அத்தியாயம் – 12
பரீட்சித்து மகாராஜனின் பிறப்பு
பதம் 1.12.1.
சௌனக உவாச
அஸ்வத்தாம்னோபஸ்குஷ்டேன ப்ர்ஹ்ம-சீர்ஷ்ணோரு-தேஜஸா
உத்தராயா ஹதோ கர்ப ஈசேனாஜீவித: புன:

சௌனகஉவசா- சௌனக முனிவர் கூறினார்; அஸ்வாத்தாமன- அஸ்வத்தாமனின் (துரோணரின் மகன்); உபஸ்ருஷ்டேன –விடப்பட்ட அதனால்; ப்ரஹ்ம சீர்ஷ்ணா –வெல்ல முடியாத பிரம்மாஸ்திரம்; உரு-தேஜஸா:—அதிக வெப்பத்தால்; உத்தராய— உத்தராவின் (பரீட்சித்தின் தாய்); ஹத-கொடுக்கப்பட்டதால்; கர்ப-கர்ப்பப்பை; ஈசேன-பரம புருஷரால்; ஆஜீவித -உயிர்ப்பிக்கப்பட்டார்; புன-மீண்டும்.

சௌகை முனிவர் கூறினார்: பரீட்சித்து மகாராஜனின் தாயான உத்தரையின் கர்ப்பப்பை, அஸ்வத்தாமனால் விடப்பட்ட பயங்கரமானதும், வெல்ல முடியாததுமான பிரம்மாஸ்திரந்தால் கெடுக்கப்பட்டது. ஆனால் பரீட்சித்து மஹாராஜன் பரம புருஷரால் காப்பாற்றப்பட்டார்.

பதம் 1.12.2
தஸ்ய ஜன்ம மஹா-புத்தே: கர்மாணி ச மகாத்மன:
நிதனம் ச யதைவாஜீத் ஸ ப்ரேத்ய கதவான் யதா

தஸ்ய—அவரது (பரீட்சித்து மகாராஜனின்); ஜன்ம-பிறப்பு; மஹா-புத்தே:- மிகச்சிறந்த புத்தியின்; கர்மாணி-செயல்கள்; ச-மேலும்; மகா-ஆத்மன:—சிறந்த பக்தரின்; நிதனம் – மரணம்; ச-மேலும்; யதா – அது இருந்ததைப் போல்; ஏவ – சந்தேகமின்றி; ஆஸீத்-நிகழ்ந்தது; ஸ- அவர்: ப்ரேத்ய-மரணத்திற்குப்பின் அவர்அடைந்த கதி; கதவான்—அடைந்தார்; யதா-அது இருந்ததைப் போல்.

மிகவும் நுண்ணறிவுள்ளவரும், மிகச்சிறந்த பக்தருமான பரீட்சித்து மகாராஜன் எப்படி அந்த கர்பப்பையில் பிறந்தார்? அவரது மரணம் எப்படி சம்பவித்தது? மேலும் மரணத்திற்குப்பின் அவர் என்ன கதியடைந்தார்?

பதம் 1.12.3
தத் இதம் ஸ்ரோதும் இச்சாமோ கதி தும் யதி மன்யஸே
ப்ரூஹி ந: ஸ்ரத்ததானானாம் யஸ்ய ஞானம் அதாச் சுக:

தத்- எல்லா; இதம்- இந்த; ஸ்ரோதும்-கேட்க; இச்சாம- எல்லோரும் விரும்புகிறோம்; கதிதும்-விவரிக்க; யதி மன்யஸே – நீங்கள் நினைத்தால்; ப்ரூஹி-தயவுசெய்து கூறுங்கள்; ந- நாங்கள்; ஸ்ரத்ததானானாம்-மிகவும் மரியாதைக்கு உரியவர்கள்; யஸ்ய- யாருடைய; ஞானம்–உன்னத அறிவு; அதாத்- புகட்டினார்; சுக:—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி.

யாருக்கு சுகதேவ கோஸ்வாமி உன்னத அறிவைப் புகட்டினாரோ அவரை (பரீட்சித்து மகாராஜன்) பற்றி பணிவுடன் கேட்டறிய நாங்கள் ஆனைவரும் விரும்புகிறோம். தயவுசெய்து இவ்விஷயத்தைப் பற்றி பேசுங்கள்.

பதம் 1.12.4
ஸூத உவாச
அபீபலத் தர்ம-ராஜ: பித்ருவத் ரஞ்சயன் ப்ரஜா:
நிஹ்ஸ்ப்ருஹ: ஸர்வ-காமேப்ய: க்ருஷ்ண—பாதானுஸேவயா

ஸூத உவாச-ஸ்ரீ சூத கோஸ்வாமிகூறினார்: அபீபலத்—செழிப்பான வாழ்வை அளித்தார்; தர்ம-ராஜ:—யுதிஷ்டிர மகாராஜன்; பித்ரு-வத்:— அவரது தந்தையைப் போலவே; ரஞ்சயன்-திருப்திப்படுத்தி; ப்ரஜா-பிறந்தவர்கள் அனைவரையும்; நிஹ்ஸ்ப்ருஹ:—சுயநோக்கம் இல்லாமல், ஸர்வ-எல்லா; காமேப்ய–புலன் நுகர்விலிருந்து; க்ருஷ்ண-பாத—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்கள்; அனுஸேவய:-தொடர்ந்து சேவை செய்ததலன் பலனாக.

ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: யுதிஷ்டிர மகாராஜன் அவரது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் செல்வங்களை தாராளமாக வழங்கினார். அவர் தமது தந்தையைப் போலவே இருந்தார். அவருக்கு சொந்த நோக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தாமரைப் பாதங்களுக்கு அவர் செய்த இடைவிடாத தொண்டின் காரணத்தால், எல்லா வகையான புலன் நுகர்வுகளில் இருந்தும் அவர் விடுபட்டிருந்தார்.

