அத்தியாயம் – 15
பாண்டவர்களின் துறவு
பதம் 1.15.1
ஸூத உவாச
ஏவம் கிருஷ்ண-ஸக: க்ருஷ்ணோ ப்ராத்ரா ராஜ்னா விகல்பித:
நானா-சங்காஸ்பதம் ரூபம் க்ருஷ்ண-விஸ்லேஷ-கர்ஷித:
ஸூத உவாச- சூத கோஸ்வாமி கூறினார்; ஏவம்- இவ்வாறு; க்ருஷணஸக-கிருஷ்ணரின் புகழ்பெற்ற நண்பன்; க்ருஷ்ண- அர்ஜுனன்; ப்ராத்ரா—அவரது மூத்த சகோதரர்; ராஜ்னா-யுதிஷ்டிர மகாராஜன்; விகல்பித- கற்பனை செய்தார்; நானா-பலவாறு; சங்க ஆஸ்பதம்—பல சந்தேகங்களின் அடிப்படையில்; ரூபம்-உருவங்கள்; க்ருஷ்ண-பகவான்- ஸ்ரீ கிருஷ்ணர்; விஸ்லேஷ-பிரிவுணர்ச்சிகள்; கர்ஷித—பெரும் துக்கத்திற்கு உள்ளானார்.
சூத கோஸ்வாமி கூறினார்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புகழ்பெற்ற நண்பனான அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணரை விட்டுப் பிரிந்ததால் பெருந்துக்கத்திற்கு ஆளானார். இது யுதிஷ்டிர மகாராஜனின் கற்பனையான விசாரணைகளையும் மீறியதாக இருந்தது.
பதம் 1.15.2
சோகேன சுஷ்யத்-வதன-ஹ்ருத்-ஸரோஜோ ஹத-ப்ரப:
விபும் தம் ஏவானுஸ்மரன் நாசக்னோத் ப்ரதிபாஷிதும்
சோகேன-சோகத்தினால்; சுஷ்யத்வதன—உலர்ந்து வாய்; ஹ்ருத்ஸரோஜ:-தாமரை போன்ற இதயம்; ஹத-இழந்தன; ப்ரப:-ஒளியை; விபும்- பரமன்; தம்-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை; ஏவ-நிச்சயமாக; அனுஸ்மரன்—தனக்குள் நினைந்து ; ந அசக் நோத் -இயலவில்லை; ப்ரதிபாஷிதும்-சரியாக பதிலளிக்க.
துக்கத்தினால் அர்ஜுனனின் வாயும், தாமரை போன்ற இதயமும் உலர்ந்துவிட்டன. இதனால் அவரது உடல் ஒளியை இழந்தது. இப்பொழுது பரம புருஷரை நினைவுபடுத்திக் கொண்ட அவரால், பதிலாக ஒரு சொல்லைக்கூட சரியாக உச்சரிக்க இயலவில்லை.
பதம் 1.15.3
க்ருச்ரேண ஸம்ஸ்தப்ய சுச: பாணினாம்ருஜ்ய நேத்ரயோ:
பரோக்ஷேண ஸமுன்னத்த-ப்ரணயௌத்கண்ட்ய-காதர:
க்ருச்ரேண -மிகவும் சிரமத்துடன்; ஸம்ஸ்தப்ய-சக்தியை தடுத்து நிறுத்துவதால்; சுச-துயரத்தின்; பாணினா—அவரது கரங்களால்; ஆம்குஜ்ய- மறைத்து; நேத்ரயோ:-கண்கள்; பரோக்ஷேண- மறைந்துவிட்டதால்; ஸமுன்னத்த- இன்னும் அதிகமாக: ப்ரணய ஒளத்கண்ட்ய-அன்பை ஆவலுடன் எண்ணிப் பார்த்து; காதர- துன்பப்பட்டார்.
அவர் மிகவும் சிரமத்துடன், கண்களை மறைத்த துன்பக் கண்ணிரை தடுத்து நிறுத்தினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கண் பார்வையிலிருந்து மறைந்து போனதால், பெருந்துயரத்தில் ஆழ்ந்த அவர், பகவானிடமுள்ள அன்பு அதிகரிப்பதை உணர்ந்தார்.
பதம் 1.15.4
ஸக்யம் மைத்ரீம் ஸௌஹ்ருதம் ச ஸாரத்யாதிஷு ஸம்ஸ்மரன்
ந்ருபம் அக்ரஜம் இதி ஆஹ பாஷ்ப-கத்கதயா கிரா
ஸக்யம்—சிநேகமான; மைத்ரீம்-ஆசி; ஸௌஹ்ருதம்- நெருங்கிய உறவு கொண்ட; ச-மேலும்; ஸாரத்ய – ஆதிஷு- சாரதி ஆவதில்; ஸம்ஸ்மரன்-இவற்றையெல்லாம் நினைத்து; ந்ருபம்—அரசரிடம்; அக்ரஜம்-மூத்த சகோதரர்; இதி-இவ்வாறு; பாஷ்ப-பெருமூச்சுடன்; கத்கதயா—-ஆழ்ந்து; கிரா-பேச்சுக்களால். ஆஹ-கூறினார்;
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நல்லாசிகளையும், சிநேகத்தையும், நெருங்கிய குடும்ப உறவுகளையும் மற்றும் அவரது தேரோட்டும் பணியையும் நினைவுகூர்ந்த அர்ஜுனன் சோகத்தில் அமிழ்ந்து, பெருமூச்சுடன் பேசத் துவங்கினார்.
பதம் 1.15.5
அர்ஜுன உவாச
வஞ்சிதோ ‘ஹம் மஹா-ராஜ ஹரிணா பந்து-ரூபிணா
யேன மே ‘பஹ்ருதம் தேஜோ தேவ-விஸ்மாபனம் மஹத்
அர்ஜுன உவாச—அர்ஜுனன் கூறினார்; வஞ்சித்:-அவரால் விட்டுச் செல்லப்பட்டேன்; அஹம்-நான்; மஹாராஜ-அரசே; ஹரிணா- பரம புருஷ பகவானால்; பந்து-ரூபிணா-ஒரு நெருங்கிய நண்பனைப் போல்;யேன-யாரால்; மே-எனது ; அபஹ்ருதம்—இழந்தவனானேன்; தேஜ:-சக்தியை; தேவ-தேவர்களையும்; விஸ்மாபனம்—அதிசயிக்கச் செய்யும்; மஹத்-பிரமிக்கச் செய்யும்.
அர்ஜுனன் கூறினார்: அரசே என்னை ஓர் ஆத்ம நண்பனைப் போலவே பாவித்த பரம புருஷ பகவான் ஹரி என்னைத் தனியாக விட்டுச் சென்றுவிட்டார். இவ்வாறாக, தேவர்களையும் வியப்பில் ஆழ்த்திய எனது அற்புத சக்தியையும் இழந்தேன்.
பதம் 1.15.6
யஸ்ய க்ஷண-வியோகேன லோகோ ஹி அப்ரிய-தர்சன:
உக்தேன ரஹிதோ ஹி ஏஷ ம்ருதக: ப்ரோச்யதே யதா
யஸ்ய-யாருடைய; க்ஷண- நொடிநேரம்; வியோகேன— பிரிவால்; லோக:- எல்லா பிரபஞ்சங்களும்; ஹி- நிச்சயமாக; அப்ரிய-தர்சன:-அனைத்தும் விரோதமாகவே காணப்படுகின்றன; உக்தேன-உயிரால்; ரஹித:-இல்லாததால்; ஹிநிச்சயமாக; ஏஷ- இவ்வெல்லா உடல்களும்; ம்ருதக:-உயிரற்ற உடல்கள்; ப்ரோச்யதே குறிப்பிடப்படுகின்றன; யதா-என்பதுபோல்.
யாருடைய நொடிநேரப் பிரிவுகூட, எல்லா பிரபஞ்சங்களையும், உயிரற்ற உடல்களைப் போல் சூனியமாகவும், அர்த்தமற்றவையாகவும் மாற்றிவிடுமோ, அவரை நான் இழந்து விட்டேன்.
பதம் 1.15.7
யத்ஸம்ஸ்ரயாத் த்ருபத-கேஹம் உபாகதானாம்
ராஜ்னாம் ஸ்வயம்வர-முகே ஸ்மர-துர்மதானாம்
தேஜோ ஹ்ருதம் கலு மயாபிஹதஸ் ச மத்ஸ்ய:
ஸஜ்ஜீக்குதேன தனுஷாதிகதா ச க்ருஷ்ணா
யத்-ஸம்ஸ்ரயாத்-யாருடைய கருணைமிக்க பலத்தால்; த்ருபத- துருபத ராஜனின் அரண்மனையில்; உபாகதானாம் – கேஹம்- கூடியிருந்தவர்களை; ராஜ்னாம்—இளவரசர்களின்; ஸ்வயம்வரமுகே- சுயம்வர சடங்கில்; ஸ்மரதுர்மதானாம்—மனதில் துராசை கொண்ட அவர்கள் அனைவரும்; தேஜ:-சக்தி; ஹ்ருதம்- தோற்கடித்தேன்; கலு— அதுபோல்; மயா-என்னால்; அபிஹத- துளைத்தேன்; ச-மேலும்; மத்ஸ்ய:-மீன் குறியை; ஸஜ்ஜீக்ருதேன-வில்லைப் பொருத்தி; தனுஷா-அந்த வில்லினாலும் கூட; அதிகதா-அடைந்தேன்; ச-கூட; க்ருஷ்ணா-திரௌபதி.
துருபத ராஜனின் அரண்மனையில், சுயம்வர சடங்கில் பங்கேற்கக் கூடியிருந்த சிற்றின்ப இச்சை கொண்ட இளவரசர்களை, கருணையுடன் அவரளித்த பலத்தைக் கொண்டுதான் என்னால் வெல்ல முடிந்தது. அத்துடன் என் அம்பினால் மீன் குறியைத் துளைத்து, திரௌபதியையும் என்னால் அடைய முடிந்தது.
