணை- தகுதிகளால்; க்ருஷ்ண:-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் கூட; தௌத்ய-ஆதௌ-தூதர்- முதலான கடமைகளை; பகவான்- பரம புருஷ பகவான்; க்ருத:- செய்தார்.

தர்மதேவதை கூறியது: உம்மால் பேசப்பட்ட இவ்வார்த்தைகள் பாண்டவ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிகவும் பொருத்த மானவையாகும். பரம புருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் கூட பாண்டவர்களின் பக்திப்பூர்வமான தகுதி முறைகளால் கவரப்பட்டு, ஒரு தூதருக்குரிய கடமைகளைச் செய்தார்.

பதம் 1.17.18
ந வயம் க்லேச-பீஜானி யத: ஸ்யு: புருஷர்ஷப
புருஷம் தம் விஜானீமோ வாக்ய-பேத-விமோஹிதா:

ந-இல்லை; வயம்- நாங்கள்; க்லேச-பீஜானி-துன்பங்களுக்கு மூல காரணம்; யத:- எங்கிருந்து; ஸ்யு:-அது அப்படி நடக்கிறது; புருஷ – ருஷப – மனிதருள் மிகச்சிறந்தவரே; புருஷம் நபர்; தம்- அந்த ; விஜானீம:- அறிந்துகொண்டோம்; வாக்ய- பேத-கருத்து வேற்றுமை; விமோஹிதா:-அதனால் குழப்பம் அடைந்துள்ளோம்.

மனிதருள் மிகச்சிறந்தவரே, சாஸ்திர அனுபவமற்ற தத்துவ வாதிகளின் வெவ்வேறு அபிப்பிராயங்களால் நாங்கள் குழப்பம் அடைந்திருப்பதால், எங்களுடைய துன்பங்களுக்குக் காரணமான கயவனை ஆராய்ந்தறிவது மிகவும் கடினமாக உள்ளது.

பதம் 1.17.19
கேசித் விகல்ப-வஸனா ஆஹுர் ஆத்மானம் ஆத்மன:
தைவம் அன்யே ‘பரே கர்ம ஸ்வபாவம் அபரே ப்ரபும்

கேசித்- அவர்களில் சிலர்; விகல்ப-வஸனா—எல்லா வகையான இருமைகளையும் மறுப்பவர்கள்; ஆஹு:-விளம்பரப்படுத்துகின்றனர்; ஆத்மானம்- ஒருவர் தானே; ஆத்மன:- அவரின்; தைவம்- அமானுஷ்யமான; அன்யே-மற்றவர்கள்; அபரே-வேறொருவர்; கர்ம- செயல்; ஸ்வபாவம்-ஜட இயற்கை; அபரே-மற்றும் பல; ப்ரபும்- அதிகாரிகள்.

எல்லா வகையான இருமைகளையும் ஒப்புக்கொள்ள மறுக்கும் சில தத்துவவாதிகள், ஒருவரது சொந்த இன்ப துன்பங்களுக்கு அவரே பொறுப்பாளி என்று கூறுகின்றனர். பிறர் அமானுஷ்யமான சக்திகளே அதற்குப் பொறுப்பு என்றும், மற்றவர்கள் செயல்தான் அதற்குப் பொறுப்பென்றும் கூறுகின்றனர். ஆழ்ந்த பௌதிகவாதிகளோ, இயற்கைதான் முடிவான காரணம் என்று சாதிக்கின்றனர்.

பதம் 1.17.20
அப்ரதர்கீயாத் அனிர்தேஸ்யாத் இதி கேஷ்வ் அபி நிஸ்சய:
அத்ரானுரூபம் ராஜர்ஷே விம்ருச ஸ்வ-மனீஷயா

அப்ரதர்கீயாத்-வாதத் திறமைக்கு அப்பாற்பட்டது; தேஸ்யாத்-சிந்தனை சக்திக்கு அப்பாற்பட்டது; இதி-இவ்வாறாக; கேஷூ- ஒருவர்; அபி—இன்னும்; நிஸ்சய:-உறுதியாக முடிவு செய்துள்ளனர்; அத்ர—இங்கு; அனுரூபம்—இவற்றில் எது சரி; ராஜ ருஷே – ராஜரிஷியே; விம்ருச-நீரே ஆராய்ந்து கொள்ளும் ; ஸ்வ- உங்களது சொந்த; மனீஷயா-கூர்மதியால்.

விவாதத்தினால் துன்பத்திற்கான காரணத்தை விசாரித்தறியவோ, அல்லது கற்பனையின் மூலமாக அதை அறியவோ, அல்லது வார்த்தைகளால் அதை விவரிக்கவோ ஒருவராலும் முடியாது என்று நம்பும் சில அறிஞர்களும் உள்ளனர். ராஜரிஷியே, இதில் எது பொருத்தமானதென்பதை உமது புத்தியால் நீரே ஆராய்ந்து கொள்ளும்.

பதம் 1.17.21
ஸூத உவாச
ஏவம் தர்மே ப்ரவததி ஸ ஸம்ராட் த்விஜ-ஸத்தமா:
ஸமாஹிதேன மனஸா விகேத: பர்யசஷ்ட தம்

ஸூத உவாச- சூத கோஸ்வாமி கூறினார்; ஏவம்- எனவே; தர்மே- தர்ம தேவதை; ப்ரவததி—இவ்வாறு பேசியபின்; ஸ—அவர்; ஸம்ராட்— சக்கரவர்த்தி; த்விஜ-ஸத்தமா:-பிராமண சிரேஷ்டரே; ஸமாஹிதேன- முறையான கவனத்துடன்; மனஸா-மனதால்; விகேத:—எந்த தவறுமின்றி; பர்யசஷ்ட-பதிலுரைத்தார்; தம்—அதனிடம்.

சூத கோஸ்வாமி கூறினார்: பிராமண சிரேஷ்டரே, தர்ம தேவதையின் பேச்சைக் கேட்ட பரீட்சித்து மகாராஜன் பூரண திருப்தியடைந்து, பிழையோ, வருத்தமோ இன்றி பதிலளித்தார்.

பதம் 1.17.22
ராஜோவாச
தர்மம் ப்ரவீஷி தர்ம க்ஞ தர்மோ ‘ஸி வ்ருஷ-ரூப-த்ருக்
யத் அதர்ம-க்ருத: ஸ்தானம் ஸூசகஸ்யாபி தத் பவேத்

ராஜா உவாச-அரசர் கூறினார்; தர்மம்- தர்மம்; ப்ரவீஷி-பேசியதுபோல்; தர்ம-க்ஞ-மதக் கோட்பாடுகளை அறிந்த; தர்ம: தர்ம தேவதை; அஸி-நீ இருக்கிறாய்; வ்ருஷ-ரூபத்ருக்-ஓர் எருதின் வேடத்தில்; யத்-என்னவெல்லாம்; அதர்ம-க்ருத:-தர்ம விரோதமாக செயற்படுபவன்; ஸ்தானம்-இடம்; ஸூசகஸ்ய -அடையாளம் காண்பவன்; அபி கூட; தத்-அந்த; பவேத்-ஆகிறான்.

அரசர் கூறினார்: தர்மமறிந்த நீ, ஓர் எருதின் வடிவத்தைத் தாங்கியிருக்கிறாய். மேலும், அதர்மம் செய்தவனுக்கு ஏற்படும் நிலை, அதைக் குறித்துப் பேசுபவனுக்கு ஏற்படும் என்ற தத்துவத்திற்கு ஏற்பவே நீ பேசுகிறாய். நீ தர்ம தேவதையே அன்றி வேறு யாருமில்லை.

பதம் 1.17.23
அதவா தேவ-மாயாயா நூனம் கதிர் அகோசரா
சேதஸோ வசஸஸ் சாபி பூதானாம் இதி நிஸ்சய:

அதவா-இரண்டில் ஒன்றாக; தேவ —பகவான்; மாயாயா-சக்திகள்; நூனம்- மிகக்குறைந்த; கதி:-அசைவு; அகோசரா- நினைத்தற்கரிய ; சேதஸ:- அல்லது மனதால்; வசஸ:- வார்த்தைகளால் ; ச-அல்லது; அபி-மேலும்; பூதானாம்- அனைத்து ஜீவராசிகளின்; இதி இவ்வாறாக; நிஸ்சய:- முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறாக பகவானின் சக்திகள் நினைத்தற்கரியவை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மனக் கற்பனையாலோ, வார்த்தை ஜாலங்களாலோ அவற்றை ஒருவராலும் மதிப்பிட முடியாது.

பதம் 1.17.24
தப: சௌசம் தயா ஸத்யம் இதி பாதா: க்ருதே க்ருதா:
அதர்மாம்சைஸ் த்ரயோ பக்னா: ஸ்மய-ஸங்க-மதைஸ் தவ

தப- தவம்; செளசம்-தூய்மை ; தயா- தயை; ஸத்யம்- உண்மை; இதி -இவ்வாறாக; பாதா:-பாதங்கள்; க்ருதே-சத்திய யுகத்தில்; க்ருதா:-நிலைநாட்டப்பட்டு இருந்தது; அதர்ம-அதர்மம்; அம்சை- அம்சங்களால்; த்ரய:-மூன்றும் இணைந்து; பக்னா: உடைந்துவிட்டன; ஸ்மய-தற்பெருமை; ஸங்க—பெண்களுடனான அளவுக்கதிகமான உறவு; மதை:-குடிவெறி; தவ -உனது.

சத்திய யுகத்தில் உனது நான்கு கால்களும் தவம், தூய்மை, தயை மற்றும் உண்மை எனும் நான்கு கொள்கைகளால் நிலைநாட்டப் பட்டிருந்தன. ஆனால் தற்பெருமை, சிற்றின்ப வெறி மற்றும் குடிவெறி ஆகியவற்றின் உருவிலுள்ள அளவு கடந்த அதர்மங்களின் காரணத்தால், உனது மூன்று கால்கள் உடைந்து விட்டதாகத் தெரிகிறது.

பதம் 1.17.25
இதானீம் தர்ம பாதஸ் தே ஸத்யம் நிர்வர்தயேத் யத:
தம் ஜிக்ருக்ஷதி அதர்மோ ‘யம் அன்ருதேனைதித: கலி:

இதானீம்-தற்போது; தர்ம-தர்ம தேவதை; பாத:-கால்; தே- உன்னிடமிருந்து ; ஸத்யம் உண்மை; நிர்வர்தயேத்-எப்படியோ நொண்டி நொண்டி நடக்கிறாய்; யத:- எதனால்; தம்-அந்த; ஜிக்ருக்ஷதி—அழித்துவிட முயல்கிறான்; அதர்ம:-அதர்மபுருஷன்; அயம் — இந்த; அன்ருதேன—வஞ்சகமாக; ஏதித:-செழிப்படைந்து வரும்; கலி:- கலி புருஷன்.

இப்பொழுது உண்மை எனும் உனது ஒரே காலினால் நீ எப்படியோ நடமாடி வருகிறாய். ஆனால் வஞ்சகமாக செழிப்படைந்து வரும் கலி புருஷன் அந்த காலையும் அழித்துவிட முயலுகின்றான்.

பதம் 1.17.26
இயம் ச பூமிர் பகவதா ஞாஸிதோரு-பரா ஸதீ
ஸ்ரீமத்பிஸ் தத்-பத-ஞாஸை: ஸர்வத: க்ருதகௌ துகா

இயம்-இந்த; ச-மேலும்; பூமி:- நிலப்பரப்பில்;, பகவதா— பரம புருஷரால்; ஞாஸித-சொந்தமாகவும் மற்றவர்களாலும் செய்யப்பட்டதால்; உரு-பெரும்; பரா-பாரம்; ஸ—அப்படிச் செய்ததால்; ஸ்ரீமத்பி:-சர்வ மங்களகரமானவரால்; பத-ஞாஸை:- அடிச்சுவடுகள்; தத்—அந்த; ஸர்வத:- சுற்றிலும்; க்ருத- செய்யப்பட்டது; கெளதுகா—நல்லதிர்ஷ்டம்.

பரம புருஷராலும் மற்றவர்களாலும் பூமியின் பாரம் குறைந்ததில் சந்தேகமில்லை. பூமியில் அவர் அவதரித்திருந்த போது, மங்களகரமான அவரது அடிச்சுவடுகளினால் எல்லா நன்மைகளும் நிகழ்ந்தன.

பதம் 1.17.27
சோசதி அஸ்ரு-கலா ஸாத்வீ துர்பகேவோக்ஜிதா ஸதீ
அப்ரஹ்மண்யா ந்ருப-வ்யாஜா: சூத்ரா போக்ஷ்யந்தி மாம் இதி

சோசதி-விசனப்படுகிறாள்;அஸ்ரு-கலா-கண்களில்கண்ணீருடன்; ஸாத்வீ-குற்றமற்ற; துர்பகா—பெரும் துர்பாக்கியசாலியைப் போல்; இவ-போல்; உஜ்ஜிதா-கைவிடப்பட்ட; ஸ—அப்படிச் செய்ததால்; அப்ரஹ்மண்யா—பிராமண பண்பாடின்றி; ந்ருப-வ்யாஜா:-அரசனைப் போல் நடிக்கும்; மாம்—என்னை; இதி—இவ்வாறு.

துரதிர்ஷ்டவசமாக பரம் புருஷரால் கைவிடப்பட்ட குற்றமற்ற பூமிதேவி, இப்பொழுது அரசர்களைப் போல் நடிக்கும் தாழ்ந்த பிரிவினரால் ஆண்டு அனுபவிக்கப்படுவதால், தனது எதிர்காலத்தை எண்ணி கண்களில் கண்ணீருடன் வருந்திக் கொண்டிருக்கிறாள்.

பதம் 1.17.28
இதி தர்மம் மஹீம் சைவ ஸாந் த்வயித்வா மஹா-ரத:
நிசாதம் -ஆத்தே கட்கம் கலயே தர்ம ஹேதவே

இதி- இவ்வாறாக; தர்மம்- தர்ம தேவதை: மஹீம்- பூமி தவிரவும்: ஏவ- அவ்வாறு: ஸாந்த்வயித்வா- சமாதானப்படுத்தியபின்: மஹா-ரத:-ஆயிரக்கணக்கான போரிடக்கூடியவரான எதிரிகளுடன் தனித்து நின்று தளபதி: நிசாதம் – கூர்மையான: ஆததே-கையிலெடுத்தார்; கட்கம்—உடைவாளை; கலயே-கலி புருஷனைக் கொல்ல; அதர்ம-அதர்மம்; ஹேதவே-மூல காரணம்.

இவ்வாறாகஆயிரம் எதிரிகளுடன் தனித்து போரிடக்கூடியவரான பரீட்சித்து மகாராஜன், தர்ம தேவதையையும், பூமி தேவியையும் சமாதானப்படுத்தினார். பிறகு எல்லா அதர்மங்களுக்கும் நின்று காரணமான கலி புருஷனைக் கொன்றுவிட தமது கூரிய உடைவாளை எடுத்தார்.

பதம் 1.17.29
தம் ஜிகாம்ஸும் அபிப்ரேத்ய விஹாய ந்ருப-லாஞ்சனம்
தத்-பாத-மூலம் சிரஸா ஸமகாத் பய-விஹ்வல:

தம்- அவனை: ஜிகாம்ஸும்—கொல்லப் போகிறார்; அபிப்ரேத்ய- என்பதை நன்கறிந்து; விஹாய-களைந்து விட்டு: ந்ருப-லாஞ்சனம்- ஓர் அரசரின் உடையை; தத்-பாத-மூலம்—அவரது பாதங்களில்; சிரஸா-சிரம் தாழ்த்தி; ஸமகாத்—முழுமையாக சரணடைந்தான்: பய- விஹ்வல:-பயத்தினால்.

அரசர் தன்னை கொல்லப் போகிறார் என்பதைப் புரிந்துகொண்ட கலி புருஷன் உடனே அரச உடையைக் களைந்து, அச்சத்துடன் சிரம் தாழ்த்தி, அவரிடம் முழுமையாக சரணடைந்தான்.

பதம் 1.17.30
பதிதம் பாதயோர் வீர க்ருபயா தீன-வத்ஸல
சரண்யோ நாவதீச் ச்லோக்ய ஆஹ சேதம் ஹஸன் இவ

பதிதம்-இழிவடைந்த; பாதயோ:-பாதங்களில்; க்ருபயா-கிருபையினால்; தீன-வத்ஸல: தீனமானவர்களிடம் அன்பு கொண்டவர்; சரண்ய:-சரணாகதியை ஏற்றுக்கொள்ளும் தகுதியுடையவர் ; வீர-வீரர்; ந-இல்லை; அவதீத்- கொன்றார்; ஸ்லோக்ய- புகழ்பாடத் தகுதியுடையவர்: ஆஹ- கூறினார்: ச-மேலும்: இதம்- இந்த: ஹஸன்- புன்னகை செய்தார்; இவ -போல்.

சரணாகதியை ஏற்கும் தகுதி படைத்தவரும், சரித்திரத்தில் புகழ்ந்து பாடத் தகுந்தவருமான பரீட்சித்து மகாராஜன், இழிவடைந்தவனும், சரணடைந்தவனுமான கலியைக் கொல்லவில்லை. மாறாக தீனமானவர்களிடம் அவர் அன்பு கொண்டவர் என்பதால், இரக்கத்துடன் புன்னகை செய்தார்.

பதம் 1.17.31
ராஜா உவாச
ந தே குடாகேச-யசோ-தராணாம்
பத்தாஞ்சலேர் வை பயம் அஸ்தி கிஞ்சித்
ந வர்திதவ்யம் பவதா கதஞ்சன
க்ஷேத்ரே மதீயே த்வம் அதர்ம-பந்து:

ராஜாஉவாச-அரசர்கூறினார்;ந -இல்லை; தே- உனது ; குடாகேச- அர்ஜுனன்; யசதராணாம்- பரம்பரை முறையில் புகழ்பெற்ற எங்களின்; பத்த-அஞ்சலே:-கூப்பிய கரங்களுடன் உள்ளவன்; வை- நிச்சயமாக; பயம்—பயம்; அஸ்தி – -உள்ளது; கிஞ்சித்- சிறிதுகூட; ந-அல்லது; வர்திதவ்யம்-உயிர் வாழ அனுமதிக்க முடியும்; பவதா -உன்னால்; கதஞ்சன- எல்லா வழிகளாலும்; க்ஷேத்ரே-நிலத்தில்; மதீயே-எனது இராஜ்ஜியத்தில்; த்வம்-நீ; அதர்ம-பந்து—அதர்மத்தின் நண்பனான.

இவ்வாறாக அரசர் கூறினார்: அர்ஜுனனின் பரம்பரைப் புகழை பெற்றவர்கள் நாங்கள்; எனவே கூப்பிய கரங்களுடன் நீ சரணாகதி அடைந்திருப்பதால், உன் ஆனால் உயிருக்காக நீ அஞ்ச வேண்டிய அவசியமில்லை. நீ அதர்மத்தின் நண்பனென்பதால், என்னுடைய இராஜ்ஜியத்தில் நீ இருக்க முடியாது.

பதம் 1.17.32
த்வாம் வர்தமானம் நர-தேவ-தேஹேஷு
அனுப்ரவ்ருத்தோ “யம் அதர்மபூக:
லோபோ ‘ன்ருதம் சௌர்யம் அநார்யம் அம்ஹோ
ஜ்யேஷ்டா ச மாயா கலஹஸ் ச தம்ப:

த்வாம்-நீ; வர்தமானம்- இருக்கும்போது; நர-தேவ-ஒரு மனித தெய்வம் அல்லது ஓரரசர்; தேஹேஷு-உடலில்; அனுப்ரவ்ருத்த- எல்லா இடங்களிலும் நிகழ்கிறது; அயம்- இவை அனைத்தும்; பூக:-பெருமளவில்; லோப-அதர்ம-அதர்மக் பேராசை; அன்ருதம்-பொய்மை; சௌர்யம்—கொள்ளை; அநார்யம்- அநாகரிகம்; அம்ஹ:- நம்பிக்கைத் துரோகம்; ஜ்யேஷ்டா— துரதிர்ஷ்டம்; ச-மேலும்; மாயா—ஏமாற்று; சுலஹு:—-கலகம்; ச- மேலும்; தம்ப:- தற்பெருமை.

அதர்மனான கலி புருஷனை ஒரு மனித தெய்வமாக அல்லது தலைமை நிர்வாகியாக செயற்பட அனுமதித்தால், பேராசை; நேர்மையின்மை, கொள்ளை, அநாகரிகம், நம்பிக்கைத் துரோகம், துரதிர்ஷ்டம், ஏமாற்று, கலகம் மற்றும் தற்பெருமை ஆகியவற்றைப் போன்ற அதர்மக் கொள்கைகள் நிச்சயமாக நிரம்பியிருக்கும்.

பதம் 1.17.33
ந வர்திதவ்யம் தத் அதர்ம-பந்தோ
தர்மேண ஸத்யேன ச வர்திதவ்யே
ப்ரஹ்மாவர்தே யத்ர யஜந்தி யக்ஞைர்
யக்ஞேஸ்வரம் யக்ஞ-விதான-விக்ஞா:

ந-இல்லை; அதர்ம-அதர்மம்; வர்திதவ்யம்- இருக்கத் தகுதி; பந்தோ-நண்பன்; தத்—ஆகவே; தர்மேண-மதத்துடன்; ஸத்யேன—உண்மையுடன்; ச-மேலும்; வர்திதவ்யே-இருப்பதால்; ப்ரஹ்ம-ஆவர்தே-யாகம் செய்யப்படும் இடம்; யஜந்தி-முறையாக நடத்தும்; யத்ர — எங்கு; யக்ஞை-யாகங்களால் அல்லது பக்தித் தொண்டால்; யக்ஞ-ஈஸ்வரம்-முழுமுதற் கடவுளாகிய பரம புருஷருக்கு; யக்ஞ-யாகம்; விதான-பரப்பும்; விக்ஞா:-நிபுணர்கள்.

எனவே, அதர்மத்தின் நண்பனே, பரம புருஷரின் திருப்திக்காக, சமயக் கொள்கைகளுக்கும், சத்தியத்திற்கும் ஏற்ப நிபுணர்கள் யாகமியற்றும் இடத்தில் இருப்பதற்கு உனக்குத் தகுதியில்லை.

பதம் 1.17.34
யஸ்மின் ஹரிர் பகவான் இஜ்யமான
இஜ்யாதிம-மூர்திர் யஜதாம் சம் தனோதி
காமான் அமோகான் ஸ்திர-ஜங்கமானாம்
அந்தர் பஹிர் வாயுர் இவைஷ ஆத்மா

யஸ்மின்- அத்தகைய யாகச் சடங்குகளில்; ஹரி–பரம புருஷர்; பகவான்- பகவான்; இஜ்யமான- வழிபடப்படுகிறார்; ஆத்ம-வழிபாட்டுக்குரிய எல்லா மூர்த்திகளுக்கும் ஆத்மா: மூர்தி-உருவங்களில்; யஜதாம்-வணங்குபவர்கள்: சம்- நலம்: தனோதி- பரவுகிறது; காமான்- ஆசைகள்; அமோகான்-மீறக்கூடாத; ஸ்திர- ஜங்கமானாம்-அசைவன அசையாதன ஆகிய அனைத்தின்; அந்த:-உள்ளும்; பஹி:–புறமும்; வாயு: காற்று: இவ-போல்; ஏஷ-அவர்கள் அனைவரின்: ஆத்மா-ஆத்மா.

யாகச் சடங்குகளில், சில சமயங்களில் ஒரு தேவர் வழிபடப்பட்டபோதிலும், பரம புருஷ பகவானுடன் வழி படப்படுகிறார். ஏனெனில், அவர் அனைவரிலும் பரமாத்மாவாகவும் காற்றைப் போல் உள்ளும், புறமும் இருப்பவராகவும் இருக்கிறார். எனவே வழிபடுபவருக்கு எல்லா நன்மைகளையும் அளிப்பவர் அவரேயாவார்.

பதம் 1.17.35
ஸூத உவாச
பரீக்ஷிதைவம் ஆதிஷ்ட: ஸ கலிர் ஜாத-வேபது:
தம் உத்யதாஸிம் ஆஹேதம் தண்ட-பாணிம் இவோத்யதம்

ஸூத உவாச-ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; பரீக்ஷிதா-பரீட்சித்து மகாராஜனால்; ஏவம்- இவ்வாறாக ; ஆதிஷ்ட:-உத்தரவிடப்பட்டு; ஸ-அவன்; கலி:-கலி புருஷன்; ஜாத-இருந்து; வேபது:-நடுங்கும்; தம்—அவனை; உத்யத-உயர்த்தினார்; அஸிம்- வாளை; கூறினான்; இதம்-இந்த; தண்ட-பாணிம்- மரணதேவரான யமராஜன்; இவ-போல்; உத்யதம்—தயாராக இருந்தார்.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனால் இவ்வாறு உத்தரவிடப்பட்ட கலி புருஷன், பயத்தால் நடுங்க ஆரம்பித்தான். தன்னைக் கொல்ல யமராஜனைப் போல் தன் முன் நிற்கும் அரசரைப் பார்த்து, கலி பின்வருமாறு பேசினான்.

பதம் 1.17.36
கலிர் உவாச
யத்ர க்வ வாத வத்ஸ்யாமி ஸார்வ-பௌம தவாக்ஞயா
லக்ஷயே தத்ர தத்ராபி த்வாம் ஆத்தேஷு-சராஸனம்

கலி உவாச- கலி புருஷன் கூறினான்: யத்ர-எங்கும்; க்வ-எல்லா இடங்களிலும்; வா—அல்லது; அத-என்றாலும்; வத்ஸ்யாமி- நான் வாழ முடியும்; ஸார்வ-பௌம பூமியின் எஜமானனே (பேரரசே); தவ-உங்களுடைய; ஆன்ஞாயா—உத்தரவுப்படி; காண்கிறேன்; தத்ர தத்ர—எல்லா இடங்களிலும்: அபி லக்ஷ்யே-நான் கூட; த்வாம் மாட்சிமை தாங்கிய அரசே; ஆத்த—ஆளப்படுகிறது; கிஷு—அம்புகள்: சராஸணம்—வில்கள்.

மாட்சிமை தாங்கிய அரசே, தங்களுடைய உத்தரவுப்படி எங்கு வேண்டுமானாலும் என்னால் வாழ முடியும் என்றாலும், நான் காணும் இடங்களிலெல்லாம் தாங்கள் வில்லுடனும், அம்புகளுடனும் நிற்பதைத் தவிர வேறெதையும் என்னால் காண முடியவில்லை.

பதம் 1.17.37
தன் மே தர்ம-ப்ருதாம் ஸ்ரேஷ்ட ஸ்தானம் நிர்தேஷ்டும் அர்ஹஸி
யத்ரைவ நியதோ வத்ஸ்ய ஆகிஷ்டம்ஸ் தே ‘நுசாஸனம்

தத்—எனவே; மே-எனக்கு; தர்ம-ப்ருதாம்—சமயக் காவலர்களிலேயே ; ஸ்ரேஷ்ட-முதன்மையானவரே ; நிர்தேஷ்டும்—உறுதி செய்யுங்கள்; அர்ஹஸி-அப்படிச் செய்வீராக; யத்ர-எங்கு; ஸ்தானம்- இடம்; ஏவ- நிச்சயமாக; நியத:-நிரந்தரமாக; வத்ஸ்யே- வாழக்கூடிய; ஆதிஷ்டன்-நிரந்தரமாக உள்ள; தே-தங்களுடைய; அநுசாஸனம்-தங்களுடைய ஆட்சியின் கீழ்.

எனவே, சமயக் காவலர்களில் தலைமையானவரே, தங்களுடைய அரசாங்கத்தின் பாதுகாப்பில் நான் நிரந்தரமாக வாழக்கூடிய ஓரிடத்தை தயவுசெய்து உறுதி செய்து விடுங்கள்.

பதம் 1.17.38
ஸூத உவாச
அப்யர்திதஸ் ததா தஸ்மை ஸ்தானானி கலயே ததௌ
த்யூதம் பானம் ஸ்த்ரிய: ஸுனா யத்ராதர்மஸ் சதுர்-வித:

ஸூத உவாச-சூத கோஸ்வாமி கூறினார்; அப்யர்தித-இவ்வாறு வேண்டிக் கொள்ளப்பட்டதும்;ததா-அப்போது; தஸ்மை- அவனுக்கு; ஸ்தானானி-இடங்கள்; கலயே-கலி அவனுக்கு அனுமதியளித்தார்; த்யூதம்- புருஷனுக்கு; ததௌ -சூது; பானம்—குடிப்பழக்கம்: ஸ்த்ரிய:-பெண்களுடனான தீய உறவு; ஸுனா—மிருகவதை; யத்ர- எங்கெல்லாம்; அதர்ம:-பாவச் செயல்கள்; சதுர்-வித:-நான்கு வகையான.

சூத கோஸ்வாமி கூறினார்: கலி புருஷனால் இவ்வாறு வேண்டிக் கொள்ளப்பட்ட பரீட்சித்து மகாராஜன், சூது, குடி, விபச்சாரம் மற்றும் மிருக வதை ஆகியவை நடைபெறும் இடங்களில் வாழ அவனுக்கு அனுமதியளித்தார்.

பதம் 1.17.39
புனஸ் ச யாச மானாய ஜாத-ரூபம் அதாத் ப்ரபு:
ததோ ‘ன்ருதம் மதம் காமம் ரஜோ வைரம் ச பஞ்சமம்

புன:-மீண்டும்; ச-மேலும்; யாசமானாய-யாசகனுக்கு: ஜாத ரூபம்- தங்கம்; அதாத்-கொடுத்தார்; ப்ரபு:அரசர்; தத:- எதனால்; அன்ருதம்-பொய்; மதம்-குடிப்பழக்கம்; காமம்-காமம்; ரஜ- ரஜோ குணத்தின் காரணத்தால்; வைரம்-பொறாமை; ச-மேலும்; பஞ்சமம்—ஐந்தாவதான ஒன்று.

கலி புருஷன் இன்னுமொரு இடத்தை வேண்டியதால், தங்கம் இருக்கும் இடத்தில் வாழ அரசர் அவனுக்கு அனுமதியளித்தார். ஏனெனில் தங்கம் இருக்கும் இடத்தில் பொய், குடிப்பழக்கம், காமம், வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவையும் இருக்கும்.

பதம் 1.17.40
அமூனி பஞ்ச ஸ்தானானி ஹி அதர்ம-ப்ரபவ: கலி:
ஒளத்தரேயேண தத்தானி ன்யவஸத் தன்-நிதேச-க்ருத்

அமூனி- அவ்வெல்லா; பஞ்ச- ஐந்து; ஸ்தானானி—இடங்களில்; ஹி- நிச்சயமாக; அதர்ம-அதர்மக் கொள்கைகள்; ப்ரபவ:-தூண்டும்; கலி:- கலி யுகம்; ஒளத்தரேயேண—உத்தரையின் மகனால்; தத்தானி- அளிக்கப்பட்டது; ன்யவஸத்—வாழ்ந்தான்; தத்-அவரால்; நிதேச க்ருத்—உத்தரவிட்டார்.

இவ்வாறாக உத்தரையின் மகனான பரீட்சித்து மகாராஜனின் உத்தரவுப்படி, கலி புருஷன் அவ்வைந்து இடங்களிலும் வாழ அனுமதிக்கப்பட்டான்.

பதம் 1.17.41
அதைதானி ந ஸேவேத புபூஷு: புருஷ: க்வசித்
விசேஷதோ தர்ம-சீலோ ராஜா லோக-பதிர் குரு:

அத-எனவே; ஏதானி-இவ்வெல்லா; ந-ஒருபோதும் கூடாது; ஸேவேத-தொடர்புகொள்ள; புபூஷு:-நல்வாழ்வை விரும்புபவர்கள்; புருஷ:- நபர்; க்வசித்- எச்சூழ்நிலையிலும்; விசேஷத:-முக்கியமாக; தர்மசீல:-முன்னேற்றமான முக்தி வழியில் செல்பவர்கள்; ராஜா- அரசர்; லோகபதி:-ஜன சமூகத் தலைவர்; குரு-பிராமணர்கள் மற்றும் சந்நியாசிகள்.

எனவே, முன்னேற்றமான நல்வாழ்வை விரும்புபவர்கள், முக்கியமாக அரசர்கள், சமயவாதிகள், ஜன சமூகத் தலைவர்கள், பிராமணர்கள் மற்றும் சந்நியாசிகள் ஆகியோர் மேற்குறிப்பிட்ட நான்கு அதர்மக் கொள்கைகளுடன் ஒருபோதும் தொடர்புகொள்ளக் கூடாது.

பதம் 1.17.42
வ்ருஷஸ்ய நஷ்டாம்ஸ் த்ரீன் பாதான் தப: சௌசம் தயாம் இதி
ப்ரதிஸந்தத ஆஸ்வாஸ்ய மஹீம் ச ஸமவர்தயத்

வ்ருஷஸ்ய – எருதின் (தர்மதேவதை) ; நஷ்டான்—இழந்த; த்ரீன்— மூன்று; பாதான்-கால்கள்; தப: தவம்; செளசம்- தூய்மை; தயாம் – தயை; இதி- இவ்வாறாக; ப்ரதிஸந்ததே-நிலைநாட்டினார்; ஆஸ்வாஸ்ய- செயல்களை உற்சாகப்படுத்துவதன் மூலம்; மஹீம்- பூமி;ச -மேலும்; ஸமவர்தயத்-பூரணமாக விருத்தியடையச் செய்தார்.

அதன் பிறகு, அரசர், தர்மதேவதை (எருது) இழந்திருந்த மூன்று கால்களை மீண்டும் கூடும்படிச் செய்தார். மேலும் செயல்களுக்கு உற்சாகமூட்டுவதன் மூலம் பூமியின் நிலையையும் அவர் நன்கு விருத்தியடையச் செய்தார்.

பதங்கள் 1.17.43 – 1.17.44
ஸ ஏஷ ஏதர்ஹி அத்யாஸ்த ஆஸனம் பார்திவோசிதம் பிதாமஹேனோபன்யஸ்தம் ராஜ்னாரண்யம் விவிக்ஷதா

ஆஸ்தே ‘துனா ஸ ராஜர்ஷி: கௌர வேந்ர-ஸ்ரீயோல்லஸன்
கஜாஹ்வயே மஹா-பாகஸ் சக்ரவர்தீ ப்ருஹச்-ச்ரவா:

ஸ—அவர்; ஏஷ-இந்த; ஏதர்ஹி—தற்போது; அத்யாஸ்-தே-ஆட்சி புரிகிறார்; ஆஸனம்-சிம்மாசனம்; பார்திவ-உசிதம்—ஓரரசருக்கு ஏற்ற முறையில்; பிதாமஹேன-பாட்டனாரால்; உபன்யஸ்தம்— ஒப்படைக்கப்பட்டு; ராஜ்னா—அரசரால்; அரண்யம்- காடு; விவிக்ஷதா—விரும்பி; ஆஸ்தே-இருக்கிறார்; அதுனா—தற்போது; ஸ—அந்த; ராஜ-ரிஷி-ராஜ ரிஷியான; கௌரவஇந்ர-குரு வம்சத்தில் தலைமையானவர்; ஸ்ரீயா-பெருமைகள்; உல்லஸன்-பரவும்; கஜாஹ்வயே-ஹஸ்தினாபுரத்தில்; மஹா-பாக-மகா பாக்கியசாலி: சக்ரவர்தீ-சக்கரவர்த்தி; ப்ருஹத்-ஸ்ரவா:-பெரும் புகழ் பெற்றார்.

நாட்டைத் துறந்து காட்டிற்குச் செல்ல விரும்பிய யுதிஷ்டிர மகாராஜன், ஹஸ்தினாபுர இராஜ்ஜியத்தை, மகா பாக்கியசாலியும், சக்கரவர்த்தியுமான பரீட்சித்து மகாராஜனிடம் ஒப்படைத்தார். பரீட்சித்து மகாராஜன் குரு வம்சத்து அரசர்களின் செயல்களால் வாழ்த்தப்படுவதால், இப்பொழுது அவர் பெரும் வெற்றியுடன் உலகை ஆண்டு வருகிறார்.

பதம் 1.17.45
இத்தம்-பூதானுபாவோ ‘யம் அபிமன்யு-ஸுதோ ந்ருப:
யஸ்ய பாலயத: க்ஷௌணீம் யூயம் ஸத்ராய தீக்ஷிதா:

இத்தம்-பூத—இதனால்; அனுபாவ:-அனுபவம்; இதில்; அபிமன்யுஸுத—அபிமன்யு புத்திரர்; ந்ருப:-அரசர்; யஸ்ய அயம் யாருடைய; பாலயத:-அவரது ஆட்சியின் காரணத்தால்; க்ஷௌaம் பூமியில் ; யூயம்-நீங்களனைவரும் ; ஸத்ராய- யாகங்களைச் செய்வதில்; தீக்ஷிதா:- துவக்கி இருக்கிறீர்கள்.

அபிமன்யு புத்திரரான பரீட்சித்து மகாராஜன் சிறந்த அனுபவசாலியாவார். அவரது சீரிய ஆட்சி முறையாலும், ஆதரவாலும் தான், இத்தகைய ஒரு யாகத்தை நீங்கள் செய்வது சாத்தியமாகியுள்ளது.


ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “கலி பெற்ற தண்டனையும் பரிசும்” எனும் தலைப்பைக் கொண்ட, பதினேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare