அத்தியாயம் – 2
கர்ப்பத்திலிருந்த பகவானுக்கு தேவர்களின்
பிரார்த்தனைகள்
பதங்கள் 10.2.1 — 10.2.2 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார். மகத ராஜனான ஜராஸந்தனுடைய பாதுகாப்பின் கீழ், சக்திவாய்ந்த கம்சன், யது வம்ச அரசர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். இவ்விஷயத்தில் அவன், பிரலம்பன், பகன், சாணூரன், திருணாவர்தன், அகாசுரன், முஷ்டிகன், அரிஷ்டன், துவிவதன், பூதனை, கேசி, தேனுகன், பாணாசுரன், நரகாசுரன் மற்றும் பூமியிலுள்ள பல அசுர மன்னர்கள் ஆகியோரின் உதவியைப் பெற்றான்.
பதம் 10.2.3 : அசுர மன்னர்களால் துன்புறுத்தப்பட்ட யாதவர்கள் தங்களுடைய சொந்த ராஜ்யங்களை விட்டு, குரு, பாஞ்சாலம், கேகயம், சால்வம், விதாபம், நிஷதம், விதேகம், மற்றும் கோசலம் முதலான நாடுகளில் புகுந்தனர்.
பதங்கள் 10.2.4 — 10.2.5 : அவர்களது உறவினர்களில் சிலர் மட்டும் கம்சனுக்குக் கட்டுப்பட்டு அவனுக்குச் சேவை செய்து கொண்டிருந்தார்கள். உக்ரசேனரின் மகனான கம்சன், தேவகியின் ஆறு மகன்களையும் கொன்ற பிறகு, கிருஷ்ணரின் ஓர் அம்சம் ஏழாவது குழந்தையாக அவளது கர்ப்பத்தில் புகுந்து, அவளது இன்பத்தையும், துன்பத்தையும் வளர்த்தது. அந்த அம்சம் மாமுனிவர்களால் அனந்தன் என்று புகழப்படுகிறது. அவர் கிருஷ்ணரின் இரண்டாவது சதுரங்க-அம்சத்தைச் சேர்ந்தவராவார்.
பதம் 10.2.6 : தமது அந்தரங்க பக்தர்களான யாதவர்களைக் கம்சனின் தாக்குதலிலிருந்து காப்பதற்காக பரம ஆத்மாவான (விஸ்வாத்மா) பரமபுருஷர் யோக-மாயையிடம் பின்வருமாறு உத்தரவிட்டார்.
பதம் 10.2.7 : பகவான் யோகமாயைக்கு உத்தரவிட்டார்: தேவி, அகில லோகங்களாலும் பூஜிக்கப்படும் என் சக்தியே, அனைத்து ஜீவராசிகளுக்கும் மங்களம் அருளும் சுபாவம் கொண்டவளே, பல இடையர்களும், அவர்களது மனைவிகளும் வாழும் ஆயர்பாடிக்குச் செல், பல பசுக்களால் அழகு பெற்று விளங்கும் அந்த இடத்திலுள்ள நந்த மகாராஜனின் வீட்டில், வசுதேவரின் மனைவியான ரோகிணி வசிக்கிறாள். வசுதேவரின் பிற மனைவிகள் கூட கம்சனுக்கஞ்சி மாறுவேடத்தில் அங்கு வசித்து வருகின்றனர். அங்கு நீ செல்ல வேண்டும்.
பதம் 10.2.8 : தேவகியின் கருப்பைக்குள், சங்கர்ஷணர் அல்லது சேஷன் எனப்படுபவர் பூரண அம்சமாக இருக்கிறார். அவரைச் சிரமமின்றி ரோகிணியின் கருப்பைக்கு மாற்றிவிடு.
பதம் 10.2.9 : சர்வ மங்களம் பொருந்திய யோகமாயையே, நான் பிறகு என்னுடைய முழுமையான ஆறு ஐசுவரியங்களுடன் தேவகியின் மகனாகத் தோன்றுவேன். நீ நந்த மகாராஜனின் மனைவியான, தாய் யசோதையின் மகளாகத் தோன்றுவாய்.
பதம் 10.2.10 : சாதாரண மனிதர்கள், மிருக பலிகளால் பல்வேறு பொருட்களுடன் உன்னை ஆடம்பரமாக வழிபடுவார்கள். ஏனெனில், எல்லோருடைய பௌதிக ஆசைகளையும் நிறைவேற்றுவதில் நீ உயர்ந்தவளாக இருக்கிறாய்.
பதங்கள் 10.2.11 — 10.2.12 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு கூறி மாயாதேவியை ஆசீர்வதித்தார்: பூமியிலுள்ள வெவ்வேறு இடங்களில், துர்கை, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகா, கிருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா, நாராயணி, ஈசாணி, சாரதா மற்றும் அம்பிகா முதலான வெவ்வேறு நாமங்களை மக்கள் உனக்குச் சூட்டுவார்கள்.
பதம் 10.2.13 : ரோகிணியின் புதல்வர், தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்பட்டதால் சங்கர்ஷணர் என்றும் புகழப்படுவார். கோகுல வாசிகளையெல்லாம் திருப்திப்படுத்தும் திறமை உடையவராக இருப்பதால் அவர் ‘ராம’ என்று அழைக்கப்படுவார். அவருக்குள்ள மிகவும் அதிகமான தேகபலத்தின் காரணத்தால் அவர் பலபத்ரா என்று அழைக்கப்படுவார்.
பதம் 10.2.14 : பரமபுருஷரால் இவ்வாறு கட்டளையிடப்பட்ட யோகமாயை, உடனே ஓம் எனும் வேத மந்திரத்தை உச்சரித்து, ‘அப்படியே ஆகட்டும்‘ என்று உறுதி கூறி அதற்குச் சம்மதித்தாள். இவ்விதமாக அவள் பகவானை வலம் வந்து, பூமியிலுள்ள நந்த கோகுலம் என்ற இடத்திற்குச் சென்று, உத்தரவிடப்பட்டபடி அனைத்தையும் செய்து முடித்தாள்.
பதம் 10.2.15 : தேவகியின் குழந்தை, யோகமாயையால் ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்பட்டதும், தேவகியின் கர்ப்பம் கலைந்துவிட்டது போல் காணப்பட்டது. இவ்விதமாக “ஐயோ! தேவகி குழந்தையை இழந்து விட்டாளே!” என்று அரண்மனை வாசிகள் அனைவரும் புலம்பினர்.
பதம் 10.2.16 : இவ்வாறாக எல்லா ஜீவராசிகளிலும் பரமாத்மாவாக இருப்பவரும், தமது பக்தர்களின் பயத்தையெல்லாம் போக்குபவருமான பரமபுருஷர், முழு ஐசுவரியங்களுடன் வசுதேவரின் மனதில் புகுந்தார்.
பதம் 10.2.17 : பரமபுருஷரின் உருவத்தைத் தமது இதய மத்தியில் சுமக்கும் அதே சமயம், உன்னதமாகப் பிரகாசிக்கும் பகவானின் ஒளியை வசுதேவர் தாங்கியதால், அவர் சூரியனைப் போல் பிரகாசிப்பவரானார். எனவே அவர் காண்பதற்கும், புலன் உணர்வின் மூலமாக அணுகுவதற்கும் மிகவும் கடினமானவரானார். உண்மையில், கம்சனைப் போன்ற பயங்கரமானவர்களுக்கும், மற்றெல்லா ஜீவராசிகளுக்கும் கூட அவர் அணுகப்பட முடியாதவராகவும், காணப்பட முடியாதவராகவும் இருந்தார்.
பதம் 10.2.18 : அதன்பிறகு, எல்லாப் பிரபஞ்சங்களுக்கும் மங்களம் அளிப்பவரும், பூரண ஐசுவரியங்கள் உடையவருமான பரமபுருஷர், அவரது அம்சங்களால் தொடரப்பட்டவராய், வசுதேவரின் மனதிலிருந்து தேவகியின் மனதிற்கு மாற்றப்பட்டார். இவ்வாறாக, வசுதேவரால் தன்னிடம் சேர்ப்பிக்கப்பட்டவரும், அனைவருக்கும் மூல உணர்வாக இருப்பவரும், எல்லாக் காரணங்களுக்கும் காரணமானவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைத் தன் இதய மத்தியில் தேவகி தரித்தாள். உதிக்கும் சந்திரனைத் தாங்குவதால் கீழ்வானம் அழகு பெற்று விளங்குவதுபோல், தேவகியும் அழகு பெற்று விளங்கினாள்.
பதம் 10.2.19 : கம்சனின் வீட்டில் சிறைப்பட்ட தேவகி, சகல காரணங்களுக்கும் காரணமும், உலகிற்கெல்லாம் உறைவிடமுமாகிய பரமபுருஷருக்கு, உறைவிடமானாள். சிறைப்பட்டிருந்த காரணத்தால், குடத்தில் வைத்த விளக்குபோலும், அறிவைப் பெற்றிருந்தும் மனித சமூகத்தின் நன்மைக்காக அதை உலகிற்கு வினியோகிக்க முடியாத வஞ்சகனிடத்தில் சேர்ந்த கல்விபோலும் தேவகி காணப்பட்டாள்.
பதம் 10.2.20 : தேவகியின் கர்ப்பத்தில் பரமபுருஷர் இருந்ததால், தான் சிறைப்பட்டிருந்த இடம் முழுவதையும் அவள் ஒளிமயமாக்கினாள். அவள் மகிழ்ச்சியாகவும், தூய்மையாகவும், புன்னகையுடனும் விளங்குவதைக் கண்ட கம்சன் பின்வருமாறு எண்ணினான், “இப்பொழுது அவளுடைய கர்ப்பத்தில் இருக்கும் பரமபுருஷரான விஷ்ணு என்னைக் கொல்லப்போவது நிச்சயம், ஏனெனில் இதற்குமுன் தேவகி இவ்வளவு பிரகாசமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதேயில்லை”.
பதம் 10.2.21 : கம்சன் எண்ணினான்: இப்பொழுது என் கடமையென்ன? தமது நோக்கத்தை (பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்) அறிந்துள்ள பரமபுருஷர் அவரது வீரியத்தைக் கைவிடமாட்டார். தேவகி ஒரு பெண்ணாகவும், என் தங்கையாகவும் இருப்பதுடன், இப்பொழுது கர்ப்பவதியாகவும் இருக்கிறாள். அவளை நான் கொன்றால், என் கீர்த்தியும், செல்வமும், ஆயுளும் அழிக்கப்பட்டுவிடும் என்பதில் ஐய்யமில்லை.
பதம் 10.2.22 : மிகவும் கொடூரமான ஒருவன் உயிர்வாழும் பொழுதே இறந்துவிட்டவனாகக் கருதப்படுகிறான். ஏனெனில் அவன் உயிர்வாழும் பொழுதும், இறந்த பிறகும், எல்லோரும் அவனைத் தூற்றுவார்கள். தேகாபிமானத்திலுள்ள ஒருவன் இறந்தபிறகு, அந்ததமம் என்ற நரகத்திற்கு அனுப்பப்படுவான் என்பது நிச்சயம்.
பதம் 10.2.23 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு நிதானமாக யோசித்த கம்சன், பரமபுருஷரிடம் உள்ள விரோதத்தைத் தொடர உறுதி கொண்டிருந்தபோதிலும், தன் தங்கையைக் கொல்லும் பாதகச் செயலிலிருந்து விலகியிருந்தான். பகவான் பிறக்கும்வரை காத்திருந்து பிறகு தேவையானதைச் செய்வோம் என்று அவன் முடிவுசெய்தான்.
பதம் 10.2.24 : தன் அரியாசனத்திலோ ஒய்வறையிலோ அமர்ந்திருக்கும் பொழுதும், தன் படுக்கையில் படுத்திருக்கும் பொழுதும், உண்ணும் பொழுதும், உறங்கும் பொழுதும், பூமியில் சஞ்சரிக்கும் பொழுதும், உண்மையில் எந்த இடத்தில் இருந்தபொழுதும், கம்சன் தன் பகைவரும், பரமபுருஷருமான ரிஷீகேசரை மட்டுமே கண்டான். அதாவது சர்வ வியாபகமுடைய தன் எதிரியைப் பற்றியே சிந்தித்த கம்சன், அனுகூலமற்ற முறையில் கிருஷ்ண உணர்வை உடையவனானான்.
பதம் 10.2.25 : நாரதர், தேவலர் மற்றும் வியாசர் போன்ற மாமுனிவர்களாலும், இந்திரன், சந்திரன் மற்றும் வருணன் போன்ற பிற தேவர்களாலும் பின் தொடரப்பட்ட பிரம்மதேவரும், சிவபெருமானும் கண்ணுக்குத் தெரியாமல் தேவகியின் அறைக்கு வந்து, அனைவருக்கும் அருள்பாலிப்பவரான பரமபுருஷரை மரியாதையுடன் வணங்கி, அவரை மகிழ்விப்பதற்காக அவரைத் துதித்தனர்.
பதம் 10.2.26 : தேவர்கள் பின்வருமாறு துதி செய்தனர்: பகவானே! உங்களால் முடிவு செய்யப்படுவன எல்லாம் முற்றிலும் சரியானவையும், யாராலும் தடுக்க முடியாதவையுமாகும். எனவே எப்பொழுதும் பரிபூர்ணமாக விளங்கும் உங்களுடைய சபத்திலிருந்து நீங்கள் விலகுவதேயில்லை. பிரபஞ்சத் தோற்றத்தின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் உங்கள் கை இருப்பதால், நீங்கள் பரம சத்தியமாவீர், உண்மையில், சத்திய சீலராக இல்லாத ஒருவரால் உங்களுடைய அனுகிரகத்தைப் பெறமுடியாது என்பதால், அதைக் கபடமுள்ளவர்களால் அடைய முடியாது, படைப்பிலுள்ள எல்லாப் பொருட்களிலும் நீங்கள் இயக்கச் சக்தியாக, நிஜ உண்மையாக விளங்குகிறீர்கள். எனவேதான் நீங்கள் அந்தர்யாமீ (அகச்சக்தி) எனப்படுகிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் சமமானவர். உங்களுடைய உபதேசங்கள் எல்லாக் காலங்களிலும் அனைவருக்கும் பொருந்தக் கூடியனவாகும். எல்லா உண்மைகளுக்கும் நீங்களே ஆரம்பம். எனவே நாங்கள் வணக்கத்துடன் உங்களிடம் சரணடைகிறோம். எங்களைக் காத்து அருள்புரிய வேண்டும்.
பதம் 10.2.27 : உடலை (மொத்த உடலும், தனிப்பட்ட உடலும் ஒரே கூட்டுப் பொருட்களால் ஆனவை என்பதால்), “ஆதி விருட்சம்” (மூலமரம்) என்று அழைக்கலாம். நிலமெனும் ஜட இயற்கையை முழுமையாகச் சார்ந்துள்ள இம்மரத்திலிருந்து இருவகையான பழங்கள் வருகின்றன. ஒன்று இன்பம் மற்றது துன்பம். மரத்திற்குக் காரணம், அதன் மூன்று வேர்களாக உள்ள சத்வம், ரஜஸ், தமஸ் எனும் மூன்று ஜட இயற்கைக் குணங்களுடன் உள்ள சம்பந்தமாகும், தேக சுகத்திற்கு நான்கு சுவைகள் உள்ளன—மதப்பற்று, பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு மற்றும் மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு). இவை ஆறு சூழ்நிலைகளுக்கு மத்தியில், ஜந்து, அறிவுப் புலன்களால் அறியப்படுகின்றன. அந்த ஆறு சூழ்நிலைகள் வருத்தம், மாயை, முதுமை, மரணம், பசி மற்றும் தாகம் என்பனவாகும். மரத்தை மூடியுள்ள மரப்பட்டையைப் போல் உள்ள ஏழு உறைகள், தோல், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, எலும்புத் தசை மற்றும் விந்து என்பவையாகும். மேலும் மரத்தின் எட்டு கிளைகளாக இருப்பவை. ஐந்து ஸ்தூலப் பொருட்களும், மூன்று சூட்சுமப் பொருட்களுமாகும்—மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் பொய் அகங்காரம். மரமெனும் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. கண்கள், காதுகள், நாசித் துவாரங்கள், வாய், மலத்துவாரம் மற்றும் புறப்பாலுறுப்புகள், மேலும் பத்து இலைகள், உடலிலுள்ள பத்து காற்றுகளாகும், மரமெனும் இவ்வுடலில் இரு பறவைகள் உள்ளன. ஒன்று தனிப்பட்ட ஆத்மா, மற்றது பரமாத்மா.
பதம் 10.2.28 : பகவானே! பலவிதமான படைப்புக்களுடன் மூல மரமாகத் தோன்றியுள்ள இந்த ஜட உலகிற்குத் தாங்களே மூல பிறப்பிடமாவீர். இந்த ஜட உலகைக் காப்பவரும் தாங்களே. அழிவுக்குப்பின் தங்களுக்குள்ளேயே அனைத்தும் பரிபாலிக்கப்படுகின்றன. உங்களுடைய புறச்சக்தியால் மறைக்கப்பட்டுள்ளவர்களால் இத்தோற்றத்திற்குப் பின்னால் நீங்களிருப்பதைக் காண முடியாது. இவர்களுடைய பார்வை கற்றறிந்த பக்தர்களுடைய பார்வையல்ல.
பதம் 10.2.29 : பகவானே! எப்பொழுதும் முழு அறிவுடன் விளங்கும் தாங்கள், எல்லா ஜீவராசிகளுக்கும் நல்லதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதற்காக, பௌதிக சிருஷ்டியிலிருந்து வேறுபட்ட பல்வேறு உன்னத அவதாரங்களில் தோன்றுகிறீர்கள். இத்தகைய அவதாரங்களில் தோன்றும் பொழுது, சிறந்த சமயப் பற்றுள்ள பக்தர்களுக்கு நீங்கள் இன்பமளிக்கிறீர்கள், பக்தரல்லாதவர்களை அழித்து விடுகிறீர்கள்.
பதம் 10.2.30 : கண்களையுடைய பகவானே, எல்லா உலகிற்கும் உறைவிடமாகிய உங்களுடைய தாமரைப் பாதங்களில் மனதைப் பதித்து, அப்பாதங்களை அறியாமைக் கடலைக் கடப்பதற்குரிய படகாக ஏற்றுக் கொள்வதன் மூலமாக ஒருவன் மகாஜனங்களின் (சிறந்த ஞானிகள், முனிவர்கள் மற்றும் பக்தர்களின்) அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவனாகிறான். இந்த எளிய முறையைக் கொண்டு ஒரு கன்றின் குளம்படியைச் சுலபமாக கடந்துவிடுவது போல், அறியாமைக் கடலை ஒருவரால் கடந்து விட முடியும்.
பதம் 10.2.31 : பகவானே! பிரகாசிக்கும் சூரியனை ஒத்த நீங்கள் உங்களுடைய பகதர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கின்றீர். எனவே நீங்கள் ஒரு கற்பக மரம் (வாஞ்சா-கல்பதரு) என்று அறியப்படுகிறீர்கள். ஆசாரியர்கள் பயங்கரமான அறியாமைக் கடலைக் கடப்பதற்கு உங்களுடைய பத்ம பாதங்களில் முழுமையாகச் தஞ்சமடைந்து, பிறவிக் கடலைக் கடக்கும்பொழுது, எந்த முறையினால் அவர்கள் கடந்தனரோ அதை மண்ணுலகிலேயே விட்டுச் செல்கின்றனர். உங்களுடைய பிற பக்தர்களிடம் நீங்கள் மிகவும் கருணை கொண்டிருப்பதால், அவர்களுக்கு உதவும் பொருட்டு இம்முறையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.
பதம் 10.2.32 : (பகவானின் தாமரைப் பாதங்களில் எப்பொழுதும் புகலிடம் தேடும் பக்தர்கள் ஒருபுறமிருக்க, பக்தரல்லாதவர்களும் முக்தியடைவதற்கு வேறுபட்ட முறைகளை ஏற்றுக்கொண்டுள்ள மற்றவர்களும் உள்ளனர். இவர்கள் கதி என்னவாகும் என்று ஒருவர் கேட்கக்கூடும். இக்கேள்விக்குப் பதிலாக பிரம்மதேவரும், பிற தேவர்களும் இவ்வாறு கூறினர்:) தாமரைக்கண்களையும் உடைய பகவானே, மிக உயர்ந்த நிலையை அடையக் கடுந்தவங்களையும், விரதங்களையும் ஏற்றுக் கொண்டுள்ள பக்தரல்லாதவர்கள், தாங்கள் முக்தியடைந்துவிட்டதாக எண்ணிக் கொண்ட போதிலும், அவர்களுடைய புத்தி தூய்மையற்றதாகவே உள்ளது. உங்களுடைய தாமரைப் பாதங்களை அவர்கள் அலட்சியப்படுத்துவதால் உயர்ந்த நிலையில் இருப்பதாக மனக்கற்பனை செய்யும் தங்களுடைய நிலையிலிருந்து அவர்கள் கீழே விழுகின்றனர்.
பதம் 10.2.33 : ஓ மாதவா, ஸ்ரீதேவியின் பதியாகிய பரமபுருஷரே, உங்களிடம் பூரண அன்பு கொண்டுள்ள பக்தர்கள் சிலசமயங்களில் பக்தி மார்க்கத்திலிருந்து விழ நேர்ந்தாலும், அவர்களை நீங்கள் காப்பாற்றுவதால், அவர்கள் பக்தரல்லாதவர்களைப் போல் வீழ்வதில்லை. இவ்வாறாக அவர்கள் எதிரிகளின் தடைகளை அச்சமின்றிக் கடந்து, பக்தித் தொண்டில் தொடர்ந்து முன்னேறுகின்றனர்.
பதம் 10.2.34 : பகவானே, உலகைப் பராமரிக்கும் காலத்தில், ஜட இயற்கைக் குணங்களுக்கு அப்பாற்பட்ட பல உன்னத உடல்களை தாங்கள் வெளிப்படுத்துகிறீர்கள். இவ்வாறு தோன்றும்பொழுது, வேதச் சடங்குகள், அஷ்டாங்க-யோகம், தவ விரதங்கள் மற்றும் ஆழ்ந்த, நிலையான சமாதி போன்ற வேதச் செயல்களை இயற்றும் முறையைப் போதிப்பதன் மூலமாக ஜீவன்களுக்கு எல்லா நல்லாசிகளையும் நீங்கள் அருளுகிறீர்கள். இவ்வாறாக வேதக் கொள்கைகளால் நீங்கள் ஆராதிக்கப்படுகிறீர்கள்.
பதம் 10.2.35 : எல்லாக் காரணங்களுக்கும் காரணமான பகவானே, உங்களுடைய உன்னத உடல் ஜட இயற்கைக் குணங்களுக்கு மேற்பட்டதாக இல்லாதிருக்குமானால், ஜடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாட்டை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. ஜடஇயற்கையை ஆளும் உங்களது உன்னத உருவின் இருப்பால் வசீகரிக்கப்பட்டாலொழிய, உங்களது உன்னத இயற்கையை அறிவது மிகக் கடினம்.
பதம் 10.2.36 : பகவானே! வெறும் மனக் கற்பனையில் ஈடுபடுபவர்களால் உங்களுடைய உன்னத நாமமும், உருவமும் அறியப்படுவதில்லை. பக்தித்தொண்டால் மட்டுமே உங்களுடைய நாமம், ரூபம் மற்றும் குணங்கள் ஆகியவற்றை அறிய முடியும்.
பதம் 10.2.37 : உங்களுடைய தாமரைப் பாதங்களில் தங்களுடைய மனங்களை முழுமையாகப் பதித்துள்ளவர்களும், உன்னதமான உங்களுடைய நாம, ரூபங்களைப் பற்றி இடையறாது கேட்டு, பாடி, ஆழ்ந்து சிந்திப்பவர்களும், பிறர் அவற்றை நினைவுகூறும்படிச் செய்பவர்களுமான பக்தர்கள், பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருக்கும் பொழுதுகூட உன்னத படித்தரத்தில் நிலை பெற்றவர்களாக உள்ளனர். எனவே அவர்களால் பரமபுருஷரை அறிய முடியும்.
பதம் 10.2.38 : பகவானே, இந்த பூமியிலுள்ள பெரிய அசுர பாரம் உங்களுடைய தோற்றத்தால் உடனே அகற்றப்பட்டு விடுகிறது. எனவே நாங்கள் பாக்கியசாலிகள். உண்மையில், உங்களுடைய தாமரைப் பாதங்களை அலங்கரிக்கும் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகிய சின்னங்களை, இம்மண்ணுலகிலும், சுவர்க்க லோகங்களிலும் எங்களால் காண முடியும் என்பதால், நாங்கள் பாக்கியசாலிகள் என்பதில் ஐய்யமில்லை.
பதம் 10.2.39 : பரமபுருஷரே, நீங்கள் கர்ம பந்தத்தினால் இவ்வுலகில் தோன்றும் ஒரு சாதாரண ஜீவராசியல்ல. எனவே, இவ்வுலகில் நீங்கள் தோன்றுவதற்கு அல்லது பிறப்பதற்கு, உங்களுடைய இன்பச் சக்தியைத் (லீலையை) தவிர வேறு காரணமில்லை. அதைப்போலவே, உங்களுடைய ஒரு பாகமாக உள்ள ஜீவராசிகள், உங்களது புறச்சக்தியினால் நடத்தப்படும்பொழுது தவிர, பிறப்பு, இறப்பு, முதுமை போன்ற துன்பங்களுக்கு ஆளாகவேண்டிய காரணமில்லை.
பதம் 10.2.40 : பரமபுருஷரே! உங்களது கருணையினால் உலகைக் காப்பாற்றுவதற்காக முன்பு நீங்கள் மீனாகவும், குதிரையாகவும், ஆமையாகவும், நரசிம்மதேவராகவும், பன்றியாகவும், அன்னப் பறவையாகவும், பகவான் இராமசந்திரராகவும், பரசுராமராகவும், தேவராகவும் மற்றும் வாமன தேவராகவும் அவதாரங்களை ஏற்றீர்கள். இப்பொழுது உங்களுடைய கருணையினால் இவ்வுலகிலுள்ள தொல்லைகளைக் குறைக்க மீண்டும் எங்களை காப்பாற்றி அருளுங்கள் யாதவ சிரேஷ்டரே, கிருஷ்ணா நாங்கள் மரியாதையுடன் எங்களுடைய வணக்கங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
பதம் 10.2.41 : தாயே தேவகி, உங்களுடைய நல்லதிர்ஷ்டத்தாலும், எங்களுடைய நல்லதிர்ஷ்டத்தாலும், பரமபுருஷர் பலதேவரைப் போன்ற அவரது எல்லா அம்சங்களுடனும் இப்பொழுது உங்களுடைய கர்ப்பத்தில் தோன்றியிருக்கிறார். உங்களது நித்திய புதல்வரான கிருஷ்ணர், யது வம்சம் முழுவதற்கும் காவலராக விளங்குவார்.
பதம் 10.2.42 : இவ்வாறு பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவிடம் பிரார்த்தனைகளைச் செய்தபின், பிரம்மதேவரையும், சிவபெருமானையும் தலைமையாகக் கொண்ட எல்லா தேவர்களும், சுவர்க்க லோகங்களில் உள்ள அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்பினார்.