பதம் 1.15.8
யத்-ஸன்னிதாவ் அஹம் உ காண்டவம் அக்னயே ‘தாம்
இந்ரம் ச ஸாமரகணம் தரஸா விஜித்ய
லப்தா ஸபா மயக்ருதாத்புதசில்பமாயா
திக்பியோ ‘ஹரன் நீருபதயோ பலிம் அதிவரே தே
ய-யாருடைய: ஸன்னிதௌ – அருகில் இருந்ததால்; அஹம்- எனக்கு; உ-ஆச்சரியக்குறி: காண்டவம்- பாதுகாக்கப்பட்ட இந்திரனின் வனம்; அக்னயே-அக்னிதேவனுக்கு; அதாம்- காப்பாற்றப்பட்டான்; இந்ரம்-இந்திரன்; ச-மேலும்: ஸ-அதனுடன்; அமரகணம்- தேவர்கள்; தரஸா-மிகவும் சாமர்த்தியமாக; விஜித்ய-வென்றபின்; லப்தா—அடைந்தபின்: ஸ்பா-ராஜசபை; மயக்ருதா-மயனால் கட்டப்பட்ட; அத்புத-மிகவும் அற்புதமான: சில்ப- ஓவியமும், சிற்ப வேலையும் கொண்ட; மாயா-ஆற்றல்; திக்பிய:- எல்லா திசைகளிலிருந்தும்; அஹரன்-சேகரிக்கப்பட்ட; நீருபதயோ- எல்லா ராஜகுமாரர்களும்; பலிம்- வெகுமானங்கள்; அத்வரே-கொண்டு வந்தனர்; தே—உமது.
அவர் என்னருகில் இருந்ததால், சக்தி வாய்ந்த ஸ்வர்க ராஜனான இந்திரனையும், அவரது தேவ கணங்களையும் மிகவும் சாமர்த்தியமாக வென்று, அவருடைய காண்டவ வனத்தை அழிக்க அக்னிதேவனுக்கும் என்னால் உதவ முடிந்தது. மேலும் அவரது கருணையால்தான் மயா என்ற அரக்கனும் எரியும் காண்டவ வனத்திலிருந்து காப்பாற்றப்பட்டான். ராஜஸுய யாகத்தின்போது, அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட எந்த இடத்தில் எல்லா ராஜ குமாரர்களும் கூடி உங்களுக்குக் கப்பம் கட்டினார்களோ, அந்த ராஜசபையையும் மயானைக் கொண்டு நம்மால் கட்ட முடிந்தது.
பதம் 1.15.9
யத் – தேஜஸா ந்ருப சிரோ-‘ ங்ரிம் அஹன் மகார்தம்
ஆர்யோ ‘நுஜஸ் தவ கஜாயுத-ஸத்வ – வீர்ய:
தேனாஹ்ருதா: ப்ரமத-நாத-மகாய பூபா
யன் மோசிதாஸ் தத்-அனயன் பலிம் அத்வரே தே
யத்-யாருடைய; தேஜஸா-ஆதிக்கத்தால்; ந்ருப-சிர:-அங்ரிம்— அரசர்கள் தலை வணங்கும் பாதங்களை உடையவர்; அஹன்- கொன்றார்; மக-அர்தம் யாகத்திற்காக; ஆர்ய:-மரியாதைக்குரிய: அனுஜ:-இளைய சகோதரர்; தவ்-உங்களது; கஜ-அயுத- பத்தாயிரம் யானைகள்; ஸத்வ-வீர்ய:-உள்ள பலம்; தேன—அவரால்; ஆஹ்ருதா— சேகரித்தார்; ப்ரமத-நாத-பூதங்களின் நாதன் (மஹாபைரவர்); மகாய- பலியிடுவதற்காக; பூபா-அரசர்கள்; யத்-மோசிதா—அவர்களை விடுவித்தவரால்; தத்-அனயன்—அவர்கள் அனைவரும் கொண்டு வந்தனர்; பலிம்- கப்பங்களை; அத்வரே- செலுத்தினர்; தே- உங்களுக்கு.
பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவரான, மரியாதைக்குரிய உங்களுடைய இளைய சகோதரர் பகவானின் கருணையால் பல அரசர்களால் வணங்கப்பட்ட ஜராசந்தனைக் கொன்றார். இந்த அரசர்கள் ஜராசந்தனின் மஹாபைரவ யாகத்தில் பலியிடுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்தனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அவர்கள், பிறகு மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கப்பம் செலுத்தினர்.
பதம் 1.15.10
பத்ன்யாஸ் தவாதிமக-கில்ப்த மஹாபிஷேக
ஸ்லாகிஷ்ட-சாரு-கபரம் கிதவை: ஸபாயாம்
ஸ்ப்ருஷ்டம் விகீர்ய பதயோ பதிதாஸ்ரு-முக்யா
யஸ் ததி-ஸ்தரியோ ‘க்ருத-ஹதேச-விமுக்த-கேசா:
பத்ன்யா-மனைவியின்; தவ-உங்களுடைய: அதிமக –பெரும் யாகத்தின் போது; கில்பத வாரி- முடிக்கப்பட்ட; மஹாஅபிஷே- மிகவும் புனிதப்படுத்தப்பட்ட; ஸ்லாகிஷ்ட-இவ்வாறு புகழ்ப்பட்டது; சாரு-அழகிய; சுபரம்-கொண்டை; கிதவை:–துஷ்டர்களால், ஸபாயாம்—பெரும் சபையில்; ஸ்ப்ருஷ்டம்-பிடிக்கப்பட்டு; விரய-அவிழ்க்கப்பட்டு; பதயோ:-பாதங்களில்: பதித-அஸ்ரு-முகியா- கண்ணீரும் கம்பலையுமாக கீழே விழுந்த அவளின், ய:-அவர்; ததி—அவர்களுடைய: ஸ்த்ரிய:-மனைவிகள்; அக்ருத-ஆயினர்; ஹத ஈ—கணவன்களை இழந்த; விமுக்த- கேசா- கேசத்தை அவிழ்த்து விட்டார்.
சிறந்த ராஜஸுய யாகத்திற்காக நன்கு வாரி முடித்து புனிதப்படுத்தப்பட்டிருந்த தங்களுடைய ராணியின் கொண்டையை அவிழ்க்கத் துணிந்த அந்த துஷ்டர்களுடைய மனைவிகளின் கேசங்களை எல்லாம் அவரல்லவா அவிழ்த்து விட்டார். அச்சமயத்தில் அவள் கண்களில் கண்ணீருடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்தாள்.
பதம் 1.15.11
யோ நோ ஜுகோப வன ஏத்ய துரந்த-க்ருச்ராத்
துர்வாஸஸோ ‘ரி-ரசிதாத் அயுதாக்ர-புக் ய:
சாகான்ன-சிஷ்டம் உபயுஜ்ய யதஸ் த்ரி -லோகீம்
த்ருப்தாம் அமம்ஸ்த ஸலிலே வினிமக்ன-ஸங்க:
ய:-யாரொருவர்; ந:-நமக்கு; ஜுகோப பாதுகாப்பு அளித்தார்; வனே- வனத்தில்; ஏத்ய-ஈடுபட்டு; துரந்த-ஆபத்தான முறையில்; க்ருச்ராத்-தொல்லை; துர்வாஸஸ-துர்வாச முனிவரின்; அரி— எதிரி; ரசிதாத்—திரித்துக் கூறப்பட்ட; அயுத-பத்தாயிரம்; அக்ரபுக்- முன்னிலையில் உண்பவர்; ய:-அவர்; சாக-அன்னசிஷ்டம்-மிச்ச உணவை; உபயுஜ்ய—ஏற்றுக் கொண்ட; யத:-காரணத்தால்; த்ரி லோகம் – மூவுலகும்; த்ருப்தாம்-திருப்தியடைந்தன; அமம்ஸ்த -மனதிற்குள் எண்ணினர்; ஸலிலே-நீரில் மூழ்கியிருந்த பொழுது; வினிமக்ன-ஸங்க;- எல்லோரும் நீருக்கடியில் இருந்தனர்.
நாம் வனவாசத்தில் இருந்தபொழுது, பத்தாயிரம் சீடர்களுடன் புசிப்பவரான துர்வாச முனிவர், நமது எதிரிகளுடன் சேர்ந்து, நம்மை ஆபத்தான நிலைமையில் புகுத்துவதற்காக சதித்திட்டத்தில் ஈடுபட்டார். அச்சமயத்தில் அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) மீதி உணவை உண்டு நம்மைக் காப்பாற்றினார். இவ்வாறு அவர் உணவை உட்கொண்டதும் நதியில் குளித்துக் கொண்டிருந்த முனிவர் கூட்டம் வயிராற உண்டு திருப்தியடைந்ததுபோல் உணர்ந்தனர். மூவுலகங்களும்கூட திருப்தியடைந்தன.
பதம் 1.15.12
யத்-தேஜஸாத பகவான் யுதி சூல-பாணிர்
விஸ்மாபித: ஸகிரிஜோ ‘ஸ்த்ரம் அதான் நிஜம் மே
அன்யே ‘பி சாஹம் அமுனைவ கலேவரேண
ப்ராப்தோ மஹேந்ர-பவனே மஹத்-ஆஸனார்தம்
யத்-யாருடைய; தேஜஸா-ஆதிக்கத்தால்; அத-ஒரே சமயத்தில்; பகவான்- தெய்வீக சக்தி வாய்ந்தவர் (சிவபெருமான்); யுதி-போரில்: சூலபாணி:- சூலத்தைக் கையில் வைத்திருப்பவர்; விஸ்மாபித: ஆச்சரியமடைந்தார்; ஸகிரிஜ:-இமயமலையின் மகளுடன்: அஸ்த்ரம்- ஆயுதம்; அதாத் -அளித்தார்; நிஜம்-அவரது சொந்த: மே – எனக்கு : அன்யே அபி- அதுபோலவே மற்றவர்களும்; ச-மேலும்; அஹம்— நான்: அமுனா-இதனால்; ஏவ-உறுதியாக; கலேவரேண-உடலால்; ப்ராப்த:-அடைந்தேன்; மஹாஇந்ரபவனே-இந்திரதேவனின் வீட்டில்; மஹத்—மகத்தான; ஆஸனஅர்தம்—பாதி உயர்ந்த ஆசனம்.
அவரது ஆதிக்கத்தினால் தான், சக்தி வாய்ந்த சிவபெருமானுடன் நான் புரிந்த போரில், அவரையும், இமயமலையின் மகளான அவரது மனைவியையும் என்னால் திருப்திப்படுத்த முடிந்தது. இவ்வாறு என்னிடம் திருப்தியடைந்த அவர் (சிவபெருமான்) அவரது சொந்த ஆயுதத்தையே எனக்குப் பரிசாக அளித்தார். பிற தேவர்களும் கூட அவரவர் ஆயுதங்களை எனக்களித்தனர். அதுமட்டுமின்றி, இந்த உடலுடனேயே ஸ்வர்க லோகங்களை என்னால் அடைய முடிந்ததுடன், பாதி உயர்ந்த ஆசனமும் எனக்கு அளிக்கப்பட்டது.
பதம் 1.15.13
தத்ரைவ மே விஹரதோ புஜ-தண்ட-யுகமம்
காண்டீவ-க்ஷணம் அராதி-வதாய தேவா:
ஸேந்ரா: ஸ்ரீதா யந்-அனுபாவிதம் ஆஜமீட
தேனாஹம் அதிய முஷித: புருஷேண பூம்னா
தத்ர—அந்த ஸ்வர்க லோகத்தில்: எவ-நிச்சயமாக: மே-நான்: விஹாத விருந்தாளியா தங்கியிருந்தபொழுது; புஜகண்ட யுகமம்- எனது இரு சுரங்கள்: காண்டீவ- காண்டீவம் எனும் வில்; லக்ஷணம் – அடையாளம்; அராதி-நிவாதகவசன் எனும் அசுரன்; வதாய்—கொல்வதற்காக; தேவா:- எல்லா தேவர்களும்; ஸ-அவர்களுடன்; இந்ரா—ஸ்வர்க ராஜனான இந்திரனும் ஸ்ரீதா-புகலிடம் கொண்டனர்; யத்-யாருடையதால்; அனுபாவிதம்-சக்தியைப் பெறுவது சாத்தியமாயிற்று: ஆஜமீட -ஆஜமீட ராஜனின் குலத்தில் தோன்றியவரே; தேன-அவரால்: அஹம்-நான்; அத்ய-தற்போது: முஷித:- கைவிடப்பட்டேன்; புருஷேண-புருஷரால்: பூம்னா-பரம.
ஸ்வர்க லோகங்களில் சில நாட்கள் நான் விருந்தாளியாக தங்கியிருந்தபொழுது, நிவாதகவசன் என்ற அசுரனைக் கொல்வதற்காக, இந்திரன் உட்பட எல்லா தேவர்களும், காண்டீவ வில்லை ஏந்திய எனது கரங்களில் தஞ்சம் புகுந்தனர். அரசே, ஆஜமீட குலத் தோன்றலே, யாருடைய தூண்டுதலால் நான் அவ்வளவு சக்தி வாய்ந்தவனாக இருந்தேனோ, அந்த பரம புருஷ பகவானை இப்பொழுது நான் இழந்தவனானேன்.
பதம் 1.15.14
யத் பாந்தவா குரு-பலாப்திம் அனந்த-பாரம்
ஏகோ ரதேன ததரே’ஹம் அதீர்ய- ஸத்வம்
ப்ரத்யாஹ்ருதம் பஹு தனம் ச மயா பரேஷாம்
தேஜாவஸ்-பதம் மணிமயம் ச ஹ்ருதம் சிரோப்ய:
யத்-பாந்தவ:-யாருடைய நட்பால் மட்டுமே; குரு-பல-அப்திம்- குருக்களின் சமுத்திரம் போன்ற படைபலம்; அனந்த-பாரம்—வெல்ல முடியாத; ஏக:-தனியாக; ரதேன-இரதத்தில் அமர்ந்து; ததரே-கடக்க முடிந்தது; அஹம்—என்னால்; அதீர்ய-வெல்ல முடியாத; ஸத்வம்- சூழ்நிலைகள்; ப்ரத்யாஹ்ருதம்- திரும்பப் பெற்றுக் கொண்டேன்; பஹுட-மிக அதிகமான அளவு கொண்ட; தனம்-செல்வம்; ச-மேலும்; மயா-என்னால்; பரேஷாம்-எதிரியின்; தேஜா: -பதம் ஒளியின் பிறப்பிடம்; மணிமயம்—இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட; கூ- மேலும்; ஹ்ருதம்-பலவந்தமாக எடுத்துக் கொண்டேன்; சிரோப்ய- அவர்களது தலைகளிலிருந்து.
கௌரவர்களின் படைபலம் வெல்ல முடியாத பல சூழ்நிலைகளைக் கொண்ட ஒரு சமுத்திரத்தைப் போல் காட்சியளித்தது. எனவே அது கடக்க முடியாததாகும். ஆனால் அவரது நட்பினால், இரதத்தில் அமர்ந்திருந்த என்னால் அதைக் கடக்க முடிந்தது. மேலும் அவரது கருணையால் தான் என்னால் பசுக்களை திரும்பப் பெற முடிந்தது. தவிரவும் ஒளியின் பிறப்பிடங்களாக விளங்கிய இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட, அரசர்களின் பல கிரீடங்களை அவர்களிடமிருந்து என்னால் பறிக்க முடிந்ததற்கும் அவரது கருணை மட்டுமே காரணமாகும்.
பதம் 1.15.15
யோ பீஷ்ம-கர்ண-குரு-சல்ய-சமூஷுஅதப்ர
ராஜன்ய-வர்ய-ரத-மண்டல-மண்டிதாஸு
அக்ரேசரோ மம விபோ ரத-யூதபானாம்
ஆயுர் மனாம்ஸி ச த்ருசா ஸஹ ஓஜ ஆர்ச்சத்
ய-அவர்மட்டுமேகாரணம் ; பீஷ்ம-பீஷ்மர்;கர்ண—கர்ணன்;குரு- துரோணாச்சாரியர்; சல்ய-சல்லியன்; சமூஷு-படைப்பிரிவுகளின் நடுவில்; அதப்ர -மிகப்பெரிய; ராஜன்யவர்ய—சிறந்த அரச குமாரர்கள்; ரதமண்டல-தேர்க் கூட்டம்; மண்டிதா ஷு-அலங்கரிக்கப்பட்ட; அக்ரேசர-முன் செல்லும்; மம-எனது; விபோ-பேரரசே; ரதயூத் பானாம்- எல்லா தேரோட்டிகளும்; ஆயு—ஆயுள்; மனாம்ஸி- மனவெழுச்சிகள்; ச-மேலும்; த்ருசா-பார்வையால்; ஸஹ-சக்தி; ஓஜ-பலம்; ஆர்ச்சத்—பறித்துக் கொண்டார்.
அனைவருடைய ஆயுளையும் பறித்தவரும், பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன் போன்ற கௌரவ தலைவர்களால் அணிவகுக்கப் பட்ட பெரும் படைப் பிரிவுகளிலிருந்து மனோவன்மை, வீரியம் ஆகியவற்றைப் பறித்தவரும் அவர் ஒருவரேயாவார். அவர்களது ஏற்பாடு தீமையானதாகவும், தேவைக்கு அதிகமாகவும் இருந்த போதிலும், முன் செல்லும்பொழுது இவையனைத்தையும் அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) செய்தார்.
பதம் 1.15.16
யத்-தோஹ்ஷு மா ப்ரணிஹிதம் குரு-பீஷ்மகர்ண
நப்த்ரு-த்ரிகர்த-சல்யஸைந்தவ-பாலிகாத்யை:
அஸ்த்ராணி அமோக-மஹிமானி நிரூபிதானி
நோபஸ்ப்ருசுர் ந்ருஹரி-தாஸம் இவாஸுராணி
யத்-யாரின்கீழ்: தோஹ்ஷு-ஆயுதப் பாதுகாப்பு; மாப்ரணிஹிதம்- நான் இருந்ததால்; குரு-துரோணாச்சாரியர்; பீஷ்ம- பீஷ்மர்; கர்ண- கர்ணன்: நப்த்ரு- பூரிஸ்ரவா; த்ரிகர்த-சுசர்ம ராஜன்: சல்ய-சல்லியன்; ஸைந்தவ-ஜயத்ரத ராஜன்; பாலிகா-சந்தனு மகாராஜனின் சகோதரர் (பீஷ்மரின் தந்தை); ஆத்யை:-முதலான; அஸ்த்ராணி—ஆயுதங்கள்; அமோக-வெல்ல முடியாத; மஹிமானி-மிகவும் சக்தி வாய்ந்த; நிரூபிதானி-பிரயோகித்தனர்; ந-இல்லை; உபஸ்ப்ருசு:-தொடக்கூட; க்ருஹரிதாஸம்-நரசிம்ஹதேவரின் தொண்டர் (பிரகலாதன்); இவ-போல்; அஸுராணி—அசுரர்களால் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்கள்.
பீஷ்மர், துரோணர், கர்ணன், பூரிஸ்ரவர், சுசர்மா, சல்லியன், ஜயத்ரதன் மற்றும் பாலிகர் போன்ற சிறந்த தளபதிகள் அனைவரும் தடுக்க முடியாத அவர்களது ஆயுதங்களை என் மீது பிரயோகித்தனர். ஆனால் அவரது (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்) கருணையால், என் தலையிலுள்ள ஒரு முடியைக்கூட அவற்றால் தொட முடியவில்லை. இதைப் போலவே, பகவான் நரசிம்ஹதேவரின் பரம பக்தரான பிரகலாத மகாராஜனும் கூட அவருக்கெதிராக அசுரர்களால் உபயோகிக்கப்பட்ட ஆயுதங்களால் பாதிக்கப்படவில்லை.
பதம் 1.15.17
ஸௌத்யே வ்ருத: குமதினாத்மத ஈஸ்வரோ மே
யத்-பாத-பத்மம் அபவாய பஜந்தி பவ்யா:
மாம் ஸ்ராந்த-வாஹம் அரயோ ரதினோ புவி-ஷ்டம்
ந ப்ராஹரன் யத்-அனுபாவ-நிரஸ்த-சித்தா:
ஸௌத்யே-ஒரு தேரோட்டி சம்பந்தமாக ; வ்ருத:-ஈடுபட்டுள்ள; குமதினா—-தீய உணர்வால்; ஆத்மத-விடுவிப்பவர்; ஈஸ்வர:-பரம புருஷர்; மே- எனது; யத் — யாருடைய; பாத-பத்மம்- தாமரைப் பாதங்கள்; அபவாய-முக்தியடையும் விஷயத்தில்; பஜந்தி—தொண்டு செய்கின்றார்; பவ்யா:- புத்திசாலிப் பிரிவினர்; மாம்- என்னை; ஸ்ராந்த-தகித்திருக்கும்; வாஹம்-என் குதிரைகள்; அரய:-எதிரிகள்; ரதின:-சிறந்த தளபதி; புவிஷ்டம்-தரையில் நிற்கும்பொழுது; ந- இல்லை; ப்ராஹரன்-தாக்க; யத்-யாருடைய; அனுபாவ—கருணை; நிரஸ்த-இல்லாததால்; சித்தா:-மனம்.
களைப்படைந்த என் தேர்க் குதிரைகளுக்கு நீர் கொண்டு வருவதற்காக நான் தேரிலிருந்து கீழே இறங்கியபோது, எதிரிகள் அலட்சியமாக இருந்து விட்டதற்கு அவருடைய கருணை மட்டுமே கராரணம். முக்தி பெறுவதற்காக அவரைப் புண்ணிய புருஷர்களும் வழிபட்டு, அவருக்குத் தொண்டு செய்கின்றனர் என்பதால், எம்பெருமானிடம் எனக்கிருந்த மரியாதை குறைவால் அல்லவா அவரை என் தேரோட்டியாக ஈடுபடுத்தும் துணிவு எனக்கு வந்தது.
பதம் 1.15.18
நர்மாணி உதார-ருசிர-ஸ்மித சோபிதானி
ஹே பார்த ஹே ‘ர்ஜுன ஸகே குரு-நந்தனேதி
ஸஞ்சல்பிதானி நர-தேவ ஹ்ருதி-ஸ்ப்ருசானி
ஸ்மர் துர் லுடந்தி ஹ்ருதயம் மம மாதவஸ்ய
நர்மாணி-விளையாட்டுப் பேச்சுக்கள்; உதார-கபடமில்லாமல் பேசினார்; ருசிரா – இனிமையான; ஸ்மித-சோபிதானி- புன்னகை தவழும் முகத்தால் அலங்கரிக்கப்பட்ட; ஹே-ஓ; பார்த்தா-பிருதாவின் மகனே; ஹே-ஓ;அர்ஜுனா—அர்ஜுனா; ஸூகே -நண்பா; குரு-நந்தன—– குரு வம்சத்தின் மகனே; இதி-என்பன போன்ற; ஸஞ்சல்பிதானி அத்தகைய உரையாடல்கள்; நர-தேவ-அரசே; ஹ்ருதி-இதயம்; ஸ்ப்ருசானி- தொடும்; ஸ்மர்து:- அவற்றை நினைவுகூர்வதன் மூலமாக; லுடந்தி—துளைக்கிறது; ஹ்ருதயம்—இதயத்தை; மம எனது; மாதவஸ்ய-மாதவனின் (கிருஷ்ணரின்).
அரசே கபடமற்ற அவரது விளையாட்டுப் பேச்சுக்கள் புன்னகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன. “ஏ நண்பனே, பிருதாவின் மகனே, குரு வம்சத்தின் மகனே” என்றெல்லாம் உள்ளதைத் தொடும் வகையில் அன்புடன் அழைத்த மாதவனின் சொற்களை இப்பொழுது நினைத்துப்பார்க்கும் பொழுது, அவை என் இதயத்தைத் துளைக்கின்றன.
பதம் 1.15.19
சய்யாஸ்னாடன-விகத்தன-போஜனாதிஷு
ஐக்யாத் வயஸ்ய ருதவான் இதி விப்ரலப்த:
ஸக்யு: ஸகேவ பித்ருவத் தனயஸ்ய ஸர்வம்
ஸேஹே மஹான் மஹிதயா குமதேர் அகம் மே
சய்ய- ஒரே படுக்கையில் படுத்துறங்கி: ஆஸ்ன- ஒரே ஆசனத்தில் அமர்ந்து: அடன.-ஒன்றாக நடந்து; போஜன—ஒன்றாக உணவருந்தி; விகத்தன-தற்புகழ்ச்சி; ஆதிஷு-மேலும் இத்தகைய எல்லா விவகாரங்களிலும்; ஐக்யாத்—உள்ள ஒற்றுமையால்; வயஸ்ய-என் நண்பா; ருதவான்—உண்மையே பேசுகிறாய்; இதி- இவ்வாறாக;விப்ரலப்த-தவறாக நடந்து கொண்டேன்; ஸக்யு:—ஒரு நண்பனிடம்: ஸகா- இவ ஒரு நண்பனைப் போலவே; பித்ருவத்- ஒரு தந்தையைப் போலவே: தனயஸ்ய-ஒரு குழந்தையின்; ஸர்வம்- எல்லா; ஸேஹே—பொறுத்துக் கொண்டார்; மஹான்- மிகச்சிறந்த; மஹிதயா- மகிமைகளால்; குமதே:அற்ப புத்தியுடையவனின்; அகம்- குற்றம்: மே-எனது.
பொதுவாக நாங்களிருவரும் ஒன்றாகவே உறங்குவதும் அமர்ந்திருப்பதும், சுற்றித் திரிவதும், வாழ்வதும் வழக்கம். அச்சமயத்தில் வீரச் செயல்களுக்காக ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்ளும்போது, முரண்பாடுகள் ஏற்பட்ட சமயங்களில், “நண்பா, நீ சத்தியமே உருவானவன்” என்று கூறி அவரை நான் கடிந்து கொள்வது வழக்கம். அவரது மதிப்பு குறைக்கப்பட்ட அத்தகைய நேரங்களிலும் கூட,பரமாத்மா என்ற முறையில், என் பிழைகளை எல்லாம் அவர் ஒருநண்பனுக்கு நண்பன் போலும், பிள்ளைக்குத் தகப்பன் போலும்
பொறுத்துக் கொண்டார்.
பதம் 1.15.20
ஸா ‘ஹம் ந்ருபேந்ர ரஹித: புருஷோத்தமேன
ஸக்யா ப்ரியேண ஸுஹ்ருதா ஹ்ருதயேன சூன்ய:
அத்வனி உருக்ரம-பரிக்ரஹம் அங்க ரக்ஷன்
கோபைர் அஸத்பிர் அபலேவ வினிர்ஜிதோ ‘ஸ்மி
ஸ-அந்த: அஹம்-தான்: ந்ருப-இந்த அரசர் பெருமான்; ரஹித-இழுந்து; புருஷ்-உத்தமேன-பரம புருஷரால்: ஸக்யா-எனது தண்பரால்; ப்ரியேண-எவக்கு மிகப் பிரியமானவரால்: ஸூஸ்குநா— தலனில் அக்கறை கொண்டவரால்; ஹ்ருநயேன-இதயத்தாலும், உயிராலும்; சூன்ய:-சூனியம், அத்வனி- சமீபத்தில் உருக்ரம பரிக்ரஹம்-சர்வசக்தி படைத்தவரின் மனைவிகள்; அங்க-உடல்கள்; ரக்ஷ்ன்-பாதுகாக்கும் பொழுது; கோபை:-இடையர்களால்: அஸ்திபிட- நாஸ்திகர்களால்; அபலா இவ—பலவினமான ஒரு பெண்ணைப் போல்; அவினிர்ஜித அஸ்மீ-நான் தோற்கடிக்கப்பட்டேன்.
அரசர் பெருமானே! எனது நண்பரும், என் நலனில் பெரும் அக்கறை கொண்டவருமான பரம புருஷரிடமிருந்து இப்பொழுது நான் பிரிக்கப்பட்டுவிட்டேன். எனவே என் இதயமே சூனியமாகிவிட்டது போல் காணப்படுகிறது. கிருஷ்ணருடைய எல்லா மனைவிகளின் உடல்களையும் நான் காப்பாற்றி வருகையில், அவரில்லாத சமயத்தில் துஷ்டர்களான சில இடையர்களால் நான் வெல்லப்பட்டேன்.
பதம் 1.15.21
தத் வை தனுஸ் த இஷவ: ஸ ரதோ ஹயாஸ் தே
ஸோ ‘ஹம் ரதீ ந்ருபதயோ யத ஆனமந்தி
ஸர்வம் க்ஷணேன தத் அபூத் அஸத் ஈச-ரிக்தம்
பஸ்மன் ஹுதம் குஹகராத்தம் இவோப்தம் ஊஷ்யாம்
தத் – அதே; வை -நிச்சயமாக; தனு: -தே-அதே வில்; இஷவ: அம்புகள்: ஸ—அதே; ரத:-இரதம்; ஹயா:தே-அதே குதிரைகள்; ஸ: அஹம்—நானும் அதே அர்ஜுனன்; ரதீ—இரத வீரன்; ந்ருபதய:-எல்லா அரசர்களும்; யத-யாருக்கு; ஆனமந்தி- தங்களது மரியாதைகளை செலுத்தினரோ; ஸர்வம்- அனைத்தும்; க்ஷணேன- ஒரு நொடிப் பொழுதில்; தத்-அவ்வெல்லா; அபூத்-ஆகிவிட்டன; அஸத்- பயனற்றவையாக; ஈச-பகவானால்; ரிக்தம்—இல்லாத காரணத்தால்; பஸ்மன் – சாம்பல்; ஹுதம்-நெய் வார்த்து; குஹக-ராத்தம்-மந்திர ஜாலத்தால் உண்டாக்கப்பட்ட பணம்; இவ-அதைப் போல்; உப்தம்- விதைக்கப்பட்ட; ஊஷ்யாம்-வறண்ட நிலத்தில்.
என்னிடம் அதே காண்டீவ வில்லும், அதே அம்புகளும், அதே குதிரைகள் பூட்டப்பட்ட அதே இரதமும்தான் உள்ளன. மேலும் யாருக்கு எல்லா அரசர்களும் தகுந்த மரியாதைகளைச் செலுத்தினார்களோ, அதே அர்ஜுனனாகத்தான் அவற்றை நான் உபயோகிக்கிறேன். ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாத காரணத்தால் அவையனைத்தும், சாம்பலில் ஊற்றிய நெய் போலவும், மந்திர ஜாலத்தால் பொருள் திரட்டியது போலவும், வறண்ட நிலத்தில் விதை விதைத்ததைப் போலவும், ஒரு நொடியில் சூனியமாகிவிட்டது.
பதங்கள் 1.15.22 – 1.15.23
ராஜம்ஸ் த்வயானு ப்ருஷ்டானாம்ஸுஹ்ருதாம் ந:ஸுஹ்ருத்-புரே
விப்ர-சாப-விமூடானாம் நிக்னதாம் முஷ்டிபிர் மித:
வாருணீம் மதிராம் பீத்வா மதோன்மதித-சேதஸாம்
அஜானதாம் இவான் யோன்யம் சது: -பஞ்சாவசேஷிதா:
ராஜன் – அரசே: த்வயா-உங்களால்: அனுப்ருஷ்டானாம்-நீங்கள்கேட்டது போல்: ஸுஹ்ருதாத்-நண்பர்கள் மற்றும் உறவினர்களின்: ந-நமது: ஸுஹ்ருத்புரே-துவாரகாபுரியில்; விப்ர-பிராமணர்களின்; சாப-சாபத்தால்; விமூடானாம்-மதிகெட்டவர்களின்; நிக்னதாம்-கொல்லப்பட்டவர்களில்; முஷ்டிபி:தடிகளால்;
மித-அவர்களுக்கிடையில்: வாருணீம்-புளித்துப்பொங்கியசாதம்; மதிராம்- மதுபானம்: பீத்வா-அருந்தியதால்; மத-உன்; மதித-போதையேறிய; சேதஸாம் – அந்த மனநிலையில்; அஜானதாம்—அறியாதவர்களை; இவ-போல்; அன்யோன்யம்- ஒருவரையொருவர்; சது:–நான்கு; பஞ்ச-ஐந்து; அவசேஷிதா-இப்பொழுது எஞ்சியுள்ளவர்கள்.
அரசே, துவாரகாபுரியிலுள்ள நமது நண்பர்களைப் பற்றியும்,உறவினர்களைப் பற்றியும் நீங்கள் விசாரித்ததால், அவர்களனைவரும் பிராமணர்களால் சபிக்கப்பட்டனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் விளைவாக புளிக்க வைத்த சாதத்தால் செய்யப்பட்ட மதுபானத்தால் மதிமயங்கி, ஒருவரையொருவர் அறியாமலேயே, இப்பொழுது நாலைந்து பேர்களே எஞ்சியுள்ளனர். தங்களுக்கிடையில் தடிகளால் அடித்துக் கொண்டு மாண்டுபோயினர்.
பதம் 1.15.24
ப்ராயேணைதத் பகவத ஈஸ்வரஸ்ய விசேஷ்டிதம்
மிதோ நிக்னந்தி பூதானி பாவயந்தி ச யன் மித:
ப்ராயேன ஏதத்-இது கிட்டத்தட்ட அவரால்; பகவத-பரம் புருஷரின்; ஈஸ்வரஸ்ய- பகவானின்; விசேஷ்டிதம்- விருப்பத்தால்; மித:- ஒருவரையொருவர்; நிக்னந்தி — கொலை செய்து கொள்கின்றனர்; பூதானி-ஜீவராசிகள்: பாவயந்தி- அவ்வாறே பாதுகாத்தும் கொள்கின்றனர்; ச-மேலும்; யத்-எவரின்; மித:-ஒருவரையொருவர்.
உண்மையில் இவையனைத்தும் பரம புருஷராகிய பகவானின் விருப்பத்தினால்தான் விளைந்துள்ளன. சில சமயங்களில் மக்கள் ஒருவரையொருவர் கொலை செய்து கொள்கின்றனர். வேறு சமயங்களில் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்கின்றனர்.
பதங்கள் 1.15.25 – 1.15.26
ஜூலௌகஸாம் ஜலே யத்வன் மஹாந்தோ ‘தந்தி அணீயஸ:
துர்பலான் பலினோ ராஜன் மஹாந்தோ பலினோ மித:
ஏவம் பலிஷ்டைர் யதுபிர் மஹத்பிர் இதரான் விபு:
யதூன் யதுபிர் அன்யோன்யம் பூ-பாரான் ஸஞ்சஹார ஹ
ஜூலௌகஸாம்—நீர் வாழ் பிராணிகளின்; ஜலே-நீரில்: யத்வத்— போல்; மஹாந்த: பெரியது; அதந்தி- விழுங்குகிறது; உள்ளது அணீயஸ:-சிறியவைகளை; துர்பலான்-பலமற்றவை; பலின- பலமுள்ளவை; ராஜன்—அரசே; மஹாந்த-அதிக பலமுள்ளவை; பலின:–குறைந்த பலமுள்ளவை; மிது – ஒருவரோடொருவர்; ரவம் — இவ்வாறாக; பலிஷ்டை:-அதிக பலமுள்ளவரால்; யதுபி:- யது வம்சத்தினரால்: மஹத்பி:-அதிக பலம் உள்ளவர்; இதரான் – சாதாரணமானவர்களை; விபு:- பரம புருஷ பசுவான்; யதூன்—யதுக்கள் அனைவரும்; யதுபி:-வதுக்களால்; அன்யோன்யம்— ஒருவரோடொருவர்; பூ-பாரான்-பூபாரத்தை; ஸஞ்சஹார-குறைத்து விட்டார்; ஹ—கடந்த காலத்தில்.
அரசே, கடலில் பெரிய பலமுள்ள நீர்வாழ் பிராணிகள் சிறிய, பலமற்றவைகளை விழுங்கிவிடுகின்றன. அதைப் போலவே, பரம் புருஷ பகவான் பூபாரத்தைக் குறைப்பதற்காக, அதிக பலமுள்ள யதுக்கள் பலமற்றவர்களையும், பெரிய யதுக்கள் சிறியவர்களையும் கொல்லும்படி செய்துவிட்டார்.
பதம் 1.15.27
தேச-காலார்த-யுக்தானி ஹ்ருத்-தாபோப சமானி ச
ஹரந்தி ஸ்மரதஸ் சித்தம் கோவிந்தாபிஹிதானி மே
தேச- இடம்; கால—காலம்; அர்த-முக்கியத்துவத்தை; யுக்தானி -நிரப்பப்பட்டுள்ளன; ஹ்ருத்-இதயம்; தாப-எரியும்; உபசமானி அனைத்து; ச-மேலும்; ஹரந்தி—கவர்கின்றன; ஸ்மரத:-நினைவு கூர்வதன் மூலம்; சித்தம்-மனம்; கோவிந்த-ஆனந்தம் அளிப்பவரான பரம புருஷர்; அபிஹிதானி-அவரால் விவரிக்கப்பட்டது; மே-எனக்கு.
பரம புருஷரால் (கோவிந்தன்) எனக்கு அளிக்கப்பட்ட உபதேசங்கள், காலம் மற்றும் தேசம் ஆகிய எல்லாச் சூழ்நிலைகளிலும் ஏற்படக்கூடிய இதய தகிப்பை அகற்றுவதற்கு உரியவையாகும். எனவே அந்த உபதேசங்களிடம் எனக்கு இப்பொழுது கவர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பதம் 1.15.28
ஸூத உவாச
ஏவம் சிந்தயதோ ஜிஷ்ணோ: க்ருஷ்ண-பாத-ஸரோருஹம் ஸௌஹார்தேனாதிகாடேன சாந்தாஸீத் விமலா மதி:
ஸூதஉவாச-சூத கோஸ்வாமி கூறினார்; ஏவம்- இவ்வாறு; சிந்தயத:-உபதேசங்களைப் பற்றி சிந்திக்கும்பொழுது; ஜிஷ்ணோ-பரம் புருஷரின்; க்ருஷ்ண -பாத – கிருஷ்ணரின் பாதங்கள்; ஸரோருஹம்- தாமரைகளை ஒத்த; ஸௌஹார்தேன—ஆழ்ந்த சிநேகத்தால்; அதிகாடேன் – மிகவும் நெருக்கமான; சாந்தா- சாந்தமடைந்தார்; ஆஸீத்-அது அப்படியாயிற்று; விமலா-பெளதிக களங்கம் இல்லாமல்; மதி:-மனது.
சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு மிக நெருங்கிய சிநேக முறையில் பகவானால் உபதேசிக்கப்பட்ட போதனைகளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி, அவரது பாதகமலங்களைப் பற்றி சிந்தித்த அர்ஜுனன் அமைதியடைந்து, எல்லா பௌதிக களங்கங்களிலிருந்தும் விடுபட்டார்.
பதம் 1.15.29
வாஸு தேவாங்ரி-அனுத்யான-பரிப்ரும்ஹித-ரம்ஹஸா
பக்த்யா நிர்மதிதா சேஷ- கஷாய-திஷணோ ‘ர்ஜுனா:
வாஸுதேவ-அங்ரி-பகவானின் கமல பாதங்கள்; அனுத்யான- இடைவிடாத சிந்தனையால்; பரிப்ரும்ஹித-விரிவடைந்தது; ரம்ஹஸா-மிகவும் வேகமாக; பக்த்யா—பக்தியுடன்; நிர்மதித: மறைந்தன; அசேஷ-எல்லையற்ற; கஷாய-ஒரு துளி; திஷண: கருத்து: அர்ஜுன:—அர்ஜுனன்.
அர்ஜுனன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கமல பாதங்களை இடையறாது நினைவுகூர்ந்ததால் அது அவரது பக்தியை வேகமாக பெருகச் செய்தது. இதனால் அவரது மனதிலுள்ள எல்லா குப்பைகளும் மறைந்தன.
பதம் 1.15.30
கீதம் பகவதா ஞானம் யத் தத் ஸங்ராம-மூர்தனி
கால-கர்ம-தமோ-ருத்தம் புனர் அத்யகமத் ப்ரபு:
கீதம்- உபதேசிக்கப்பட்டது; பகவதா-பரம புருஷரால்; ஞானம் உன்னத அறிவு: யத்-எது; தத்-அந்த; ஸங்ராம-மூர்தனி-போரின் நடுவில்;கால-கர்ம-காலமும் செயல்களும்; தம: ருத்தம்—அத்தகைய இருளால் மூடப்பட்டு; புன:- அத்யகமத்- மீண்டும் அவற்றை புதுப்பித்துக் கொண்டார்; ப்ரபு:-தன் புலன்களுக்கு எஜமானர்.
பகவானின் லீலைகள் மற்றும் செயல்களினாலும், அவரது மறைவினாலும் அவர் விட்டுச் சென்ற உபதேசங்களை அர்ஜுனன் மறந்து விட்டதுபோல் காணப்பட்டது. ஆனால் இது உண்மையல்ல. மீண்டும் அவர் தன் புலன்களுக்கு எஜமானரானார்.
பதம் 1.15.31
விசோகோ ப்ரஹ்ம-ஸம்பத்யா ஸஞ்சின்ன-த்வைத-ஸம்சய:
லீன-ப்ரக்ருதி-நைர்குண்யாத் அலிங்கத்வாத் அஸம்பவ:
விசோக:- துக்கத்திலிருந்து விடுபட்டார்; ப்ரஹ்ம ஸம்பத்யா- ஆன்மீக முற்றிலும் ஆஸ்திகளைப் பெற்றிருந்ததால்; ஸஞ்சின்ன – துண்டிக்கப்பட்டதால்; த்வைத-ஸம்சய:-இருமையின் சந்தேகங்களிலிருந்து; லீன – இரண்டறக் கலந்து ; ப்ரக்ருதி-ஜட இயற்கை; நைர்குண்யாத்—உன்னத நிலையில் இருப்பதால்; அலிங்கத்வாத்-ஒரு ஜடவுடல் இல்லாத காரணத்தால்; அஸம்பவ: பிறப்பு இறப்பிலிருந்து விடுபட்டு.
அவர் ஆன்ம ஞானத்தைப் பெற்றிருந்ததால், இருமையைப் பற்றிய சந்தேகங்கள் முற்றிலும் களையப்பட்டன. இவ்வாறாக அவர் ஜட இயற்கையின் முக்குணங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, ஆன்மீக நிலையில் வைக்கப்பட்டார். அவர் பௌதிக உருவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், இனிமேலும் பிறப்பிலும் இறப்பிலும் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு இல்லாமற்போயிற்று.
பதம் 1.15.32
நிசம்ய பகவன்-மார்கம் ஸம்ஸ்தாம் யது-குலஸ்ய ச
ஸ்வ: பதாய மதிம் சக்ரே நிப்ருதாத்மா யுதிஷ்டிர:
நிசம்ய-நிதானமாக யோசித்து; பகவத்—பகவானைப் பற்றி; மார்கம்—அவரது தோற்றம் மற்றும் மறைவு ஆகிய செயல்கள்; ஸம்ஸ்தாம் – முடிவு; யது-குலஸ்ய-யது குலத்தின்; ச-மேலும்; ஸ்வ:-பகவானின் வசிப்பிடம்; பதாய-அவ்வழியில்; மதிம்-ஆசை; சக்ரே – கவனத்தைச் செலுத்தினார்; நிப்ருத-ஆத்மா—தனிமையாகவும், தனியாகவும்; யுதிஷ்டிர:-யுதிஷ்டிர மகாராஜன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது வசிப்பிடத்திற்குச் சென்றுவிட்டதையும், யது குலத்தின் முடிவையும் கேள்விப்பட்ட யுதிஷ்டிர மகாராஜன், பகவானின் வசிப்பிடத்திற்கு திரும்பிச் சென்றுவிட முடிவு செய்தார்.
பதம் 1.15.33
ப்ருதாபி அனுஸ்ருத்ய தனஞ்சயோதிதம்
நாசம் யதூனாம் பகவத்-கதிம் ச தாம்
ஏகாந்த பக்த்யா பகவதி அதோக்ஷஜே
நிவேசிதாத் மோபரராம ஸம்ஸ்ருதே:
ப்ருதா-குந்தி; அபி-கூட; அனுஸ்ருத்ய—கேட்ட; தனஞ்சய அர்ஜுனனால்; உதிதம்—கூறப்பட்டதை; நாசம்-முடிவு; யதூனாம்— யது வம்சத்தின்; பகவத்—பகவானின்; கதிம் மறைவு; ச-மேலும்; தாம்—அவ்வெல்லா; ஏக-அந்த—கலப்படமற்ற; பக்த்யா—பக்தி; பகவதி-பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரிடம்; அதோக்ஷஜே- உன்னதமான; நிவேசித-ஆத்மா-முழு கவனத்துடன்; உபரராம— அதிலிருந்து விடுபட்டாள்; ஸம்ஸ்ருதே-பௌதிக வாழ்வு.
யது வம்சத்தின் முடிவைப் பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவைப் பற்றியும் அர்ஜுனன் கூறக்கேட்ட குந்தியும், பரம புருஷரின் பக்தித் தொண்டில் முழு கவனத்துடன் ஈடுபட்டு, பௌதிக வாழ்வின் சுழற்சியிலிருந்து விடுபட்டாள்.
பதம் 1.15.34
யயாஹரத் புவோ பாரம் தாம் தனும் விஜஹாவ் அஜ:
கண்டகம் கண்டகேனேவ த்வயம் சாபீசிது: ஸமம்
யயா-எதனால்; அஹரத்—எடுத்துவிட்டார்; புவ:-உலகின்; பாரம்-பாரத்தை; தாம்—அந்த; தனும்உடல்; விஜஹௌ – விட்டுவிட ; அஜ:-பிறப்பற்றவர்; கண்டகம்-முள்ளை; கண்டகேன— முள்ளால்; இவ-அவ்வாறு; த்வயம்-இரண்டும்; ச-மேலும்; அபி என்றபோதிலும்; ஈசிது:-ஆளும்; ஸமம்-சமம்.
பிறப்பற்றவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், யது வம்சத்தினரை, தங்களது உடல்களை கைவிடச் செய்து பூமியின் பாரத்தைக் குறைத்தார். இச்செயல், முள்ளை முள்ளால் எடுப்பதைப் போன்றதாகும். ஆள்பவருக்கு இவ்விரண்டுமே சமம்தான்.
பதம் 1.15.35
யதா மத்ஸ்யா-திரூபாணி தத்தே ஜஹ்யாத் யதா நட:
பூ-பார க்ஷபிதோ யேன ஜஹௌ தச் ச கலேவரம்
யதா – அதைப் போலவே; மத்ஸ்ய-ஆதி-மச்சவதாரம் போன்ற; ரூபாணி- வடிவங்கள்; தத்தே-நித்தியமாக ஏற்றுக் கொள்கின்றார்; ஜஹ்யாத் – வெளிப்படையாகக் கைவிடுகிறார்;யதா-அதைப் போலவே; நட:-மந்திரவாதி; பூ-பார:-பூமியின் பாரத்தை ; க்ஷபித: குறைத்தார்; யேன- எதனால்; ஜஹௌ-துறந்து ; தத்-அந்த; ச மேலும் ; கலேவரம்-உடல்.
பரம புருஷர் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவரால் தோற்றுவிக்கப்பட்ட உடலைக் கைவிட்டார். ஒரு மந்திரவாதியைப் போலவே, அவர் ஒருடலைக் கைவிட்டு, மச்சவதாரத்தையும் மற்றவைகளையும் போன்ற வேறுபட்ட உடல்களை ஏற்கிறார்.
பதம் 1.15.36
யதா முகுந்தோ பகவான் இமாம் மஹீம்
ஜஹௌ ஸ்வ-தன்வா ஸ்ரவணீய-ஸத் கத:
ததாஹர் ஏவாப்ரதிபுத்த-சேதஸாம்
அபத்ர-ஹேது கலிர் அன்வவர்தத
யதா —அப்பொழுது; முகுந்த:-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; பகவான்— பரம புருஷ பகவான்; இமாம்-இந்த; மஹீம்-பூமி; ஜூஹௌ – சென்றார்; ஸ்வதன்வா—அவரது அதே உடலுடன்; ஸ்ரவணீயஸத் கத:—அவரைப் பற்றி கேட்பது பயனுள்ளதாகும்; ததா-அப்போது ; அஹஏவ- அந்நாளிலிருந்தே; அப்ரதிபுத்தசேதஸாம்—போதுமான மன வளர்ச்சியைப் பெறாதவர்களின்; அபத்ரஹேது—எல்லா துரதிர்ஷ்டங்களுக்கும் காரணமான; கலிஅன்வவர்தத-கலிமுழுமையாக வெளிப்பட்டது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது சுய உருவத்துடன் இம்மண்ணுலகை விட்டுச் சென்ற அதே நாளிலிருந்து, ஏற்கனவே ஒரு பகுதி மட்டும் தோன்றியிருந்த கலி, அறிவு பற்றாக்குறையாக உள்ளவர்களுக்கு அமங்களமான சூழ்நிலையை விளைவிப்பதற்காக முழுமையாக வெளிப்பட்டது.
பதம் 1.15.37
யுதிஷ்டிரஸ் தத் பரிஸர்பணம் புத:
புரே ச ராஷ்ட்ரே ச க்ருஹே ததாத்மனி
விபாவ்ய லோபான்ருத-ஜிஹ்ம ஹிம்ஸனாதி
அதர்ம-சக்ரம் கமநாய பர்யதாத்
யுதிஷ்டிர்:-யுதிஷ்டிர மகாராஜன்; தத்—அந்த; பரிஸர்பணம்— பெருக்கம்: புத: முற்றிலும் அனுபவித்தார்; புரே-நகரில்; ச-மேலும்; ராஷ்ட்ரே- நாட்டில்; ச-மேலும்; க்ருஹே-வீட்டில்; ததா- அதுபோலவே: ஆத்மளி- நேரடியாக; விபாவ்ய-புரிந்து: லோப-பேராசை; அன்ருத-பொய்; ஜிஹ்ம-தந்திரம்: ஹிம்ஸன ஆதி-முரட்டுத்தனம், பொறாமை; அதர்ம அதர்மம்; சக்ரம்- ஒரு விஷச் சக்கரம்; கமனாய-புறப்படுவதற்கு; பர்யதாத்—ஏற்றவாறு உடையணிந்தார்.
தலைநகரிலும், நாட்டிலும், வீட்டிலும், தனி நபர்களுக்கிடையிலும் பெருகிக் கொண்டிருக்கும் பேராசை பொய், நேர்மையின்மை மற்றும் மூர்க்கத்தனம் ஆகியவற்றின் மூலமாக கலி யுகத்தின் ஆதிக்கம் மேலோங்குவதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு யுதிஷ்டிர மகாராஜன் புத்திசாலியாக இருந்தார். எனவே புத்திசாலித்தனமாக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தம்மைத் தயார் செய்து கொண்ட அவர், அதற்கேற்ற உடையையும் அணிந்து கொண்டார்.
பதம் 1.15.38
ஸ்வ-ராட் பௌத்ரம் வினயினம் ஆத்மன: ஸுஸுமம் குணை:
தோய-நீவ்யா: பதிம் பூ மேர் அப்யஷின் சத் கஜாஹ்வயே
ஸ்வ-ராட்—சக்கரவர்த்தி; பௌத்ரம்-பேரனை; வினயினம்—நன்கு பயிற்சி பெற்ற; ஆத்மன:-அவரை; ஸுஸமம்-எல்லா வகையிலும் நிகரான; குணை:- குணங்களால்; தோய-நீவ்யா:-கடல்களால் சூழப்பட்ட; பதிம்-அரசராக; பூமே:-நிலத்தின்; அப்யஷின்சத்- சிம்மாசனத்தில் அமர்த்தினார்; கஜாஹ்வயே தலைநகரான ஹஸ்தினாபுரத்தில்.
அதன் பிறகு, பயிற்சி பெற்று தமக்கு நிகரான தகுதியைப் பெற்றிருந்த தம் பேரனை, கடல்களால் சூழப்பட்டிருந்த எல்லா நிலத்திற்கும் சக்கரவர்த்தியாக சிம்மாசனத்தில் அமர்த்தினார்.
பதம் 1.15.39
மதுராயாம் ததா வஜ்ரம் சூரஸேன-பதிம் தத:
ப்ராஜாபத்யாம் நிரூப்யேஷ்டிம் அக்னீன் அபிபத் ஈஸ்வர:
மதுராயாம்-மதுராவில்; ததா—மேலும்; வஜ்ரம்- வஜ்ரனை; சூரஸேன-பதிம்-சூரஸேன நாட்டுக்கு அரசர்; தத:-அதன் பிறகு; ப்ராஜா பத்யாம்-பிராஜாபத்ய யாகம்; நிரூப்ய-செய்து; இஷ்டிம்- இலக்கு: அக்னீன்—அக்னி; அபிபத்-தமக்குள் வைத்தார்; ஈஸ்வர: சாமர்த்தியமாக.
பிறகு அவர் அநிருத்தரின் மகனான (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பேரன்) வஜ்ரனை சூரஸேன நாட்டின் அரசராக மதுராபுரியில் அமர்த்தினார். அதன் பிறகு, யுதிஷ்டிர மகாராஜன் ஒரு பிராஜாபத்ய யாகத்தைச் செய்து, குடும்ப வாழ்வைக் கைவிடும் துறவறத் தீயை தமக்குள் ஏற்றி வைத்தார்.
பதம் 1.15.40
விஸ்ருஜ்ய தத்ர தத் ஸர்வம் துகூல-வலயாதிகம்
நிர்மமோ நிரஹங்கார: ஸன்சின்னாசேஷ-பந்தன:
விஸ்ருஜ்ய-கைவிட்டு; தத்ர— அவ்வெல்லா; தத் – அந்த; ஸர்வம்- அனைத்தும்; துகூல-கச்சை; வலய-ஆதிகம் மற்றும் காப்புகள்; நிர்மம:- சிரத்தையில்லாதவராகவும்; நிரஹங்கார: பற்றற்றவராகவும்; ஸன்சின்ன-முற்றிலும் துண்டித்து விட்டார்; அசேஷ பந்தன:- எல்லையற்ற பற்று.
யுதிஷ்டிர மகாராஜன் உடனே அரசருக்குரிய ஆடைகள், கச்சை மற்றும் ஆபரணங்கள் ஆகிய அனைத்தையும் துறந்து, எதிலும் சிரத்தையற்றவராகவும், பற்றற்றவராகவும் ஆனார்.
பதம் 1.15.41
வாசம் ஜுஹாவ மனஸி தத் ப்ராண இதரே ச தம்
ம்ருத்யாவ் அபானம் ஸோத்ஸர்கம் தம் பஞ்சத்வே ஹி அஜோ ஹவீத்
வாசம்- வார்த்தைகளை; ஜூஹாவ-துறந்தார்; மனஸி-மனதில்; தத்ப்ராண- மனதை சுவாசத்தில்; இதரே ச-மற்ற புலன்களையும் கூட; தம்-அதில்; ம்ருத்யௌ-மரணத்தில்; அபானம்-சுவாசம்; ஸஉத்ஸர்கம்- முழு அர்ப்பணம்; தம் – அந்த; பஞ்சத்வே- ஐம்பூத உடலுக்குள்; ஹி-நிச்சயமாக; அஜோஹவீத்-அதைக் கலந்தார்.
பிறகு அவர் புலனுறுப்புக்கள் அனைத்தையும் மனதிலும், பிறகு மனதை உயிரிலும், உயிரை சுவாசத்திலும், அவரது மொத்த வாழ்வையே ஐம்பூத வடிவமான உடலிலும் மற்றும் உடலை மரணத்திலும் கலக்கச் செய்துவிட்டார். அதன் பிறகு தூய ஆத்மா என்ற முறையில், வாழ்வின் பௌதிகமான எண்ணத்திலிருந்து அவர் விடுபட்டவரானார்.
பதம் 1.15.42
த்ரித்வே ஹுத்வா ச பஞ்சத்வம் தச் சைகத்வே ‘ஜுஹோன் முனி:
ஸர்வம் ஆத்மனி அஜுஹுவீத் ப்ரஹ்மணி ஆத்மானம் அவ்யயே
த்ரித்வே-முக்குணங்களில்; ஹுத்வா—அளித்தபின்; ச-மேலும்; பஞ்சத்வம்-பஞ்சபூதங்கள்; தத்—அந்த; ச-மேலும்; ஏகத்வே- ஒன்றேயான அறியாமையில்; அஜுஹோத்-கலந்தார்; முனி:-ஞானி; ஸர்வம்- மொத்த; ஆத்மனி—ஆத்மாவின்; அஜுஹுவீத்_நிலைக்கச் செய்தார்; ப்ரஹ்மணி-ஆத்மாவில்; ஆத்மானம்-ஆத்மா; அவ்யயே-முடிவுறாததில்.
இவ்வாறாக பஞ்ச பூதங்களாலான ஸ்தூல உடலை ஜட இயற்கையின் முக்குணங்களுடன் ஐக்கியப்படுத்தி, அவற்றை ஒன்றேயான அறியாமையில் கலந்துவிடச் செய்தார். பிறகு அந்த அறியாமையை, எச்சூழ்நிலையிலும் முடிவற்றதாக உள்ள பிரம்மனில் லயிக்கச் செய்தார்.
பதம் 1.15.43
சீர-வாஸா நிராஹாரோ பத்த-வான் முக்த-மூர்தஜ:
தர்சயன் ஆத்மனோ ரூபம் ஜடோன் மத்த-பிசாச்சவத் அனவேக்ஷமாணோ நிரகாத் அஸ்ருன்வன் பதிரோ யதா
சீர-வாஸா- கிழிந்த ஆடையை ஏற்றார்; நிராஹார:-கெட்டியான ஆகாரங்களைக் கைவிட்டார்; பத்தவாக்—பேச்சை நிறுத்திக் கொண்டார்; முக்தமூர்தஜ: தலைமுடியை அவிழ்த்தார்; தர்சயன்-காட்டத் துவங்கினார்; ஆத்மன:-அவரது; ரூபம்- தேக அம்சங்களை; ஜட ஜடமான; உன்மத்த-பித்தன்; பிசாசவத் ஒரு துஷ்டனைப் போலவே; அனவேக்ஷமான அவர்களை நம்பியிராமல்; நிரகாத்-இருந்தார்; அஸ்ருன்வன்-கேட்காமல்; பதிர:-ஒரு செவிடனைப் போலவே; யதா—அதுபோல்.
அதன் பிறகு, யுதிஷ்டிர மகாராஜன் கிழிந்த ஆடையை அணிந்து, கெட்டியான உணவு வகைகளைக் கைவிட்டு தலைவிரி கோலத்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இவையனைத்தும் சேர்ந்து, அவரை ஒரு வேலையற்ற துஷ்டனைப் போல் அல்லது பித்தனைப் போல் காட்சியளிக்கச் செய்தது. அவரது சகோதரர்களின் தயவை அவர் நம்பியிருக்கவில்லை. மேலும் ஒரு செவிடனைப் போல் அவர் எதையும் கேட்கவுமில்லை.
பதம் 1.15.44
உதீசீம் ப்ரவேசாசாம் கதபூர்வாம் மஹாத்மபி:
ஹ்ருதி ப்ரஹ்ம பரம் த்யாயன் நாவர்தேத யதோ கத:
உதீசிம்—வடக்குப்புறம்; ப்ரவிவேச-ஆசாம்—அங்கு செல்ல விரும்பியவர்கள்; கத-பூர்வாம்—அவரது முன்னோர்களால் ஏற்கப்பட்ட வழி; மஹா-ஆத்மபி:-மகான்களால் ; ஹ்ருதி—இதயத்திற்குள்; ப்ரஹ்ம- பரம்- பரபிரம்மம்; த்யாயம்-இடையறாது சிந்திக்கும்; ந ஆவர்தேத— தமது நாட்களைக் கழித்தார்; யத—இடமெல்லாம்; கத:-சென்ற.
பிறகு அவர், பரம புருஷ பகவானைப் பற்றிய சிந்தனையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்காக, இதற்கு முன் அவரது முன்னோர்களும், மகான்களும் ஏற்ற வழியைப் பின்பற்றி, வடக்கு நோக்கிப் புறப்பட்டார். மேலும் சென்ற இடமெல்லாம் இதே முறையில்தான் அவர் வாழ்ந்தார்.
பதம் 1.15.45
ஸர்வே தம் அனுநிர்ஜக்முர் ப்ராதர: க்ருத-நிஸ்சயா:
கலினாதர்மமித்ரேண த்ருஷ்ட்வா ஸ்ப்ருஷ்டா: ப்ரஜா புவி
ஸர்வே – அவரது இளைய சகோதரர்கள் அனைவரும்; தம் -அவரை; அனுநிர்ஜக்மு:-மூத்தவரைப் பின்பற்றி வீட்டை விட்டு வெளியேறினார்; ப்ராதர:-சகோதரர்கள்; க்ருத-நிஸ்சயா:-தீர்மானமாக; கலினா-கலியுகத்தால்; அதர்ம-அதர்மம்; மித்ரேண- நண்பனால்; த்ருஷ்ட்வா—கண்டு; ஸ்ப்ருஷ்டா:- கைப்பற்றப்பட்டதால்; ப்ரஜா -எல்லா பிரஜைகளும்; புவி—பூமியிலுள்ள.
உலகம் முழுவதிலும் கலி யுகம் பரவிவிட்டதையும், தீய பழக்கங்களுக்கு மக்கள் அடிமையாகி விட்டதையும் கண்ட யுதிஷ்டிர மகாராஜனின் இளைய சகோதரர்கள், அவர்களது மூத்த சகோதரரின் பாத சுவடுகளைப் பின்பற்ற முடிவு செய்தனர்.
பதம் 1.15.46
தே ஸாது-க்ருதஸர் வார்தா ஞாத்வாத்யந்திகம் ஆத்மன:
மனஸா தாரயாம் ஆஸுர் வைகுண்டசரணாம்புஜம்
தே—அவர்கள் அனைவரும்; ஸாதுக்ருத -ஒரு துறவிக்குரிய எல்லா கடமைகளையும் செய்து முடித்த; ஸர்வஅர்தா—தகுதியுள்ள அனைத்தையும் உள்ளடக்கியிருப்பது; ஞாத்வா—அதை நன்கறிந்து; ஆத்யந்திகம்- முடிவான; ஆத்மன-ஜீவராசியின்; மனஸா-மனதில்; தாரயாம்-ஆஸு:-தாங்கி; வைகுண்ட-ஆன்மீக வெளியின் இறைவன்; சரண-அம்புஜம்-தாமரைப் பாதங்கள்.
அவர்களனைவரும் மதக் கொள்கைகளை எல்லாம் சரிவர நிறைவேற்றினர். அதன் பலனாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்கள்தான் அனைவருக்கும் முடிவான புகலிடம் என்று சரியாக முடிவு செய்து, அவரது பாதங்களை இடையறாது தியானித்தனர்.
பதங்கள் 1.15.47 – 1.15.48
தத்-த்யானோத்ரிக்தயா பக்த்யா விசுத்த-திஷணா: பரே
தஸ்மின் நாராயண-பதே ஏகாந்த-மதயோ கதிம்
அவாபுர் துரவாபாம் தே அஸத்பிர் விஷயாத்மபி:
விதூத கல்மஷா ஸ்தானம் விரஜேனாத்மனைவ ஹி
தத்— அந்த; த்யான-தியானம்; உத்ரிக்தயா-விடுபட்டதால்; பக்த்யா-பக்திப்பூர்வமான மனோபாவத்துடன்; விசுத்த- தூய்மையடைந்த ; திஷணா:-புத்தியால்; பரே-பரமனிடம்; தஸ்மின்-அதில்; நாராயண-பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; பதே-தாமரைப் பாதங்களில்; ஏகாந்தமதய:-ஒரு பரமனில் மனதைப் பதித்தவர்களின்; கதிம் – கதி; அவாபு:-அடைந்தனர்; துரவாபாம்—அடைய மிகவும் கஷ்டமான; தே—அவர்களால்; அஸத்பி:—பௌதிகவாதிகளால்; விஷய ஆத்மபி:-பௌதிகத் தேவைகளில் ஆழ்ந்துள்ள; விதூத- கழுவப்பட்டு; கல்மஷா-பௌதிக களங்கங்கள்; ஸ்தானம்-வசிப்பிடம்; விரஜேன- பௌதிக உடைமை இல்லாமல்; ஆத்மனா ஏவ-அதே உடலுடன்; ஹி- நிச்சயமாக.
இவ்வாறாக இடையறாத பக்திப்பூர்வமான சிந்தனையால் விளைந்த தூய உணர்வின் மூலமாக,பரம நாராயணரான, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் ஆளப்படும் ஆன்மீக வெளியை அவர்கள் அடைந்தனர். வழி பிறழாமல் ஒரே பரம புருஷரை தியானிப்பவர்களால் மட்டுமே இந்நிலை அடையப்படுகிறது. கோலோக விருந்தாவனம் எனப்படும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த வசிப்பிடத்தை, பெளதிக வாழ்வில் ஆழ்ந்துள்ளவர்களால் அடைய முடியாது. ஆனால் பௌதிக களங்கங்களை எல்லாம் முழுமையாகத் துடைத்துவிட்ட பாண்டவர்கள் அதே உடல்களுடன் அந்த வசிப்பிடத்தை அடைந்தனர்.
பதம் 1.15.49
விதுரோ ‘பி பரித்யஜ்ய ப்ரபாஸே தேஹம் ஆத்மன:
க்ருஷ்ணாவேசேன தச்சித்த: பித்ருபி: ஸ்வக்ஷயம் யயௌ
விதுர—விதுரர் (யுதிஷ்டிரரின் சிற்றப்பன்); அபி-மேலும்; பரித்யஜ்ய-உடலைவிட்டபின்; ப்ரபாஸே-பிரபாஸ் எனும் புண்ணிய யாத்திரை ஸ்தலத்தில்; தேஹம் ஆத்மன:-அவரது உடல்; க்ருஷ்ண- பரம புருஷ பகவான்; ஆவேசேன—அச்சிந்தனையில் ஆழ்ந்து;தத்-அவரது; சித்த-எண்ணங்களும் செயல்களும்; பித்ருபி:- பித்ருலோக வாசிகளுடன்; ஸ்வ-க்ஷயம்—அவரது சொந்த வசிப்பிடம்; யயௌ— புறப்பட்டார்.
விதுரர், தீர்த்த யாத்திரையை மேற்கொண்டிருந்தபொழுது, பிரபாஸ என்னுமிடத்தில் அவரது உடலை விட்டார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததால், அவர் பித்ரு லோக வாசிகளால் வரவேற்கப்பட்டு, அவரது மூல பதவிக்குத் திரும்பினார்.
பதம் 1.15.50
த்ரௌபதீ ச ததாக்ஞாய பதீனாம் அனபேக்ஷதாம்
வாஸுதேவே பகவதி ஹி ஏகாந்த-மதிர் ஆப தம்
த்ரௌபதீ-திரௌபதி (பாண்டவர்களின் மனைவி); ச-மேலும்; ததா-அப்போது; ஆக்ஞாய- பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நன்கு அறிந்திருந்ததால்; பதீனாம்—கணவர்களின்; அனபேக்ஷதாம்—அவளைப் பற்றி கவலைப்படாத; வாஸுதேவே-பகவான் வாசுதேவனிடம் (கிருஷ்ணரிடம்); பகவதி- -பரம புருஷர்; ஹி-அதேபோன்று; ஏக அந்த-பரிபூரணமாக ; மதி: மன ஒருமை; ஆப-பெற்றனர்; தம்- அவரை (பகவானை).
திரௌபதியும்கூட தன் கணவன்மார்கள் தன்னைப் பற்றி கவலைப்படாமல் வீட்டை விட்டு வெளியேறுவதைக் கண்டாள். பகவான் வாசுதேவனை, கிருஷ்ணரை அவள் நன்கு அறிவாள். கிருஷ்ணரின் சிந்தனையில் லயித்துப் போன திரௌபதி மற்றும் சுபத்ரா ஆகிய இருவரும், அவர்களது கணவன்மார்கள் அடைந்த அதே பலன்களை அடைந்தனர்.
பதம் 1.15.51
ய: ஸ்ரத்தயைதத் பகவத்ப்ரியாணாம்
பாண்டோ: ஸுதானாம் இதி ஸம்ப்ரயாணம்
ஸ்ருணோதி அலம் ஸ்வஸ்த்யயனம் பவித்ரம்
லப்த்வா ஹரெள பக்திம் உபைதி ஸித்திம்
ய:-யாரொருவர்; ஸ்ரத்தயா- பக்தியுடன்; ஏதத் – இந்த; பகவத் ப்ரியாணாம் – பகவானுக்கு மிகப் பிரியமானவர்களின்; பாண்டோ: பாண்டுவின்; ஸுதானாம்-மகன்களின்; இதி-இவ்வாறு; ஸம்ப்ரயாணம்- முடிவான இலக்கை நோக்கிய பிரயாணம்; ஸ்ருணோதி-கேட்பாரானால்; அலம்-மட்டுமே; ஸ்வஸ்த்யயனம்- நல்லதிர்ஷ்டம்; பவித்ரம் – பரிசுத்தமான; லப்த்வா-அடைவதால்; ஹரௌ-பரம புருஷரிடம்; பக்திம்- பக்தித் தொண்டு; உபைதி- அடைவார்; ஸித்திம்- பூரணத்துவத்தை.
பாண்டு புத்திரர்கள், வாழ்வின் இறுதி நோக்கமான பரமபதத்தை நோக்கிப் புறப்பட்ட விஷயம் சர்வ மங்களகரமானதும், பரிசுத்தமானதுமாகும். எனவே இக்கதையை பக்தி சிரத்தையுடன் கேட்பவர் யாராயினும் அவர் வாழ்வின் மிக உயர்ந்த பூரணத்துவமான, பகவானின் பக்தித் தொண்டை அடைவது நிச்சயம்.
ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “பாண்டவர்களின் துறவு” எனும் தலைப்பைக் கொண்ட, பதினைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.