பதம் 1.12.5
ஸம்பத்: க்ரதவோ லோகா மஹிஷீ ப்ராதரோ மஹீ
ஜம்புத்வீபாதிபத்யம் ச யஸஸ் ச த்ரி-திவம் கதம்

ஸம்பத:- செல்வம்; க்ரதவ:-யாகங்கள்; லோகா—எதிர்காலத்தில் அடையப்போகும் உயர்ந்த கதி; மஹிஷீ–ராணிகள்; ப்ராதர: சகோதரர்கள்; மஹீ-பூமி; ஜமபுத்வீப:-நாம் வசிக்கும் கோளம் அல்லது கிரகம்; ஆதிபத்யம்- ஆட்சி; ச-மேலும்; யச-புகழ்; ச-மேலும்; த்ரிதிவம்- ஸ்வர்க லோகங்கள்; கதம்-பரவியது.

யுதிஷ்டிர மகாராஜனின் பௌதிக உடமைகள், உயர்ந்த கதியை அடைவதற்குரிய யாகங்கள், அவரது ராணி, அவரது இடையறாதத் துணைவர்களாக இருந்த அவரது சகோதரர்கள், அவரது பரந்த நிலம், அவரது மண்ணுலக ஆட்சி மற்றும் அவரது புகழ் போன்றவைகளைப் பற்றிய செய்தி ஸ்வர்க லோகங்களுக்கும் எட்டியது.

பதம் 1.12.6
கிம் தே காமா: ஸுர-ஸ்பார்ஹா முகுந்த மனஸோ த்விஜா:
அதிஜஹ்ருர் முதம் ராஜ்ன: க்ஷுதிதஸ்ய யதேதரே

கிம்- எதற்காக; தே-அவர்கள் அனைவரும்; காமா:—புலன் இன்பப் பொருட்கள்; ஸுர-ஸ்வர்க லோகவாசிகளின்; ஸ்பார்ஹா-ஆசைகள்; முகுந்த மனஸ-ஏற்கனவே கிருஷ்ண உணர்வில் இருப்பவரின்; தீவிஜா:—ஓ பிராமணர்களே; அதிஜஹ்ரு:–திருப்திப்படுத்தும்; முதம்— இன்பம்; ராஜ்ன:—அரசரின்; க்ஷுதிதஸ்ய-பசித்திருப்பவரின்; யதா- உள்ளவாறு; இதரே-மற்ற பொருட்களில்.

பிராமணர்களே, அரசரின் செல்வம், ஸ்வர்கவாசிகளும் அடைய விரும்பும் அளவிற்கு அவ்வளவு வசீகர சக்தியைக் கொண்டிருந்தது. ஆனால் அவர் பகவானின் தொண்டில் ஆழ்ந்திருந்ததால், அதைத் தவிர வேறெதுவும் அவரை திருப்திப்படுத்துவதாக இல்லை.

பதம் 1.12.7
மாதுர் கர்ப-கதோ-வீர: ஸ ததா ப்ருகு-நந்தன
ததர்ச புருஷம் கன்சித் தஹ்யமானோ ‘ஸ்த்ர–தேஜஸா

மாது:—தாயின்; கர்ப-கர்ப்பம்; கத:-அங்கு இருந்ததால்; வீர-மாவீரர்; ஸ-குழந்தை பரீட்சித்; ததா-அப்பொழுது; ப்ருகு-நந்தன:— பிருகு புத்திரரே: ததர்ச—காண முடிந்தது; புருஷம்-பரம புருஷர்; கன்சி—வேறொருவராக; தஹ்யமான:– தகிக்கப்பட்டு துன்புறும்; அஸ்த்ர-பிரம்மாஸ்திரம்; தேஜஸா-வெப்பம்.

பிருகு புத்திரரே (சௌனகர்), மாவீரரான குழந்தை பரீட்சித் அவரது தாயான உத்தராவின் கர்ப்பப்பைக்குள் இருந்தபொழுது, (அஸ்வத்தாமனால் விடப்பட்ட) பிரம்மாஸ்திரத்தின் தகிக்கும் வெப்பத்தினால் துன்பப்பட்டுக் கொண்டு இருந்த அவரால், பரம புருஷர் தன்னை நோக்கி வருவதைக் காண முடிந்தது.

பதம் 1.12.8
அங்குஷ்ட-மாத்ரம் அமலம் ஸ்ஃபுரத்-புரட-மௌலினம்
அபீவ்ய -தர்சனம் ஸ்யாமம் தடித் வாஸஸம் அச்யுதம்

அங்குஷ்ட-ஒரு கட்டை விரலின் அளவுக்கு; மாத்ரம்-மட்டுமே; அமலம்—உன்னதமான; ஸ்ஃபுரத்— சுடர்விட்டெரியும்; புர—தங்கம்; மௌலினம்-கிரீடம்; அபீவ்ய-மிகவும் அழகான; தர்சனம்-காண; ஸ்யாமம்—கருமையான; தடித்-மின்னல்; வாஸஸம்-உடை; அச்யுதம்- அழிவற்றவர் (பகவான்).

அவர் (பகவான்) கட்டை விரலின் அளவுக்கு மட்டுமே இருந்தபோதிலும், திவ்யமானவராக இருந்தார். அவர் மிகவும் அழகான கரு நிறமுள்ள, அழிவற்ற உடலைப் பெற்றிருந்தார். அவர் மின்னலைப் போன்றதொரு மஞ்சள் நிற ஆடையையும், பிரகாசமான தங்கக் கிரீடத்தையும் அணிந்திருந்த கோலத்தில் குழந்தைக்குக் காட்சியளித்தார்.

பதம் 1.12.9
ஸ்ரீமத் தீர்க-சதுர்-பாஹும் தப்த-காஞ்சன-குண்டலம்
க்ஷதஜாக்ஷம் கதா-பாணீம் ஆத்மன: ஸர்வதோ திசம்
பரிப்ரமந்தம் உல்காபாம் ப்ராமயந்தம் கதாம் முஹு:

ஸ்ரீமத்-அழகுபடுத்தப்பட்டு இருந்தார்; தீர்க—நீடித்த; சதுர் பாஹும்—நான்கு கரங்களைக் கொண்ட; தப்த-காஞ்சன:—உருக்கிய தங்கம்: குண்டலம்-காதணிகள்; க்ஷத அக்ஷ்ம்— இரத்தம் போல் சிவந்த கண்கள்; கதா பாணீம்-கரத்தில் ஒரு கதையுடன்; ஆத்மன –சொந்த; ஸர்வத:-எல்லா; திசம்-சுற்றிலும்; பரிப்ரமந்தம்—சுற்றித் திரியும்; உல்காபாம்-எரி நட்சத்திரங்களைப் போல்; ப்ராமயந்தம்– சூழ்ந்துகொள்ளும்; கதாம்—கதை; முஹு—இடையறாமல்.

பகவான் நான்கு கரங்களுடனும், உருக்கிய தங்கத்தாலான காதணிகளுடனும், கோபத்தால் இரத்தம் போல் சிவந்த கண்களுடன் அழகுபடுத்தப்பட்டிருந்தார். அவர் இங்குமங்குமாக சுற்றித் திரிந்தபொழுது, அவரது கதாயுதம் எரி நட்சத்திரத்தைப் போல் இடைவிடாமல் அவரைச் சுற்றிச்சுற்றி வந்தது.

பதம் 1.12.10
அஸ்த்ர-தேஜ: ஸ்வ -கதயா நீஹாரம் இவ கோபதி:
விதமந்தம் ஸன்னிகர்ஷே பர்யைக்ஷத க இதி அஸௌ

அஸ்திர தேஜ- பிரம்மாஸ்திரத்தின் வெப்பக் கதிர்களை; ஸ்வ-கதயா:—அவரது சொந்த கதாயுதத்தின் உதவியுடன்; நீஹாரம்—பனித்துளிகள்; இவ-போல்; கோபதி-சூரியன்; விதமந்தம்—மறைந்துவிடச் செய்; ஸன்னிகர்ஷே—அருகில்; பர்யைக்ஷத- கண்டு;க-யார்; இதி அஸௌ-இவ்வுடல்.

இவ்வாறாக, சூரியன் ஒரு பனித்துளியை ஆவியாக மாற்றிவிடுவதைப் போலவே பகவானும் பிரம்மாஸ்திரத்தின் வெப்பக் கதிர்களை மறைந்து போக செய்வதில் ஈடபட்டிருந்தார். குழந்தையும் பகவானைப் பார்த்து, அது யாராக இருக்கக்கூடும் என்று எண்ணியது.

பதம் 1.12.11
வி தூய- தத் அமேயாத்மா பகவான் தர்ம-குப் விபு:
மிஷதோ தசமாஸஸ்ய தத்ரைவாந்தர்ததே ஹரி:

விதூய- முற்றிலும் கழுவப்பட்டதும்; தத்-அந்த; அமேயாத்மா- எங்கும் பரவியுள்ள பரமாத்மா; பகவான்-பரம புருஷ பகவான்; தர்மகுப்- தர்மத்தின் காவலர்; விபு:-பரமன்; மிஷத:-பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே; தசமாஸஸ்ய-எல்லா திசைகளிலும் பரவியிருப்பவரின்; தத்ர ஏவ-அந்த கணமே; அந்த-மறைந்துபோனார்; ததே-ஆனார்; ஹரி- பகவான்.

இவ்வாறு குழந்தை கவனித்துக் கொண்டு இருக்கும்பொழுதே, எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும், நேர்மையானவர்களைக் காப்பவரும், எல்லா திசைகளிலும் பரவியிருப்பவரும், காலவெளியின் எல்லைக்கு உட்படாதவருமான பரம புருஷ பகவான் திடீரென்று மறைந்துப்போனார்.

பதம் 1.12.12
தத: ஸர்வ-குணோதர்கே ஸானுகூல- க்ரஹோதயே
ஜக்ஞே வம்ச-தர பாண்டோர் பூய: பாண்டுர் இவௌஜஸா

தத–அதன் பிறகு; ஸர்வ-எல்லா; குண—நல்ல அறிகுறிகள்; உதர்கே-படிப்படியாக வளர்ச்சியடைந்து; ஸஅனுகூல-அனுகூலமான எல்லா; க்ரஹோதயே-கிரகங்களின் நிலை; ஜக்ஞே- பிறந்தார்; வம்ச தர:—வாரிசு; பாண்டோ-பாண்டுவின்; பூய-போன்று இருந்தால்; பாண்டு:இவ-பாண்டுவைப் போலவே; ஒஜஸா-வீரத்தால்.

அதன் பிறகு, இராசி மண்டலத்தின் நல்ல அறிகுறிகள் அனைத்தும் தோற்றுவிக்கப்பட்டதும், வீரத்தில் பாண்டுவைப் போலவே இருக்க போகும் அவரது வாரிசும் பிறந்தார்.

பதம் 1.12.13
தஸ்ய ப்ரீத-மனா ராஜ விப்ரைர் தௌம்ய-க்ருபாதிபி:
ஜாதகம் காரயாம் ஆஸ வாசயித்வா ச மங்களம்

தஸ்ய-அவரது; ப்ரீத-மனா:—திருப்தியடைந்தார்; ராஜ-யுதிஷ்டிர மகாராஜன்; விப்ரை: கற்றறிந்த பிராமணர்களில்; தௌம்ய-தௌம்யர்; க்ருப-க்ருபர்: ஆதிபி:-மற்றும் பிறரும் கூட; ஜாதகம்– குழந்தை பிறந்த பிறகு செய்யப்படும் தூய்மைப்படுத்தும் சடங்குகளில் ஒன்று (ஜாதகம்); காரயாம் ஆஸ—அவர்களை நிறைவேற்றச் செய்தார்; வாசயித்வா-ஓதுவதன் மூலம்: ச-மேலும்: மங்களம்—மங்களகரமான.

பரீட்சித்து மகாராஜனின் பிறப்பால் மிகவும் திருப்தியடைந்த யுதிஷ்டிர மகாராஜன், தூய்மைப்படுத்தும் பிறப்புச் சடங்கை நிறைவேற்றச் செய்தார். தெளம்பரையும், கிருபரையும் கற்றறிந்த பிராமணர்கள் மங்களகரமான மந்திரங்களை ஓதினர்.

பதம் 1.12.14
ஹிரண்யம் காம் மஹீம் க்ராமான்
ஹஸ்தி-அஸ்வான் ந்ருபதிர் வரான்
ப்ராதாத் ஸ்வன்னம் ச விப்ரேப்ய:
ப்ரஜா-தீர்தே ஸ தீர்தவித்

ஹிரண்யம்- தங்கம்; காம் – பசுக்கள்; மஹீம் – நிலம்;க்ராமான்– கிராமங்கள்; ஹஸ்தி-யானைகள்; அஸ்வான்-குதிரைகள்; ந்ருபதி– அரசர்; வரான்— வெகுமானங்கள்; ப்ராதாத்:—தானம் செய்தார்; ஸு–அன்னம்—நல்ல உணவுத் தானியங்கள்; ச-மேலும்; விப்ரேப்ய:—பிராமணர்களுக்கு; ப்ரஜாதீர்தே— ஒரு மகன் பிறந்ததை முன்னிட்டு தான தருமங்கள் செய்யும் சந்தர்ப்பத்தில்; ஸ–அவர்; தீர்தவித்-எப்படி எப்போது, எங்கு செய்வது என்பதை அறிந்தவர்.

ஒரு மகன் பிறந்ததும், எப்படி, எங்கு, எப்பொழுது தானம் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்த அரசர், பிராமணர்களுக்கு தங்கம், நிலம், கிராமங்கள், யானைகள், குதிரைகள் மற்றும் நல்ல உணவுத் தானியங்கள் ஆகியவற்றைப் பரிசளித்தார்.

பதம் 1.12.15
தம் ஊசுர் ப்ராஹ்மணாஸ் துஷ்டா ராஜானம் பரஸ்ரயான்விதம்
ஏஷ ஹி அஸ்மின் ப்ராஜா-தந்தௌ புரூணாம் பௌரவர்ஷப

தம்-அவரை; ஊசு—அழைத்தனர்; பிராஹ்மணா-கற்றறிந்த பிராமணர்கள்; துஷ்டா-மிகவும் திருப்தியடைந்து; ராஜானம்-அரசரிடம்; ப்ரஸ்ரய அன்விதம்- மிகவும் கடமைப்பட்டு; ஏஷ—இந்த; ஹி-நிச்சயமாக; அஸ்மின்— சங்கிலித் தொடரில்; ப்ரஜா-தந்தௌ:—வம்சம்; புரூணாம்:—பூரு வம்சத்தினரின்; பௌரவருஷப:—பூருக்களிலேயே தலையையானவர்.

அரசரின் தான தருமங்களால் மிகவும் திருப்தியடைந்த கற்றறிந்த பிராமணர்கள், அவரை பூருக்களிலேயே தலைமையானவர் என்று அழைத்ததுடன், அவரது புத்திரரும் நிச்சயமாக பூரு வம்சத்தில் வந்தவர்தான் என்பதையும் அவருக்கு அறிவித்தனர்.

பதம் 1.12.16
தைவேனாப்ரதிகாதேன சுக்லே ஸம்ஸ்தாம் உபேயுஷி
ராதோ வோ ‘நுக்ரஹார்தாய விஷ்ணுனா ப்ரபவிஷ்ணுனா

தைவேன-அமானுஷ்யமான சக்தியால்; அப்ரதிகாதேன- தடுக்க முடியாததான அதனால்; சுக்லே-களங்கமற்றவரின்; ஸம்ஸ்தாம்-அழிவு; உபேயஷி-கட்டாயப்படுத்தப்பட்டு; ராத- உயிர்ப்பிக்கப்பட்டார்; வ-உங்களுக்காக; அநுக்ரஹ-அர்தாய:—உங்களுக்கு உதவுவதற்காக; விஷ்ணுனா-எங்கும் பரவியுள்ள பகவானால்; ப்ரபவிஷ்ணுனா-சர்வ சக்தி படைத்தவரால்.


பிராமணர்கள் கூறினர்: உங்களுக்கு மரியாதை காட்டுவதற்காகவே, களங்கமற்றவரான இப்புத்திரன், சர்வசக்தி படைத்தவரும், எங்கும் பரவியிருப்பவரும், பரம புருஷருமான பகவான் ஸ்ரீ விஷ்ணுவால் உயிர்ப்பிக்கப்பட்டார். தடுக்க முடியாததொரு அமானுஷ்யமான ஆயுதத்தினால் அவர் கொல்லப்படும் நிலையில் இருந்தபொழுது அவர் காப்பாற்றப்பட்டார்.

பதம் 1.12.17
தஸ்மான் நாம்னா விஷ்ணு-ராத இதி லோகே பவிஷ்யதி
ந ஸந்தேஹோ மஹா-பாக மஹா-பாகவதோ மஹான்

தஸ்மார்-எனவே: நாம்னா-என்ற பெயரால்; விஷ்ணுராத-பரம புருஷரான விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டவர்; இதி-இவ்வாறக; லோகே-எல்லா கிரகங்களிலும்; பவிஷ்யதி–புகழ் பெறுவார்; ந-இல்லை; ஸந்தேஹ-சந்தேகங்கள்; மஹா-பாக:— மகா பாக்கியவானை; மஹாபாகவத:—பகவானின் முதல்தரமான பக்தர்; மஹான்—எல்லா நற்குணங்களின் தகுதிகளையும் பெற்றிருப்பவர்.

இக்காரணத்திற்காக இக்குழந்தை பரம புருஷராலேயே காப்பாற்றப்பட்டவர் என்று இவ்வுலகில் பிரசித்தி பெறுவார். மகாபாக்கியசாலியே, இக்குழந்தை முதல்தர பக்தராக மாறி, எல்லா நற்குணங்களையும் பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

பதம் 1.12.18
ஸ்ரீ ராஜோவாச
அபி ஏஷ-வம்ஸ்யான் ராஜர்ஷீன் புண்ய-ஸ்லோகான் மஹாத்மன:
அனுவர்திதா ஸ்வித் யாசஸா ஸாது-வாதேன ஸத்தமா:

ஸ்ரீ ராஜ-மிக நல்லவரான அரசர் (யுதிஷ்டிர மகாராஜன்); உவாச-கூறினார்: அபி-இரண்டில் எது; ஏஷ-இந்த; வம்ஸ்யான்-வம்சம்; ராஜர்ஷீன்-புனிதர்களான அரசர்களின்; புண்ய ஸ்லோகான்-பெயரைப் போலவே புண்ணியவானாக; மஹாஆத்மன- எல்லா மகாத்மாக்களும்; அநுவர்திதா—ஆதரவாளர்; ஸ்வித்-அப்படி இருக்குமா; யாசஸா—சாதனைகளால்; ஸாது வாதேன- வாழ்த்துக்களால்; ஸத்தமா-ஓ மகாத்மாக்களே.

மிகவும் நல்லவரான அரசர் (யுதிஷ்டிரர்) வினவினார்: ஓ மகாத்மாக்களே, இச்சிறந்த அரச குடும்பத்தில் தோன்றிய மற்றவர்களைப் போலவே இவரும் ஒரு புனித மன்னராகவும், பக்தியுள்ளவராவும், அவரது சாதனைகளில் புகழுக்கும். பெருமைகளுக்கும் உரியவராகவும்| இருப்பாரா?

பதம் 1.12.19
பிராஹ்மணா ஊசு
பார்த ப்ரஜாவிதா ஸாக்ஷாத் இஷ்வாகுர் இவ மானவ:
ப்ராஹ்மண்ய: ஸத்ய- ஸந்தஸ் ச ராமோ தாசரதிர் யதா

பிராஹ்மணா-நல்ல பிராமணர்கள்: ஊசு-கூறினர்; பார்த- பிருதவின் (குந்தியின்) மகனே; ப்ரஜா-பிறந்தவர்கள்; அவிதா- பராமரிப்பவர்; லாக்ஷாத்-நேரடியாக; இஷ்வாகு இவ-இஷ்வாகு மகாராஜனுக்கு ஒப்பானவர்; மானவ:-மனுபுத்திரரான; ப்ராஹ்மண்ய- பிராமணர்களை மதித்து அவர்களைப் பின்பற்றுபவர்கள்: ஸத்யஸந்த– வாக்களிப்பதில் உண்மையானவர்கள்; ச-மேலும்; ராம-பரம புருஷரான ஸ்ரீ ராமர்; தசாரதி:தசரத மகாராஜனின் புதல்வர்; யதா- அவரைப் போல்.

கற்றறித்த பிராமணர்கள் கூறினர்: பிருதாவின் புதல்வரே, இக்குழந்தை, பிறப்பெடுக்கும் அனைவரையும் பராமரிப்பதில் மனு புத்திரரான இஷ்வாகு மகாராஜனைப் போலவே இருப்பார், பிராமண கொள்கைகளைப் பின்பற்றுவதில், குறிப்பாக வாக்குறுதியை காப்பாற்றுவதில் இவர், தசரத மகாராஜனின் புதல்வரும், பரம புருஷருமாகிய ஸ்ரீ ராமரைப் போலவே இருப்பார்.

பதம் 1.12.20
ஏஷ தாதா சரண்யஸ் ச யதா ஹி ஔசீனர: சிபி:
யசோ விதனிதா ஸ்வானாம் தௌஷ்யந்திர் இவ யஜ்வனாம்

ஏஷ-இக்குழந்தை; தாதா-தானம் செய்பவர்; சரண்ய- சரணடைத்தவரைக் காப்பவர்; ச-மேலும்; யதா-போல்; ஹி—நிச்சயமாக; ஔசீனர:–உசீனரம் என்ற நாடு; சிபி:-சிபி; யச-புகழ்; விதனிதா-பரவச் செய்பவர்; ஸ்வானாம்-உறவினர்களின்; தௌஷ்யந்தி:இவ—துஷ்யந்தரின் மகனான பரதனைப் போல்; யஜ்வனாம்—பல யாகங்களைச் செய்தவர்களில்.

இக்குழந்தை, உசீனர நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சிபிச்சக்கரவர்த்தியைப் போல் ஒரு கொடை வள்ளலாகவும், சரணடைந்தோரைக் காப்பவராகவும் இருப்பார். மேலும் துஷ்யந்த மகாராஜனின் புதல்வரான பரதனைப் போலவே இவரும் பரம்பரைப் பெயரையும், புகழையும் பரப்புவார்.

பதம் 1.12.21
தன்வினாம் அக்ரணீர் ஏஷ துல்யஸ் சார்ஜுனயோர் த்வ்யோ:
ஹுதாச இவ துர்தர்ஷ: ஸமுத்ர இவ துஸ்தர:

தன்வினாம்-பெரும் வில்லாளிகளில்; அக்ரணீ:—தலைவன்; ஏஷ- இக்குழத்தை; துல்ய-சமமானவராக; ச-மேலும்; அர்ஜுனியோ-அர்ஜுனர்களுக்கு; த்வயோ-இருவரில்; ஹுதாச- நெருப்பு; இவ-போல்; துந்தர்ஷ்–தடுக்கமுடியாத; ஸமுத்ர-சமுத்திரம்; இவ-போல்; துஸ்தர-மிஞ்ச முடியாத.

இக்குழந்தை, பெரும் வில்லாளிகளுக்கிடையில் அர்ஜுனைப் போல் திறமைமிக்கவராக இருப்பார். இவர் நெருப்பைப் போல் தடுக்க முடியாதவராகவும் சழுத்திரத்தைப் போல் மிஞ்ச முடியாதவராகவும் இருப்பார்.

பதம் 1.12.22
ம்ருகேந்தர இவ விக்ராந்தோ நிஷேவ்யோ ஹிமவான் இவ
திதிக்ஷுர் வஸுதேவாஸௌ ஸஹிஷ்ணு: பிதராவ் இவ

ம்ருகேந்தர– சிங்கம்; இவ-போல்; விக்ராந்த:—சக்தி வாய்ந்தவராக; நிஷேவ்ய;–புகலிடம் கொள்ளத் தகுதியானவர்; ஹிமவான் –இமயமலைகள்; இவ-போல்; திதிக்ஷு:— பொறுமை; வஸுத-இவ:— பூமியைப் போல்; அஸௌ—குழந்தை; ஸஹிஷ்ணு- சகிப்புத்தன்மை; பிதரௌ—பெற்றோர்கள்; இவ—போல்;

இக்குழந்தை ஒரு சிங்கத்தைப் போல் பலசாலியும், இமயமலைகளைப் போல் புகலிடம் அளிக்க தகுதியுள்ளவருமாவார். இவர் பூமியைப் போல் பொறுமையாகவும், இவரது பெற்றோர்களைப் போல் சகிப்புத்தன்மை கொண்டவராகவும் இருப்பார்.

பதம் 1.12.23
பிதாமஹ ஸம: ஸாம்யே ப்ரஸாதே கிரி சோபம:
ஆஸ்ரய: ஸர்வ பூதானாம் யதா தேவோ ரமாஸ்ரய:

பிதாமஹ-பிதாமகர் அல்லது பிரம்மா; ஸம:-சமமான நன்மை செய்பவர்; ஸாம்யே-விஷயத்தில்; ப்ரஸாதே-தானம் செய்வதில் அல்லது உதார குணத்தில்; கிரிச-சிவபெருமான்; உபம:-சமத்துவத்தில் அவருக்கு ஒப்பானவர்; ஆஸ்ரய:- அடைக்கலம்;ஸர்வ-எல்லா; பூதானாம்- ஜீவராசிகளுக்கும்; யதா-போல்; தேவ:-பரம புருஷரை; ரமா-ஆஸ்ரய:—பரம புருஷ பகவான்.

இக்குழந்தை சமத்துவமான மனநிலையில் பாட்டனார் யுதிஷ்டிரரைப் போல் அல்லது பிரம்மாவைப் போல் இருப்பார். இவர் கைலாசபதியான சிவபெருமானைப் போல் உதாரகுணம் உள்ளவராக இருப்பார். மேலும் லக்ஷ்மி தேவிக்கும் புகலிடமாக உள்ள பரம புருஷரான நாராயணரைப் போல், இவர் அனைவருக்கும் புகலிடமாக இருப்பார்.

பதம் 1.12.24
ஸர்வ ஸத் குண மாஹாத்ம்யே ஏஷ க்ருஷ்ணம் அனுவ்ரத:
ரந்திதேவ இவோதாரோ யயாதிர் இவ தார்மிக:

ஸர்வ ஸத் குண மாஹாத்ம்யே-எல்லா தெய்வீக குணங்களையும் பெற்றுள்ள புகழுக்குரியவர்; ஏஷ– இக்குழந்தை; கிருஷ்ணம்-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல்; அனுவ்ரத-அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்; ரந்திதேவ-ரந்திதேவர்; இவ-போல்; உதார- பெருந்தன்மையில்: யயாதி-யயாதி; இவ-போல்; தார்மிக-மத அனுஷ்டானத்தில்.

இக்குழந்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார் என்பதால், கிட்டத்தட்ட அவருக்கு நிகரானவராகவே இருப்பார். பெருந்தன்மையில் இவர் ரந்திதேவ மகாராஜனின் பெருமைக்கு இணையானவராக இருப்பார். மேலும் மதத்தில் இவர் யயாதி மகாராஜனைப் போன்றிருப்பார்.

பதம் 1.12.25
த்ருத்யா பலிஸம: க்ருஷ்ணே ப்ரஹ்ராத இவ ஸத்க்ரஹ:
ஆஹர்தைஷோ ‘ஸ்வமேதானாம் வ்ருத்தானாம் பர்யுபாஸக:

த்ருத்யா:—பொறுமையால்: பலி-ஸம:—பலி மகாராஜனுக்கு சமமானவராக; க்ருஷ்ணே-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; ப்ரஹ்ராத:—பிரகலாத மகாராஜன்; இவ-போல்; ஸத்க்ரஹ:-பக்தர்; ஆஹர்தா- செய்பவராக; ஏஷ-இக்குழந்தை; அஸ்வமேதானாம்-அஸ்வமேத யாகங்களை; வ்ருத்தானாம்—வயது முதிர்ந்தவர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்களை; பர்யுபாஸக:-பின்பற்றுபவராக.

இக்குழந்தை பலி மகாராஜனைப் போல் பொறுமைமிக்கவராகவும், பிரகலாத மகாராஜனைப் போல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓர் உண்மையான பக்தராகவும், அஸ்வமேத யாகங்களைத் செய்பவராகவும் மற்றும் அனுபவமுள்ள முதியோர்களைப் பின்பற்றுபவராகவும் இருப்பார்.

பதம் 1.12.26
ராஜர்ஷீணாம் ஜனயிதா சாஸ்தா சோத்பத-காமினாம்
நிக்ரஹீதா கலேர் ஏஷ புவோ தர்மஸ்ய காரணாத்

ராஜ-ருஷீணாம்:—ரிஷிகளைப் போன்ற அரசர்கள்; ஜனயிதா— உண்டாக்கியவர்; சாஸ்தா-தண்டிப்பவர்; ச-மேலும்; உத்பத-காமினாம்:—திடீரென முன்னுக்கு வந்தவர்களின்; நிக்ரஹீதா— தொந்தரவு செய்பவன்; கலே:- தொல்லை செய்பவர்களின்; ஏவு- இந்த; புவ:– உலகின்; தர்மஸ்ய-மதத்தின்; காரணாத் — காரணத்தால்.

இக்குழந்தை ரிஷிகளைப் போலுள்ள அரசர்களுக்குத் தந்தையாக இருப்பார். மேலும் இவர் திடீர் முன்னேற்றம் அடைந்தவர்களையும், தொல்லை தருபவர்களையும் தண்டித்து உலக அமைதியையும், தர்மத்தையும் காப்பாற்றுவார்.

பதம் 1.12.27
தக்ஷகாத் ஆத்மனோ ம்ருத்யும் த்விஜ-புத்ரோபஸர்ஜிதாத்
ப்ரபத்ஸ்யத உபஸ்ருத்ய முக்த-ஸங்க: பதம் ஹரே:

தக்ஷகாத்- பாம்பால்; ஆத்மன:-அவரது சொந்த; ம்ருத்யும்— மரணம்; த்விஜ-புத்ர:-ஒரு பிராமண புத்திரன்; உபஸர்ஜிதாத்- அனுப்பப்பட்ட; ப்ரபத்ஸ்யதே-அவரிடம் புகலிடம் கொண்டு; உபஸ்ருத்ய-கேட்டபின்; முக்த-ஸங்க:- எல்லா பற்றிலிருந்தும் விடுபட்டு ; பதம் – பரமபதம்; ஹரே:- பகவானின்.

ஒரு பிராமண புத்திரனால் அனுப்பப்படவிருக்கும் பாம்பின் கடியால் நிகழப் போகும் அவரது மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டபின் அவர் எல்லா பௌதிக பற்றிலிருந்து விடுபட்டு, பரம புருஷரிடம் புகலிடம் கொண்டு, அவரிடம் சரணாகதியடைவார்.

பதம் 1.12.28
ஜிக்ஞாஸிதாத்ம யாதார்த்யோ முனேர் வ்யாஸ ஸுதாத் அஸௌ
ஹித்வேதம் ந்ருப கங்காயாம் யாஸ்யதி அதாகுதோபயம்

ஜிக்ஞாஸித-விசாரணை செய்து; ஆத்மயாதார்த்தய :—ஒருவரது ஆத்மாவைப் பற்றிய சரியான அறிவு; முனே- கற்றறிந்த தத்துவவாதியிடமிருந்து; வ்யாஸ-ஸுதாத்:—வியாசரின் மகன்; அஸௌ – அவர்; ஹித்வா-கைவிட்டு; இதம்– இந்த ஜடப்பற்றை; ந்ருப-ஓ ராஜனே; கங்காயாம்- கங்கை நதிக் கரையில்; யாஸ்யதி- செல்வார்; அதா- நேரடியாக; அகுத-பயம்—பயமற்ற வாழ்வு.

மிகச்சிறந்த தத்துவவாதியாக இருக்கப் போகும் வியாசதேவரின் மகனிடமிருந்து சரியான ஆத்ம அறிவையப் பற்றி விசாரித்த பின், இவர் எல்லா பௌதிக பற்றையும் துறந்து, பயமற்ற ஒரு வாழ்வை அடைவார்.

பதம் 1.12.29
இதி ராஜ்ன உபாதிஷ்ய விப்ரா ஜாதக கோவிதா:
லப்தாபசிதய: ஸர்வே ப்ரதிஜக்மு: ஸ்வகான் க்ருஹான்

இதி- இவ்வாறாக; ராஜ்னே–ராஜனுக்கு; உபாதிஷ்ய- அறிவித்தபின்; விப்ரா-வேதங்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள்; ஜாதக-கோவிதா:–ஜோதிட சாஸ்திரத்திலும், பிறப்புச் சடங்குகளைச் செய்வதிலும் வல்லவர்கள்; லப்த அபசிதய:-ஊதியமாக போதுமான செல்வத்தைப் பெற்றுக் கொண்டவர்கள்; ஸர்வே-அவர்களனைவரும்; ப்ரதிஜக்மு:-திரும்பிச் சென்றனர்; ஸ்வகான்—அவர்களது சொந்த; க்ருஹான்—வீடுகளுக்கு.

இவ்வாறாக ஜோதிட அறிவிலும், பிறப்புச் சடங்கைச் செய்வதிலும் கைதேர்ந்தவர்கள், இக்குழந்தையின் எதிர்கால வரலாற்றைப் பற்றி யுதிஷ்டிர மகாராஜனுக்கு உபதேசித்தனர். பிறகு இதற்குக் கைமாறாக போதுமான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டபின், அவர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களுக்கு திரும்பிச் சென்றனர்.

பதம் 1.12.30
ஸ ஏஷ லோகே விக்யாத: பரீக்ஷித் இதி யதி ப்ரபு:
பூர்வம் திருஷ்டம் அனுத்யாயன் பரீக்ஷேத நரேஷு இஹ

ஸ-அவர்; ஏஷ–இதில்; லோகே-உலகம்; விக்யாத- புகழுக்குரியவராக; பரீக்ஷித்-பரீட்சித்துப் பார்ப்பவர்; இதி- இவ்வாறாக; யத்-என்ன; ப்ரபு:-ராஜனே; பூர்வம்—முன்பு;: திருஷ்டம்—கண்ட; அனுத்யாயன்-இடைவிடாமல் மனதில் சிந்தித்து; பரீக்ஷேத—சோதனை செய்வார்; நரேஷு—ஒவ்வொரு மனிதனையும்; இஹ—இங்கு.

எனவே பிறப்பதற்கு முன் அவர் கண்ட அந்த நபரைத் தேடும் முயற்சியில், அவர் எல்லா மனிதர்களையும் சோதித்துப் பார்க்க வருவார் என்பதால், உலகில் அவர் பரீட்சித் (பரீட்சித்துப் பார்ப்பவர்) என்று புகழப்படுவார். இவ்வாறாக அவர் இடைவிடாமல் பகவானை மனதில் சிந்தித்துக் கொண்டிருப்பார்.

பதம் 1.12.31
ஸ ராஜ-புத்ரோ வவ்ருதே ஆசு சுக்ல இவோடுப:
ஆபூர்யமாண: பித்ருபி: காஷ்டாபிர் இவ ஸோ ‘ன்வஹம்

ஸ-அந்த; ராஜ-புத்ர:—ராஜ புத்திரர்; வவ்ருதே-வளர்ந்தார்; ஆசு-மிக விரைவாக; சுக்லே-வளர்பிறை; இவ-போல்; உடுப-சந்திரன்; ஆபூர்யமாண-செழிப்பாக; பித்ருபி:-காவலர்களான பாட்டனார்களால்; காஷ்டாபி-முழு வளர்ச்ச; இவ-போல்; ஸ–அவர்;அன்வஹம்:—நாள்தோறும்.

சந்திரன் அதன் வளர்பிறையில் நாள்தோறும் வளர்ச்சியடைவதைப் போலவே, ராஜ குமாரரும், (பரீட்சித்து) அவரது காவலர்களான பாட்டனார்களின் முழு கண்காணிப்பின் கீழ், மிகவும் விரைவாக செழிப்புடன் வளரத் துவங்கினார்.

பதம் 1.12.32
யக்ஷமாணோ ‘ஸ்வமேதேன ஞாதி-த்ரோஹ-ஜிஹாஸயா
ராஜா லப்த-தனோ தத்யௌ நான்யத்ர கர-தண்டயோ:

யஷ்யமாண—செய்ய விரும்பி; அஸ்வமேதேன-அஸ்வமேத யாகத்தால்; ஞாதி-த்ரோஹ—உறவினர்களுடனான சண்டை; ஜிஹாஸயா-விடுபடுவதற்கு; ராஜா-யுதிஷ்டிர மகாரஜன்; லப்த-தனு:—செல்வம் திரட்டுவதற்காக; தத்யௌ— அதைப் பற்றி எண்ணினார்; நா-அன்யத்ர:—புறம்பாக; கர-தண்டயோ:—வரி மற்றும் அபராதம்.

இதே சமயத்தில் உறவினர்களுடனான சண்டையினால் விளைந்த பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக, ஓர் அஸ்வமேத யாகத்தை செய்வதைப் பற்றி யுதிஷ்டிர மகாராஜன் யோசித்தார். ஆனால் அபராதங்கள் மற்றும் வரிப்பணம் ஆகியவற்றைத் தவிர கூடுதலான நிதி இல்லாதிருந்ததால், சிறிது நிதியைத் திரட்ட வேண்டுமே என்ற கவலை அவருக்கு உண்டாயிற்று.

பதம் 1.12.33
தத் அபிப்ரேதம் ஆலக்ஷ்ய ப்ராதரோ ‘ச்யுத சோதிதா:
தனம் ப்ரஹீணம் ஆஜஹ்ருர் உதீச்யாம் திசி பூரிச:

தத்-அவரது; அபிப்ரேதம்-மன விருப்பங்களை; ஆலக்ஷ்ய-கண்டு; ப்ராதர-அவரது சகோதரர்கள்; அச்யுத-குறையற்றவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்); சோதிதா-அறிவுறுத்தப்பட்டு; தனம்-தனம்; ப்ரஹீணம்-திரட்ட; ஆஜஸ்ரு- திரட்டினர்; உதீச்யாம்-வடக்கு ; திசி–திசையில்: பூரிச:-போதுமான.

அரசரின் மனமார்ந்த விருப்பத்தைப் புரிந்துகொண்ட அவரது சகோதரர்கள், குறையற்றவரான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அறிவுரைப்படி வட திசையிலிருந்து (மருத்த மகாராஜனால் விட்டுச் செல்லப்பட்ட) போதுமான தனங்களைத் திரட்டினர்.

பதம் 1.12.34
தேன ஸம்ப்ருத ஸம்பாரோ தர்ம புத்ரோ யுதிஷ்டிர:
வாஜிமேதைஸ் த்ரிபிர் பீதோ யக்ஞை: ஸமயஜத் தரிம்

தேன-அச்செல்வத்தைக் கொண்டு; ஸம்ப்ருத- சேகரித்தார்; ஸம்பார –கூட்டுப்பொருட்கள்; தர்ம புத்ர-தரும புத்திரராகிய அரசர்; யுதிஷ்டிர:—யுதிஷ்டிரர்; வாஜிமேதை:—அஸ்வமேத யாகங்களால்; த்ரிபி:– மூன்று தடவைகள்; பீத:- குருட்சேத்திரப் போருக்குப் பின் மிகவும் அச்சங்கொண்டு; யக்ஞை- யக்ஞங்கள்; ஸமயஜத்-நன்கு வழிபட்டார்; ஹரிம்-பரம் புருஷரை.

அச்செல்வங்களால், மூன்று அஸ்வமேத யாகங்களுக்குத் தேவையான பொருட்களை அரசரால் திரட்ட இயலும். இவ்வாறாக குருட்சேத்திர யுத்தத்திற்குப் பின் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுருந்த தரும புத்திரராகிய யுதிஷ்டிர மகாராஜன் பரம புருஷ பகவான் ஸ்ரீ ஹரியை திருப்திப்படுத்தினார்.

பதம் 1.12.35
ஆஹூதோ பகவான் ராஜ்னா யாஜயித்வா த்விஜைர் ந்ருபம்
உவாஸ கதிசின் மாஸான் ஸுஹ்ருதாம் ப்ரிய- காம்யயா

ஆஹூத–அழைக்கப்பட்டு; பகவான்- பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர்; ராஜ்னா- அரசரால்; யாஜயித்வா- செய்யப்பட காரணமாக இருந்தார்; த்விஜை:–கற்றறிந்த பிராமணர்களால்; ந்ருபம்– அரசரின் சார்பாக; உவாஸ–வாழ்ந்தார்; கதிசித்–சில; மாஸான்– மாதங்கள் ; ஸுஹ்ருதாம்–உறவினர்களுக்காக; ப்ரிய- காம்யயா-மகிழ்ச்சியாக.

யாகங்களுக்கு யுதிஷ்டிர மகாராஜனால் அழைக்கப்பட்டிருந்த பரம புருஷரான ஸ்ரீகிருஷ்ணர், அவை தகுதியுள்ள (இருபிறப்பெய்திய) பிராமணர்களால் நடத்தப்படுகின்றனவா என்பதை கவனித்து கொண்டார். அதன் பிறகு, உறவினர்களின் மகிழ்ச்சிக்காக பகவான் சில மாதங்கள் அங்கு தங்கினார்.

பதம் 1.12.36
ததோ ராஜ்னாப்யனுஜ்ஞாத: க்ருஷ்ணயா ஸஹ பந்துபி:
யயௌ த்வாரவதீம் ப்ரஹ்மன் ஸார்ஜுனோ யதுபிர் வ்ருத:

தத-அதன்பிறகு; ராஜ்னா-அரசரால்; அப்யனுஜ்னாத- அனுமதிக்கப்பட்டு; க்ருஷ்ணயா-அத்துடன் திரௌபதியாலும்; ஸஹ–அவர்களுடன்; பந்துபி:-மற்ற உறவினர்கள்; யயௌ– சென்றனர்; த்வாரவதீம்—துவாரகாபுரிக்கு; ,ப்ரஹ்மன்–பிராமணர்களே; ஸ-அர்ஜுன:—அர்ஜுனனுடன்; யதுபி:–யது வம்ச அங்கத்தினர்களால்; வ்ருத:–சூழப்பட்டவராய்.

சௌனகரே, அதன் பிறகு யுதிஷ்டிர மகாராஜன், திரௌபதி மற்றும் பிற உறவினர்கள் ஆகியோரிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட பகவான், அர்ஜுனனாலும், யது வம்சத்தின் மற்ற அங்கத்தினர்களாலும் சூழப்பட்டவராக துவாரகாபுரியை நோக்கிக் கிளம்பினார்.


ஸ்ரீமத் பாகவதம் முதல் காண்டத்தின் “பரீட்சித்து மகாராஜனின் பிறப்பு” எனும் தலைப்பைக் கொண்ட பன்னிரண்டாம் அத்தியாத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare